அனிருத் பற்றிய வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த இமான்.. ஒரு போட்டோவால் முற்றுப்புள்ளிக்கு வந்த சர்ச்சை
சென்னை: அனிருத் திருமண வரவேற்பில் யார் வந்தார்கள்? யார் வரவில்லை? என்று கடந்த 2 நாட்களாகவே சினிமா ரசிகர்கள் ஒவ்வொருவரையும் கவனித்து வருகின்றனர். குறிப்பாக தனுஷ் வராதது, மேலும் சில பிரபலங்கள் வராதது என ஏகப்பட்ட பேச்சுகள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இசையமைப்பாளர் டி இமான் விஷயத்திலும் ஒரு வதந்தி பரவியது. ஆனால் இப்போது இமான் வெளியிட்ட ஒரே ஒரு புகைப்படம் அந்த பேச்சுக்கே பதில் கொடுப்பது போல அமைந்திருக்கிறது.
அனிருத் காவியா திருமண வரவேற்பு 2 நாட்களாக நடைபெற்றது. முதல் நாள் அரசியல் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய நிலையில், 2வது நாள் சினிமா பிரபலங்கள் வருகையால் கலைக்கட்டியது. விருந்தினர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதி இல்லாததால் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் பின்னர் அனிருத் காவ்யா மாறன் தரப்பில் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றன.

சோசியல் மீடியா விவாதம்
ஆனால், முதல் நாள் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் டி இமான் புகைப்படம் எதுவும் வெளியாகததால் அனிருத் அவரை கூப்பிடவில்லையா? என்ற கேள்வி எழுந்தது. ஏற்கனவே தனுஷுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அனிருத்துடன் தொடர்புடைய சில பிரபலங்களும் ஒதுக்கப்படுகிறார்களா? என்றெல்லாம் ரசிகர்கள் தங்களுக்குள் பேச தொடங்கி விட்டார்கள். சோஷியல் மீடியாவில் இதைப்பற்றிய விவாதம் தான் பக்கம் பக்கமாக போய்க் கொண்டிருந்தது.
உண்மையில் அந்த நாளில் அந்த பிரபலங்களுக்கு வேற எதுவும் வேலை இருந்ததால் இந்த நிகழ்ச்சிக்கு போக முடியவில்லையா? அல்லது கருத்து வேறுபாடு காரணமா என்பதுதான் பலரும் அலசி ஆராய்ந்த விஷயம். ஆனால் இந்த பேச்சுக்களுக்கு இமான் பெரிய விளக்கம் கொடுக்கவில்லை, நேரடியாக யாருக்கும் பதில் சொல்லாமல் அனிருத் மற்றும் காவியா மாறனுடன் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்.

இமான் வெளியிட்ட பதிவு
சனிக்கிழமை நடைபெற்ற வரவேற்பில் எடுத்த அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளத்தில் பகிர்ந்து மணமக்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து இருக்கிறார். அந்த புகைப்படம் வெளியானதும் ரசிகர்களின் கேள்விகளும் மாறிவிட்டன. அனிருத்தின் திருமணம் கிரீஸில் குடும்பத்தினரின் முன்னிலையில் நடந்தது. ஆனால் வரவேற்பு நிகழ்ச்சியை தான் பிரம்மாண்டமாக நடத்தி அனைவரையும் வியக்க வைத்து விட்டார்கள்.
நாளை 3வது வரவேற்பு
அது மட்டுமல்லாமல் சன் குடும்பத்தில் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களுக்கும் தங்க நாணயம் மற்றும் மோதிரத்தோடு அழைப்பிதழ் கொடுத்து நாளை நவம்பர் 25 ஆம் தேதி ஒரு வரவேற்பு நிகழ்ச்சி வைத்திருக்கின்றனர். அதில் சன் டிவி சீரியல் பிரபலங்கள் உட்பட சன் குடும்ப ஊழியர்கள் அனைவரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஏற்கனவே அனிருத் வரவேற்பில் அவர் கலந்து கொள்ளவில்லை, இவர் கலந்து கொள்ளவில்லை என்ற பேச்சுக்கள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் நாளை சின்னத்திரை பிரபலங்களின் போட்டோக்களை பார்த்த பிறகு இந்த பேச்சு மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சரி, என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications
