அனிருத் கல்யாணத்தில் கலந்து கொண்ட முரளிதரன் மனைவி ரியல் "சந்தூர் மம்மி”.. இளமையின் ரகசியம் தெரியுமா?
சென்னை: அனிருத் காவ்யா மாறன் திருமண வரவேற்பில் ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தாலும், இப்போது சோஷியல் மீடியாவில் தனியாக கவனம் ஈர்த்து வருவது இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் மனைவி மதி மலர் தான். இவருடைய புகைப்படங்களை பார்த்த பலரும் முரளிதரன் மனைவியா இது? இவ்வளவு இளமையாக இருக்கிறாரே? என்று ஆச்சரியப்பட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.
அனிருத் கல்யாணத்தில் எத்தனையோ நடிகைகள், பிரபலங்களின் மனைவிகள் கலந்து கொண்டார்கள். ஆனால் மதிமலர் அணிந்திருந்த உடை, அவருடைய ஸ்டைல், பிட்னஸ், இளமையான தோற்றம் என அனைத்துமே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இரண்டு குழந்தைகளுக்கு அம்மா என்றால் நம்பவே முடியவில்லை என்று பலரும் அவருடைய புகைப்படங்களை பார்த்து வியந்து வருகிறார்கள்.

நிஜ சந்தூர் மம்மி
இப்போதெல்லாம் பிரபலத்தின் மனைவி நிகழ்ச்சிக்கு வந்தாலே அவருடைய உடை, அழகு பற்றி பேசுவது வழக்கம் ஆகிவிட்டது. ஆனால் மதி மலரை பொறுத்தவரை அவருடைய இளமையான தோற்றத்தை பார்த்து உண்மையான சந்தூர் மம்மி இவர்தான் என்று ரசிகர்கள் செல்லமாக அழைக்கும் அளவிற்கு இணையத்தில் பேசப்பட்டு வருகிறார்.
யார் இந்த மதிமலர்
மதி மலர் ராமமூர்த்தி சென்னை சேர்ந்தவர் தான். இவருடைய குடும்பமே மருத்துவத்துறையில் பிரபலமான குடும்பம். இவருடைய தந்தை மறைந்த டாக்டர் எஸ் ராமமூர்த்தி மலர் ஹாஸ்பிடலை நிறுவியவர் தான் என்பது பலருக்கு தெரியாது. இவருடைய அம்மா டாக்டர் நித்யா ராமமூர்த்தியும் மருத்துவத்துறை சார்ந்தவர்தான். மதிமலர் பிட்னஸ் மேனேஜ்மென்ட் படித்தவர். கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுக்கு மதி மலர்களுக்கும் குடும்பத்தினர் மூலமாகத்தான் திருமண ஏற்பாடு நடந்தது.

திருமணத்திற்கு காரணம்
இவர்களுடைய திருமணத்திற்கு முக்கிய காரணமாக இருந்தவர் நடிகர் வாகை சந்திரசேகர். இரண்டு குடும்பத்தினருக்கும் பொதுவான நட்பு இருந்த நிலையில், இந்த திருமண பேச்சு தொடங்கியதாம். முத்தையா முரளிதரன் மதி மலர் இருவருக்கும் கடந்த 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்று இருக்கிறது. அப்போது முத்தையா முரளிதரனுக்கு 32 வயது, மதிமலருக்கு 24 வயது. இப்போது இவர்களுக்கு நரேஷ் என்ற மகனும் க்ரிஷா என்ற மகளும் இருக்கிறார்கள்.
45 வயது
திருமணம் ஆகி 21 வருஷங்களை கடந்து, 2 குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்களாக்கி விட்டார்கள். ஆனால் மதி மலரை இப்போது பார்த்தால் திருமணத்தின்போது இருந்த இளமையை அப்படியே தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் வியந்து வருகிறார்கள். இப்போ அவருக்கு 45 வயது என்று சொன்னால் நம்பவே முடியாது. எப்படித்தான் இவர் இளமையை பாதுகாக்கிறாரோ? அதற்கு என்ன ரகசியமாக இருக்கும்? என்று அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை ரசிகர்கள் தேட தொடங்கிவிட்டனர்.
அழகின் ரகசியம்
அங்கு போய் பார்த்தால் தான் அனைவருக்குமே இன்ப அதிர்ச்சி கிடைத்திருக்கிறது. அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம் ஒர்க்கவுட் பயிற்சி, யோகா தொடர்பான வீடியோக்களை அவர் பகிர்ந்து வருவது தெரிகிறது. உடலை பிட்டாக வைத்துக் கொள்வதில் அவர் எவ்வளவு கவனம் செலுத்துகிறார் என்பதை இந்த வீடியோக்களை காட்டுகிறது. வெறுமனே ஒரு திருமண வரவேற்பில் எடுத்த போட்டோவை பார்த்து வியந்த ரசிகர்கள் இப்போது அவருடைய பழைய புகைப்படத்துடன் ஒப்பிட்டு வருகிறார்கள். அதிலும் 2005ல் திருமணத்தின்போது இருந்த மதிமலரையும் இப்போது அனிருத் வரவேற்பில் பார்த்த மதி மலரையும் ஒப்பிட்டு இவ்வளவு வருடங்கள் ஆனாலும் இளமையான தோற்றம் மட்டும் மாறாமல் இருக்கிறதே என்பதுதான் பலருடைய கருத்து.


Click it and Unblock the Notifications
