மலை உச்சியில் தான் தீபம் ஏற்றனும்! ஒரே வார்த்தையில் முடித்த நீதிமன்றம்! கோர்ட்டில் நடந்த பரபர வாதம்!
மதுரை: மாவட்ட ஆட்சியர், ஆணையர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் உச்ச நீதிமன்ற உத்தரவைப் பின்பற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது எனவும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்றுவது தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென உச்ச நீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கியது. இதற்கிடையே நேற்றிரவு திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கு உட்பட திருப்பரங்குன்றம் தீப தூண் விவகாரம் தொடர்பான வழக்குகள் இன்று அவசர மனுவாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தலைமையிலான அமர்வில் மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர் அரசு தரப்பு வழக்கறிஞர் உள்ளிட்டோர் ஆஜராகினர். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இருக்கும்போது இங்கு விசாரணை நடப்பது உகந்தது அல்ல என வாதம் தமிழா அரசு சார்பில் முன்வைக்கப்பட்டது.
அப்போது மனுதாரர் தரப்பில் உங்கள் கோரிக்கை என்ன என நீதிபதி கேள்வி எழுப்பிய போது, உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக்கூடாது என்ற நோக்கில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் தமிழகம் முழுவதும் பல்வேறு நபர்களை கைது செய்துள்ளனர் என தெரிவித்தார்.
கோவிலில் வழிபாடு நடத்துவதை எந்த பக்தியும் நாங்கள் தடை செய்யவில்லை. பக்தர்களின் மத உரிமையை பாதிக்காத வகையில் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் உரிமையில் எந்த தடையும் விதிக்கப்படவில்லை. சிராஜ் என்பவர் எதிராக நெல்லை நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.. மற்றொரு வழக்கு நேற்று மாலை உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக போராடியதாக ஒரு குழுவினர் மீது வழக்கு பதிவுகள் தற்போது வரை இது தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மக்கள் மத்தியில் அச்சம் நிலவுவதால் மட்டுமே 258 நபர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 258 நபர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 2 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றத்திற்கு எந்த கட்டாயமும் இல்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, மலை உச்சியில் விளக்கு ஏற்றுவதோடு மட்டும் நின்றுவிடவில்லை, மாறாக மலை மற்றும் அதற்கு அப்பால் செல்வதற்கும் பொருந்தும்.
பக்தர்களின் நடமாட்டத்திற்கு எதிராக அதிகாரிகள் இந்த உத்தரவைப் பயன்படுத்துவார்கள் என்ற கேள்விக்கே இடமில்லை. கைது நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, இதுவரை விவரம் அளிக்கப்பட்ட ஒவ்வொருவரும் ஏதேனும் அமைப்புகளுடன் தொடர்புடையவர்களாகவே இருந்துள்ளனர் என அரசுத் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.
உச்ச நீதிமன்றம் நவம்பர் 20 தேதியிட்ட உத்தரவின்படி, இன்று (நவம்பர் 24) விளக்கேற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவு செயல்படுத்தப்படாவில்லை என பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த கூடாது என்பதற்காக சீராயு மனு தாக்கல் செய்யப்படக் கூடாது என உச்ச நீதிமன்றம் தெளிவாக பல உத்தரவுகளில் கூறியுள்ளது என நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.
மேலும், இந்தியவில் உள்ள அனைத்து அதிகாரிகளும் உச்ச நீதிமன்றத்திற்கு உதவியாகச் செயல்பட வேண்டும் என்று கட்டளையிடுகிறது. மாவட்ட ஆட்சியர் ஒரு குடிமை அதிகாரி ஆவார். கடந்த ஆண்டு கார்த்திகை தீபம் நிகழ்வு தொடர்பாக அதிகாரிகள் நீதித்துறை அதிகாரிகளை அப்பட்டமாக மீறியதால், சட்டப்பிரிவு 144 அவருக்கு முழுமையாகப் பொருந்தும். ஆட்சியர் உச்ச நீதிமன்றத்திற்கு மட்டுமே பதிலளிக்கக் கடமைப்பட்ட ஒரு பொது ஊழியர் என்பதையும், அவருக்கு வழங்கப்படும் எந்தவொரு எதிர் ஆலோசனையையும் அவர் புறக்கணிக்க வேண்டும் என்பதையும் நினைவூட்டுவது பொருத்தமானது என்று நாங்கள் கருதுகிறோம்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 144-வது பிரிவின்படி, இந்திய நாட்டின் எல்லைக்குட்பட்ட அனைத்து சிவில் மற்றும் நீதித்துறை அதிகாரிகளும் உச்சநீதிமன்றத்திற்கு உதவியாகச் செயல்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் ஒரு சிவில் அதிகாரி என்பதால், அரசமைப்புச் சட்டத்தின் 144-வது பிரிவு அவருக்கும் முழுமையாகப் பொருந்தும்.
கடந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா தொடர்பாக நீதிமன்ற உத்தரவுகள் அதிகாரிகளால் வெளிப்படையாகவே மீறப்பட்டதால், இந்த வழக்கில் மாவட்ட ஆட்சியர் ஒரு அரசு ஊழியர் என்பதையும், அவர் உச்சநீதிமன்றத்திற்கே பதிலளிக்கக் கடமைப்பட்டவர் என்பதையும் நினைவூட்டுவது அவசியம் எனக் கருதுகிறோம்.
