கள்ளக்குறிச்சி எம்எல்ஏவுக்கு இனி முட்டு கொடுக்க முடியாது.. தவெக சப்போட்டரான நடிகர் ஆதங்க வீடியோ
சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா விவகாரம் இப்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரிய விவாதமாக மாறி இருக்கிறது. கள்ளக்குறிச்சி தொகுதி தமிழக வெற்றி கழக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது ஆட்சியருக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இதை மறுத்து எம்எல்ஏ விளக்கம் கொடுத்த நிலையில், இப்போது மாவட்ட ஆட்சியர் காவல் துறையில் புகார் அளித்திருப்பதாக வெளியாகி உள்ள செய்தி, விவாகரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது.
சீரியல் நடிகர் அருண் வீடியோ
இதற்கிடையில் இதுவரைக்கும் தவெக கட்சிக்கும், கள்ளக்குறிச்சி எம்எல்ஏவுக்கும் ஆதரவாக பேசி வந்த சீரியல் நடிகர் அருண் ராஜன் வெளியிட்டுள்ள இன்ஸ்டா வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அதில், "கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாசமாக வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பியதாக ஒரு மாதமாகவே பேசப்பட்டு வருகிறது. ஆனால் யாரும் புகார் கொடுக்கவில்லை. அப்போது இந்த குற்றச்சாட்டுகளை எம்எல்ஏ மறுத்தார்.
தன்மீதும் கட்சி மீதும் அவதூறு பரப்பப்படுவதாக அவர் விளக்கம் கொடுத்திருந்தார். அதற்கு பிறகும் கலெக்டர் சார்பாக எந்த புகாரும் கொடுக்கவில்லை. இதனால் இந்த விவகாரம் தொடர்பாக நம்ம தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியது. அதில் 7 நாட்களுக்குள் பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும், தொடர்புடைய டிஜிட்டல் ஆதாரங்களை பாதுகாத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறது. இந்த சூழலில் மாவட்ட ஆட்சியர் பத்மஜா எம்எல்ஏ மீது காவல்துறையில் புகார் அளித்திருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது.

இனி முதல்வர் விஜய் எடுக்கும் முடிவு
இதை பார்க்கும் போது நம்மால் இதற்கு மேல் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ தப்பு பண்ணவில்லை என்று சொல்ல முடியாது, அவருக்கு இனி சப்போர்ட்டும் பண்ண முடியாது. நம்ம அண்ணன் முதல்வர் விஜய் பெண்களுக்கு சப்போர்ட் ஆகத்தான் எப்போதுமே இருப்பார். பெண்களிடம் தவறாக நடந்து கொள்பவர்களை அண்ணன் எப்போதுமே மன்னிக்க மாட்டார். மக்களுக்கு பிரதிநிதியாக இருக்க வேண்டிய ஒரு எம்எல்ஏ இது போன்ற செயலில் ஏன் ஈடுபட்டார்? எப்படி ஈடுபட்டார்? என்று சத்தியமாக தெரியவில்லை. ஆனால் இதற்கு அண்ணன் சரியாக நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மட்டும் எங்களுக்கு இருக்கிறது" என்று அந்த வீடியோவில் அருண் ராஜன் பேசியிருக்கிறார்.
முதல்வர் மீது நம்பிக்கை
இதில் கவனிக்க வேண்டியது, நடிகர் அருண் ஆரம்பத்தில் இருந்து தவெகவிற்கு சப்போர்ட்டாகவே பேசி வந்தார். ஆனால் இப்போது கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது வந்த புகாரை பார்த்து இனி இந்த விவாகரத்தில் நாம முட்டுக் கொடுக்க முடியாது என்பது போல பேசி இருப்பதால், இது கவனத்தை ஈர்த்து வருகிறது. அதே சமயம் முதல்வர் விஜய் பெண்களுக்கு ஆதரவாக இருப்பார் என்றும் இந்த விவாகரத்தில் சரியான நடவடிக்கை எடுப்பார் என்றும் நம்பிக்கையோடு அவர் பேசி இருக்கிறார்.
குழப்பத்தில் தொண்டர்கள்
அவரின் இந்த பேச்சு விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக ஆதரவாளர்கள் மத்தியில் விவாதிக்கப்படுகிறது. ஒரு பக்கம் கட்சியை சார்ந்த எம்எல்ஏ மீதான குற்றச்சாட்டு என்பதால், அவருக்கு ஆதரவாக நிற்க வேண்டுமா? என்ற கேள்வி பலருக்கு இருக்கிறது. இன்னொரு பக்கம், ஒரு பெண் மாவட்ட ஆட்சியர் புகார் அளித்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், கட்சி என்ற வட்டத்தை தாண்டி நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்று கருத்தையும் பலரும் சொல்லி வருகின்றனர்.



Click it and Unblock the Notifications
