திருப்பரங்குன்றம் உச்சிப் பிள்ளையார் கோவிலில் கார்த்திகை தீபம்.. சன்னதி வீதியில் வெடித்த போராட்டம்
மதுரை: திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்து இருந்தது. மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை பின்பற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையும் அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் அமைந்துள்ள உச்சிப் பிள்ளையார் கோவில் தீபத்தூணில் தான் தீபம் ஏற்றப்பட்டது.

தமிழ் கடவுளாம் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் இன்று திருக்கார்த்திகை தீபத் திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. அதே நேரத்தில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இன்று இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறி இருந்தது. அதே நேரத்தில் இன்று தொடங்கி நாளை காலை 10 மணி வரை போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
மேலும் நாளை காலை 6:00 மணி வரை பொதுமக்கள் மலைக்குச் செல்லவும் தற்காலிக தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே நேற்றிரவு மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கோவிலில் நடைபெறும் நடைமுறைகளுக்கு மட்டும் விளக்கு அளிக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது.
இதனால் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பும் பரபரப்பும் அதிகரித்த நிலையில் திருப்பரங்குன்றத்தை சுற்றி எஸ்பி அந்தஸ்து கொண்ட அதிகாரிகள் 12 பேர் தலைமையில் சுமார் 5600 போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் மட்டும் 180க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டினார்.
தர்கா அமைந்துள்ள பகுதி, காசி விஸ்வநாதர் கோவில் பகுதி, காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் படிக்கட்டு, கிரிவலம் பாதை ஆகிய இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்கு இடையே இன்று 144 தடை உத்தரவு விதிக்கப்பட்ட நிலையில் அது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது.
இந்த நிலையில் சரியாக மாலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்பட்டது. ஆனால் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. அதே நேரத்தில் கடந்தாண்டை போலவே இந்த ஆண்டு உச்சிப்பிள்ளையார் கோவிலில் உள்ள கொப்பரையில் தான் தீபம் ஏற்றப்பட்டது.
இதற்கிடையே உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் என எதிர்பார்த்து இருந்த இந்து அமைப்புகளை சேர்ந்த பலரும் கோபத்தில் ஆழ்ந்தனர். மேலும் தமிழக அரசு கண்டித்தும் காவல்துறை நடவடிக்கையை கண்டித்தும் சன்னதி வீதியில் நின்று கோஷங்களை எழுப்பியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Click it and Unblock the Notifications