நீதிமன்ற உத்தரவுக்கு முரணான ஆலோசனைகள் வேறு எந்த அதிகாரியிடமிருந்து வழங்கப்பட்டாலும் மாவட்ட ஆட்சியர் அவற்றைப் புறக்கணிக்க வேண்டும். 20.11.2026 தேதியிட்ட நீதிமன்ற உத்தரவுக்கு முரணாகச் செயல்படுமாறு எந்த சட்ட அதிகாரியும் அவருக்கு ஆலோசனை வழங்குவார் என நாங்கள் நினைக்கவில்லை. 20.11.2026 தேதியிட்ட உத்தரவு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், அந்த மறுஆய்வு மனுவில் இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.
மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதை மட்டுமே காரணமாகக் கூறி நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தாமல் இருக்க முடியாது. அதாவது மறுஆய்வு மனு நிலுவையில் இருப்பது நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தாமல் இருப்பதற்கான காரணமாக அமையாது என்பதே உச்சநீதிமன்றம் வகுத்துள்ள சட்ட நிலைப்பாடாகும்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளான ஐஏஎஸ் அதிகாரி நிஷாந்த் கிருஷ்ணா, திருநெல்வேலி மாவட்ட காவல் ஆணையராக உள்ள ஐபிஎஸ் அதிகாரி ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர், அறங்காவலர் குழுத் தலைவர் சண்முகசுந்தரம் மற்றும் கோயில் செயல் அலுவலர் ஆகியோர், மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதைக் காரணம் காட்டி நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த முடியாது எனக் கூற முடியாது.
அதேவேளையில், தடை உத்தரவைப் பயன்படுத்தும் விதம் சம்பந்தப்பட்டவர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தனது நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துரைக்கிறது. இதனை பதிவு செய்யவே நாங்கள் விரும்புகிறோம். மனுதாரர் தரப்பின் வாதத்தில் நியாயம் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம்.
ஒரு நீதிமன்ற உத்தரவைக்கூட விமர்சிக்கலாம். அந்த விமர்சனம் கடுமையானதாகவும் இருக்கலாம். ஆனால், உச்சநீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்தக் கூடாது என எவரும் வெளிப்படையாகக் கோரிக்கை விடுக்க முடியாது. எனவே, உச்சநீதிமன்றம் 20.11.2026 அன்று பிறப்பித்த மேற்கண்ட உத்தரவை மீற வேண்டும் என்று பொதுமக்களைத் தூண்டும் வகையில் யாரும் அழைப்பு விடுக்கக் கூடாது. இறுதியாக, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் உறுதியான தீர்மானத்துடன் விளையாடுவதற்கு அரசுக்கு அனுமதி அளிக்க முடியாது.
சம்பந்தப்பட்ட அந்த 4 அதிகாரிகளுக்கும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்த வேண்டிய கடமை உள்ளது. அந்தக் கடமையை அவர்கள் நிறைவேற்ற உத்தரவிடும் வகையில் உத்தரவு பிறப்பிக்க இந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. மேலும், காவல்துறையினரால் சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டு அல்லது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நபர்கள் எவ்வித தாமதமுமின்றி விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கிறோம்.
மாவட்ட ஆட்சியர், ஆணையர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் உச்ச நீதிமன்ற உத்தரவைப் பின்பற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது என நீதிபதிகள் கூறிய நிலையில், மலை உச்சியில் உள்ளது தீபத்துவம் அல்ல கல் தூண் தான் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என அரசுத் தரப்பு கூறியது.
அப்போடுஹ், அரசுத்தரப்பில் உத்தரவை நிறைவேற்றுவது தொடர்பாக அரசு கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக, இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையிடமிருந்து தெளிவான அறிவுறுத்தல்கள் கிடைத்துள்ளன. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோர் இன்று நேரடியாகக் கோயிலுக்குச் சென்று, அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்துள்ளனர். மேலும், அனைத்து ஏற்பாடுகளையும் மேற்பார்வையிட்டுள்ளனர்.
தீபம் ஏற்றும் குழுவுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக இன்று கூட்டம் நடைபெற உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையரிடமிருந்து பதில் கிடைத்துள்ளது. உச்சநீதிமன்றம் தனது உத்தரவின் 14-வது பத்தியில் குறிப்பிட்டுள்ளபடி, தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்களின் விவரங்கள் அடங்கிய அங்கீகார ஆவணத்தைச் சமர்ப்பிக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில், சில மணி நேரங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட தகவலின்படி, சம்பவ இடத்தில் மேற்பார்வைப் பணிகளுக்காக கண்காணிப்பாளர்கல் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மருத்துவக் குழு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தீ விபத்துகளைத் தடுப்பதற்காகத் தீயணைப்புத் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். காவல் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் வருகையைக் கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தற்போதைய நிலவரப்படி, தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே, உச்சநீதிமன்றத்தின் உத்தரவு அமல்படுத்தப்படும் என்றே நாங்கள் கருதுகிறோம். இதுவரை சம்பந்தப்பட்ட அனைவரின் செயல்பாடுகளையும் பார்க்கும்போது, உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதே அவர்களின் நோக்கம் என்பது தெளிவாகிறது.
நீங்கள், 'ஆம், நாங்கள் உத்தரவைப் பின்பற்றுவோம்' என்று கூற வேண்டும். உத்தரவைப் பின்பற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். நாங்கள் மலை உச்சியில் தான் தீபம் ஏற்ற சொல்கிறோம். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்றுவது தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி வழக்கு முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.




Click it and Unblock the Notifications
