அதிமுகவை பாராட்டணும்! VS பாபு வழக்கு டூ கள்ளக்குறிச்சி எம்எல்ஏ வழக்கு வரை! அடித்து ஆடிய லீகல் விங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் மூடிமறைக்கப் பார்த்த இரண்டு முக்கிய விவகாரங்கள், அ.தி.மு.க. தரப்பினர் நீதிமன்றக் கதவுகளைத் தட்டிய பிறகே வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

குறிப்பாக, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. தொல்லை கொடுத்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தின் கடும் தலையீட்டால் இன்று அதிரடித் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

AIADMK

பெண் ஆட்சியர் விவகாரம் - அ.தி.மு.க. வழக்கால் பதிவான எஃப்.ஐ.ஆர்

பெண் ஆட்சி ஒருவருக்கு கள்ளக்குறிச்சி தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. சி. அருள் விக்னேஷ் வாட்ஸ்அப்பில் ஆபாசக் குறுஞ்செய்திகளை அனுப்பித் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்தது. கடந்த ஜூலை மாதமே இதுகுறித்து அரசுத் தரப்பில் முறையிட்டும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அரசு அமைதி காத்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அ.தி.மு.க. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, "மாவட்ட ஆட்சியரிடமே நேரடியாகப் பேசி, அவர் புகார் அளித்திருக்கிறாரா என்பதைத் தெளிவுபடுத்துங்கள்" என நீதிபதி வி. லட்சுமிநாராயணன் அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தின் இந்த அழுத்தத்திற்குப் பிறகே, பெண் ஆட்சியர் நேற்று அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தார். அதன்பேரில், த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இன்று உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது. இன்றைய விசாரணையில், "ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. என்பதால் யாரையும் பாதுகாக்க நினைக்காதீர்கள்.. இந்த வழக்கை ஐ.ஜி. அந்தஸ்துள்ள அதிகாரி கண்காணிக்க வேண்டும்" என நீதிபதி கடுமையாக எச்சரித்து, விசாரணையை நவம்பர் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு உடல்நிலை மர்மம்

இதேபோன்று, சென்னை கொளத்தூர் த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, சுமார் 70 நாட்களாக அவரது உடல்நிலை குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படாமல் ரகசியம் காக்கப்பட்டது. தொகுதிப் பணிகள் முடங்கிய நிலையில், கொளத்தூர் வாக்காளரான ஜி. தேவராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட மறுநாளே வி.எஸ். பாபு உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

அ.தி.மு.க.வுக்குக் குவியும் பாராட்டு

பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. சமூக வலைதள விவாதங்களில் சிக்கிக்கொண்டிருந்த நிலையில், அ.தி.மு.க. சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தை நாடியதால்தான் கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரத்தில் 4 மாதங்களுக்குப் பிறகு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்குக் கூடப் பாதுகாப்பில்லாத சூழலை அம்பலப்படுத்தியதோடு, சட்டப் போராட்டம் மூலம் நீதியை நிலைநாட்ட அ.தி.மு.க. எடுத்த முயற்சிக்கு அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இன்னொரு பக்கம் ஒரு எம்எல்ஏவின் உடல்நிலை குறித்த அப்டேட் கூட அதிமுக போட்ட வழக்கு மூலமே வெளியாகி உள்ளது என்பதற்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+