Rahu Ketu Peyarchi 2026: ரிஷப ராசிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம்!.. சொத்துக்களை குவிக்கும் யோகம்

Subscribe to Oneindia Tamil

Rahu ketu peyarchi 2026: திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி வரும் டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. நிழல் கிரகங்களில் இந்தப் பெயர்ச்சியானது ரிஷப ராசியின் வாழ்க்கையில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்கள், கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ரிஷபம்

ரிஷப ராசியில் ராகு உச்சம் அடைகின்றது. கேது விருச்சிகத்தில் உச்சம் அடைகின்றது. பெரிய அளவு நன்மைகளைத் தரும். எதிரிகளைக் காட்டக்கூடிய காலகட்டமாக இருக்கும். கடகத்துக்கு கேதுவும், மகரத்திற்கு ராகுவும் வந்து அமர்கின்றனர். மூன்றாம் இடத்திற்கு கேது வருவது 200 சதவீத நன்மைகளைத் தரும். மற்றவர்கள் பேசுவதை முன்பே கணிக்கும் திறன் ஏற்படும்.

rahu-ketu-peyarchi-2026-massive-career-growth-financial-gains-for-rishabam-rasi

சொத்து கிடைக்கும்

என்ன தப்பு நடக்கப் போகிறது, மற்றவர்கள் என்ன பேசுவார்கள் என்பதை முன்கூட்டியே கணிப்பீர்கள். அற்புதமான மாற்றங்கள் கண்ணுக்குத் தெரியும். ரகசியங்களை மற்றவர்கள் உங்களிடம் கூறுவார்கள். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். பாக்கியத்தில் ராகு வருவதால் அப்பாவுடைய சொத்துக்கள், தாத்தா சொத்துக்கள் உங்களுக்கு கிடைக்கும். ஆனால், பாகம் உங்களுக்கு குறைவாக கொடுக்கும் நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

வெளிநாடு யோகம்

ஆண் குழந்தை உங்களுடைய தாத்தாவின் சாயலில் பிறக்கும் யோகம் ஏற்படும். கோவில் கட்டக்கூடிய அமைப்பு உண்டாகும். வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு வெளிநாடு செல்வதற்கான பாக்கியம் கிடைக்கும். யூரோப் செல்வதை தவிர்ப்பது நல்லது. அதேபோல, மாநிலங்களைப் பொறுத்தவரை கேரளா, கர்நாடகா, கோவா செல்வதைத் தவிர்ப்பது நன்மை பயக்கும். மற்ற எந்த இடங்களுக்குச் சென்றாலும் யோகத்தைத் தரும்.

முன்னேற்றம்

10 மடங்கு உயரக்கூடிய காலகட்டமாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் உள்ளவர்களுக்கு தங்களுடைய வாழ்வின் அர்த்தம் குறித்து தெரிந்து கொள்வார்கள். அப்பா, சகோதரரின் ஆரோக்கியம் மற்றும் உறவில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. பாக்கியத்தில் வரும் ராகு நீங்கள் எவ்வளவு சரியாக இருக்கிறீர்கள் என்பதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும்.

வழிபாடு

அஷ்டமத்திற்கு செல்லும் ராகு விபரீத ராஜயோகத்தைக் கொடுக்கும். ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு நிறைய நன்மைகளைத் தரும். இரவு நேர பயணங்கள், தொலைதூர பயணங்களில் மிகுந்த கவனம் தேவை. சந்தோஷம் ரீதியாக 80 சதவீதமும், பொருளாதாரத்தில் 80 சதவீதமும் நன்மைகள் ஏற்படும். பெரிய பணங்கள் வந்து சேரக்கூடிய அமைப்பு உள்ளது. நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வடமாலை சாற்றி வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். அல்லது வீட்டின் அருகில் இருக்கும் கோயிலில் வடையை நைவேத்தியம் செய்து தானம் கொடுப்பது நன்மையைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+