கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை தகுதிநீக்கம் செய்ய முடியாதா? தேர்தலை சந்திக்க பயமா? விஜய்யை கேள்விகளால் துளைத்த சீமான்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷை தகுதிநீக்கம் செய்துவிட்டு மறு தேர்தலை சந்திக்க வேண்டியது தானே.. ஏன் தேர்தலை சந்திக்க அவ்வளவு பயமா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய்க்கு கேள்வி எழுப்பியுள்ளார். தூய சக்தி என சொல்கிறார்கள், ஆனால் மறுதேர்தல் நடத்த துணிவு இல்லை என்றால் நீங்கள் என்ன பெரிய ஹீரோ.. பெரிய மாஸ் லீடர்.. எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட குழந்தைகள் தின அட்டையில் நேருவின் பெயர், படம் இடம்பெறாதது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "நேரு இல்லைன்னா என்ன பொட்டு மாமா இருக்கிறாரே" என பதிலளித்தார்.

Kallakurichi TVK MLA why not disqualified afraid of facing an election Seeman asks Vijay

விஜய்யிடம் போய் கேளுங்க

திருச்சி விமான நிலையத்தில் வைத்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். துணை சபாநாயகர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் விவகாரம், மேகதாது அணை கட்டுவதாக கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமார் கூறியது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு சீமான் பதில் அளித்து கூறியதாவது:-

என்கிட்ட ஏன் கேக்குறீங்க.. அந்த மாநில முதல்வர் டிகே சிவக்குமார் மேகதாது அணை கட்டியே தீருவோம் என்று சொல்கிறார் என்றால், நீங்கள் இந்த மாநில முதல்வர் என்ன பதில் சொல்கிறார் என இவரிடம் (விஜய்) போய் கேளுங்கள்.. இதற்கு என்ன பதில் இருக்கிறது. இந்த மாநில முதல்வரிடம் போய் கேளுங்கள்..

அதே காங்கிரஸ் தயவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு ஆட்சி அமைக்கிறது யார்? அணை கட்டியே தீருவோம், தண்ணீர் உங்களுக்கு தர மாட்டோம் என சொல்லும் காங்கிரஸ் கட்சியோடு ஏன் நீங்கள் கூட்டு வைக்கிறீர்கள், எப்படி உங்களுக்கு கூட்டணி வைக்க தோன்றுகிறது..

நான் ஜீரோ.. ஹீரோவிடம் கேளுங்க

உரிமையை பறிக்கின்ற ஒரு கட்சியோடு கூட்டணி வைத்துக்கொண்டு என்னத்தை இங்க காப்பாற்றுவீங்க.. சரி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையகம் எங்கே இருக்கிறது.. கர்நாடகாவில் தானே.. அப்போது அந்த கட்சி என்ன முடிவு எடுக்கும்?.. என்னிடம் கேட்டு இப்போது என்ன செய்யுறது.. நான் ஜீரோ.. போய் ஹீரோவிடம் கேளுங்கள்..

விஜய் இதுவரை செய்த சாதனைகளை சொல்லுங்க பார்ப்போம்.. குழந்தை காணாமல் போச்சு கண்டுபிடிக்க முடியலை.. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஒருத்தர் கடிதம் எழுதியிருக்காங்க என சொல்றாங்க.. ஒருத்தர் கடிதம் எழுதவில்லை என சொல்றாங்க.. அப்போ மாவட்ட ஆட்சியர் பொய் சொல்றாங்களா? சொல்லுங்க நீங்க..

எம்.எல்.ஏவை தகுதிநீக்கம் செய்யுங்க

ஒரு துணை சபாநாயகர் ஒருத்தர், புகார் மனு அளிக்க வந்த ஒருத்தரை எப்படி தாக்குனார் என எல்லாருக்கும் தெரியும். அவ்வளவு பெரிய சபையை வழிநடத்தக்கூடிய ஒருத்தர். அவர் வகிப்பது எவ்வளவு பெரிய பொறுப்பு.. சபாநாயர் இல்லையென்றால் அவையை வழிநடத்தும் பெரிய பொறுப்பு யார்கிட்ட இருக்கு.. அப்படி ஒரு பொறுப்பை வகித்துக்கொண்டு இப்படியா செயல்படுவது..

அவர் அந்த பொறுப்புக்கு தகுதியானவரா? அவரது பொறுப்பை கூட எடுக்க துணிவில்லையே.. தலைமையே இல்லை. தலைமை என்றால் என்ன.. நீங்க தூய சக்தி என சொல்கிறீர்கள். ஆனால் இவரை பொறுப்பில் இருந்து கூட தூக்க முடியலையே..

சபாநாயகரால் கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு மேசேஜ் அனுப்பியதாக சொல்லப்படும் அருள் விக்னேஷை ஏன் தகுதிநீக்கம் செய்ய முடியாதா? மீண்டும் தகுதி நீக்கம் செய்துவிட்டு தேர்தலில் நின்று வெற்றி பெற முடியாதா.. அந்த நம்பிக்கை இல்லை என்றால் நீங்கள் என்ன பெரிய ஹீரோ.. பெரிய மாஸ் லீடர்.. மக்களை சந்திக்க எதற்கு பயப்பட வேண்டும். வென்றால் தான் களத்தில் நிற்போம்.. தோற்றால் ஓடிப்போய்விடுவீர்களா..

பொட்டு மாமா இருக்காரே..

வென்றால் மட்டுமில்லை, தோற்றாலும் களத்தில் நிற்க வேண்டும். அவன் தான் தலைவன், வீரன்.. மெஜாரிட்டியே இல்லாமல் அன்று கலைஞர் அவ்வளவு அழகாக ஆட்சி செய்தாரே.. நேர்மை தான் இருக்கனும். உண்மை தான் இருக்கனும்.. எல்லா கேள்விகளும் எங்கிட்டயே கேட்கக்கூடாது.. என்றார்.

அப்போது செய்தியாளர்கள் குழந்தைகள் தினத்தன்று வழங்கப்பட்ட வாழ்த்து அட்டையில் நேரு மாமாவின் புகைப்படம் இல்லாமல் விஜய் புகைப்படம் மட்டுமே இருந்தது குறித்து சீமானிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த சீமான், "நேரு மாமா இல்லை என்றால் என்ன பொட்டு மாமா இருக்கிறாரே" என்று கூறிவிட்டு அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+