உச்சநீதிமன்றம் சொன்ன இடத்தில் தீபம் ஏற்றாதது ஏன்? திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் சொன்ன விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலை மீது உள்ள உச்சிப் பிள்ளையார் கோவிலில் கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. உச்சநீதிமன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூண் என சொல்லப்படும் கல் தூணில் தீபம் ஏற்ற இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், கடந்த ஆண்டு தீபம் ஏற்றப்பட்ட இடத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது. இந்நிலையில், இந்நிலையில், உச்சநீதிமன்றம் சொன்ன இடத்தில் தீபம் ஏற்றாதது ஏன்? திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென இடைக்கால அனுமதி வழங்கியது. இதற்கிடையே நேற்றிரவு திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

Thiruparankundram Temple

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற அறிவுறுத்தியது. இதனால் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோவிலில் தான் தீபம் ஏற்றப்பட்டது. இதற்கிடையே தீப தூணில் தீபம் ஏற்றப்படும் என காத்திருந்த இந்து அமைப்பினர் ஏமாற்றத்தில் ஆழ்ந்தனர். இதை அடுத்து சன்னதி வீதியில் போராட்டமும் வெடித்தது. இந்நிலையில், உச்சநீதிமன்றம் சொன்ன இடத்தில் தீபம் ஏற்றாதது ஏன்? திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Thiruparankundram Temple

அதில்," திருப்பரங்குன்றம், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் தமிழர்களின் தொன்மையான வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இத்திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருவிழாக்கள், பூஜைகள், வழிபாட்டுச்சடங்குகள் மற்றம் கார்த்திகை தீபத்திருவிழா ஆகியவை பல தலைமுறைகளாகப் பின்பற்றப்பட்டு வரும் சமய மரபுகள், பராம்பரியப் பழக்க வழக்கங்கள் மற்றும் ஆகமவிதிகளின் அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, திருக்கோயிலில் காலங்காலமாக கடைப்பிடிக்கப்படும் வழக்கத்தின்படி, மூலவரின் சிரசுக்கு நேர்மேல் உள்ள இவ்விடமான மலை மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டு வருகின்றது. இத்தகைய நீண்ட காலத்தொடர்ச்சியான வழிபாட்டு நடைமுறைகள் (Age Old Continued Practices) மற்றும் சடங்குகள் (Custom and Rituals), ஆகம விதிகள் (Agama rules) ஆகியவை திருக்கோயிலின் தனித்துவமான சமய மரபுகள் சமய அடையாளங்களாகக் கருதப்படுகின்றன.

எனவே, நமது திருக்கோயிலில் காலங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் மரபுகள், பாரம்பரிய பழக்க வழக்கங்கள், ஆகம விதிமுறைகள் மற்றும் நிலை பெற்ற வழிபாட்டு நடைமுறைகள் பாதுகாக்கப்பட வேண்டியவை என்றும், அவற்றின் வரலாற்றுத் தொடர்ச்சி மற்றும் சமய முக்கியத்துவம் கொண்ட ஆவணங்கள், ஆகமச்சான்றுகள் மற்றும் ஸ்தானிகர்களின் கருத்துகளின் அடிப்படையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடத்திலேயே இந்த ஆண்டும் தீபம் ஏற்றுவதற்கும், அதைத்தொடர்ந்து திருக்கோயில் மரபு மற்றும் பழக்க வழக்கங்களை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவேண்டும் என்றும், இத்திருக்கோயில் அறங்காவலர் குழு ஏகமனதாக தீர்மானித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மேற்கண்ட அறங்காவலர்குழு தீர்மானத்தின்படி, இத்திருக்கோயில் திருக்கார்த்திகை மகாதீபமானது, இத்திருக்கோயில் மூலவரின் சிரசுக்கு நேர்மேல் உள்ள இடமான, மலை மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் இன்று 24.112026 66 06.00 மணியளவில் ஏற்றப்பட்டது என்ற விபரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது." எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையினை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் துணை ஆணையரும் செயல் அலுவலருமான செல்வி வெளியிட்டுள்ளார். சுப்பிரமணிய சுவாமியின் கோவிலின் அறங்காவலர் குழு தலைவராக சண்முகசுந்தரமும், அறங்காவலர்களாக ராஜபாண்டியன், அழகப்பன், ரெஜினா தேவி, சித்ரா ஆகியோர் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+