இவர் தான் உண்மையான சிங்கப்பெண்.. பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு திமுக பாராட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: போலியாக உருவாக்கப்பட்ட த.வெ.க அரசின் சிங்கப் பெண் படை, யாருக்கும் எந்த விதப் பாதுகாப்பையும் தர முடியாத நிலையில், ஒரு மாவட்டத்தின் பெண் ஆட்சியர் உண்மையான சிங்கப் பெண்ணாக நிமிர்ந்து நிற்கிறார் என திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா பாராட்டியுள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா வெளியிட்டுள்ள பதிவில், "கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு அந்தத் தொகுதியின் கேடுகெட்ட த.வெ.க. எம்.எல்.ஏ. ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி, பாலியல் தொந்தரவுகள் செய்த விவகாரத்தில் ஒட்டுமொத்த தவெக அரசு நிர்வாகமும் உண்மையைக் குழி தோண்டிப் புதைப்பதற்கே முயன்றது!

DMK praises female IAS officer

அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று பதவி வெறியில் அமைச்சர்கள் வாய்கூசாமல் பொய் சொன்னார்கள். ஆட்சி நிர்வாகத்திற்குத் தலைமை ஏற்றிருக்கும் முதலமைச்சர் விஜய் வழக்கம்போல வாயை திறக்கவில்லை.

மந்திரிப் பதவிக்காக மானம்-ஈனம் இல்லாத கூட்டணித் தலைவரோ "கொடுத்த காசுக்கு மேலே கூவுறான்டா" என்கிற ரேஞ்சில், "எம்.எல்.ஏ பாவம்'' என்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக நீதிமன்றத்திலேயே அரசின் வழக்கறிஞர், "பெண் கலெக்டரிடமிருந்து அப்படி எந்தப் புகாரும் வரவில்லை" என்று விவகாரத்தை மூடி மறைக்கத் துணிந்தார்.

ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் கூட்டுச் சதி செய்வது போல செயல்பட்ட நிலையில், பெண் ஆட்சியரின் மன நிலை என்ன பாடுபட்டிருக்கும்? இன்னொரு மாவட்டத்தில் ஆட்சியராக உள்ள அவரது கணவரின் மனநிலை எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கும்!

உயர் பொறுப்பில் இருக்கும் ஐ.ஏ.எஸ். தம்பதியினருக்கே இந்த #தவெக அரசில் நியாயம் இல்லை. நீதி இல்லை. அப்படிப்பட்ட நிலையிலும், துணிந்து முடிவெடுத்து மாவட்ட எஸ்.பி.யிடம், பெண் ஆட்சியர் புகார் அளித்துள்ள செய்தியை இன்று இந்து நாளிதழ் துணிச்சலாக வெளியிட்டுள்ளது.

உயர்பொறுப்பில் உள்ளவர்கள் தொடங்கி, எந்த ஒரு பெண்ணுக்கும் பாதுகாப்பில்லாத த.வெ.க ஆட்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் கலெக்டர் புகார் அளித்திருப்பது அவரது பெரும் தைரியமிக்க போராட்ட உணர்வைக் காட்டுகிறது.

தொடக்கத்திலிருந்தே #திமுக மட்டுமே இந்த விவகாரத்திற்காகப் பொதுவெளியில் போராட்டம் நடத்தி குரல் கொடுத்தது. நியாயத்திற்குத் துணை நின்றது.

அண்ணன், தாய்மாமன் என்று சொன்னவர்கள் எல்லாம் குற்றவாளியைக் காப்பாற்றுவதிலேயே குறியாக இருந்த நிலையில், 'அப்பா' ஸ்டாலின் தான் தமிழ்நாட்டில் வாழும் பெண்களின் கண்ணியத்திற்கும் பாதுகாப்புக்கும் அரணாக நிற்கிறார். இனி இந்த அரசிடமிருந்து அந்த மாவட்ட ஆட்சியர் அவர்களை பாதுகாப்பது தமிழ்நாடு மக்களின் பொறுப்பு. இவ்வளவு பெரும் அரசியல் அழுத்தத்திற்கு பிறகும் தனி ஒரு ஆளாக தைரியமாக உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ள, பாரதியின் உண்மையானப் புதுமைப் பெண்ணான இவரைத் தமிழ்நாடு என்றென்றும் கொண்டாடும் !" இவ்வாறு கூறியுள்ளார்.

ஸ்டாலின் பதிவு

முன்னதாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருந்த பதிவில், உங்க அண்ணன், உங்க தாய்மாமன் என டயலாக் பேசும் முதலமைச்சருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தது தெரியுமா, தெரியாதா? தேசிய மகளிர் ஆணையமும், உயர்நீதிமன்ற நீதிபதியும் தலையிட்ட பின்னர்தான் ஒரு மாவட்ட ஆட்சியரின் புகாரே பதியப்படும் என்றால் தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியா, இல்லை வேறெதுவுமா?

போடாத கமெண்டுக்காக, பேராசிரியரின் முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து அதிகாலையில் கடத்திச் செல்லத் தெரிந்த காவல்துறைக்கு, முதலமைச்சர் விஜய் அவர்களின் பொடனிக்குப் பின்னாலேயே இருந்துகொண்டு தவறிழைத்த MLA-வைக் கைது செய்யத் தெரியவில்லையா?

கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகாரில் சிக்கிய ஸ்ரீவைகுண்டம் MLA மீதும், மைதானத்தில் போதை மாத்திரை நசுக்கிய அமைச்சர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் த.வெ.க.வில் மற்றவர்களுக்கு பயம் இருந்திருக்கும்.

மாறாக, என்ன செய்தாலும் நாம் காப்பாற்றப்படுவோம், புகார் அளித்த பெண்களைத்தான் கட்சியில் இருந்து நீக்குவார்கள் என்ற மோசமான முன்னுதாரணங்களை முதலமைச்சர் விஜய் அனுமதித்துவிட்டார். அந்த தைரியத்தில்தான் ஒட்டுமொத்த மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அதிகாரியிடமே எல்லை மீறியிருக்கிறார் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்.

'த.வெ.க. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். இன்று, த.வெ.க.வினரின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தேடிப் பெண்கள் ஓடும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. இந்த வழக்கிலாவது உறுதியான நடவடிக்கை எடுத்தால்தான் இப்படியான சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்க முடியும்.

நான்கு மாதகாலமாக ஒரு குற்றவாளியைப் பாதுகாக்க எல்லா வழிகளையும் பயன்படுத்திய மாநில அரசு - இப்படிப்பட்ட MLA-வை அழைத்து "தீபாவளி பரிசு" கொடுத்த முதலமைச்சரின் தலைமையில் உள்ள மாநில அரசு இனி இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே, மாநில அரசு தாமாகவே இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும்.

சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனம் குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்த பின்பும் நடவடிக்கை எடுக்காமல் மூடிமறைத்த தலைமைச் செயலாளர் மீதும், மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் தந்த அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும். கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்." இவ்வாறு கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+