சிம்ம ராசிக்கு அடுத்த 1½ ஆண்டுகள் ஜம்முன்னு இருப்பீங்க.. அதிர்ஷ்டம் கொட்டும்.. தொட்டதெல்லாம் வெற்றி

Subscribe to Oneindia Tamil

Rahu ketu peyarchi 2026: திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி வரும் டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. நிழல் கிரகங்களில் இந்தப் பெயர்ச்சியானது சிம்ம ராசியின் வாழ்க்கையில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்கள், கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

சிம்மம்

சிம்ம ராசியினருக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி சந்தோஷத்தையும், அற்புதத்தையும் தரக்கூடியதாக இருக்கும். இழந்த விஷயங்களைப் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். அடுத்த ஒன்றரை வருஷம் அதிர்ஷ்டத்தை தரக்கூடியதாக இருக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் யோகம் பெறுவீர்கள். அசுர பலத்தைப் பெறக்கூடிய யோகம் ஏற்படும்.

Rahu Ketu Peyarchi 2026

வெற்றி மேல் வெற்றி

6 ஆம் இடத்தில் ராகுவும், விரயத்தில் கேது அமரும்போது வேலையில் மிகப்பெரிய வெற்றி பெறுவீர்கள். வேலைகளை எளிமையாகவும், விரைவாகவும் செய்து முடிப்பீர்கள். உங்களை மற்றவர்கள் திட்டினால் கூட வேலையில் கெட்டிக்காரர்களாக இருப்பீர்கள். எந்தவொரு கிரகமும் தராத வெற்றியை ராகு உங்களுக்குத் தரும். கடைசி ஒன்றரை வருடங்கள் பல பிரச்சனைகளையும், கஷ்டங்களையும் சந்தித்து வந்திருப்பீர்கள்.

பணவரவு கொட்டும்

அர்த்த திரிகோணத்தில் ராகு எங்கு வந்து அமர்ந்தாலும் பணம் பல வகைகளில் வந்து சேரும். பண வரவு அற்புதமாக இருக்கும். ஒழுக்கத்துடன் இருப்பீர்கள். எல்லா விதமான போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெறுவீர்கள். எல்லா விஷயத்திலும் முதலிடத்தில் அமரும் யோகம் ஏற்படும். வெற்றிகள் உங்களுக்கு பல வகைகளில் வந்து சேரும்.

தூக்கமின்மை

மாணவர்கள் விடுதிக்குச் சென்று படிப்பது போன்ற அமைப்பு உள்ளது. எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். வேலை பளுவால் தூக்கமில்லாமல் போகும். தூங்குவதற்கான நேரம் குறையும். எங்கு வேலை, படிப்பு இருக்கிறதோ அந்த இடத்திற்கே சென்று தங்கி வேலையை முடிப்பீர்கள்.

கூடுதல் வருமானம்

குடும்பத்திற்குள் தேவையில்லாத சண்டை, இடையூறுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. வயிறு சார்ந்த பிரச்சனைகள், அல்சர் போன்றவை வரும் வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் வீட்டில் சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. சந்தோஷம் 85 சதவீதம் அற்புதமாக இருக்கும். பொருளாதார முன்னேற்றம் 98 சதவீதம் அற்புதமாக இருக்கும். கூடுதல் செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இருப்பினும், அற்புதமான வருமானங்களும் இருக்கும்.

வழிபாடு

வைத்தீஸ்வரர் கோயிலுக்குச் சென்று வைத்தியநாத சுவாமியை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். காரத்தை குறைத்துக் கொள்வது நன்மை பயக்கும். உணவில் மசாலா சார்ந்த பொருட்களையும் குறைத்துக் கொள்வது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+