144..பரபர வாதம்..மலையில் தீபம்! உச்சகட்ட டென்ஷனில் திருப்பரங்குன்றம்! 24 மணி நேரத்தில் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறி உச்சி பிள்ளையார் கோவிலில் இன்று தீபம் ஏற்றப்பட்டு இருக்கிறது. நேற்று இரவு 1044 தடை உத்தரவு விதிக்கப்பட்ட நிலையில், 5600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இடையே உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் ஆஜராக உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் வழக்கமான இடத்தில் இன்று மகா தீபம் ஏற்றப்பட்டு இருக்கிறது. நேற்றிலிருந்து இன்று வரை என்ன நடந்தது? என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்..

முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோவில் மலை உச்சியில் தூண் ஒன்று உள்ளது. அது நில அளவை கல் என தமிழக அரசு கூறிவரும் நிலையில் அது தீபத்தூண் என இந்து அமைப்புகள் போர் கொடி தூக்கின.

Thiruparankundram

கடந்தாண்டு அதில் தீபம் ஏற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்ட நிலையில் இந்த ஆண்டு அங்கு தீபம் ஏற்றலாம் என உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு ஒன்றினை பிறப்பித்தது. இதை அடுத்து நேற்று இரவு திருப்பரங்குன்றம் பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை தடுக்கும் வகையில் மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா பி.என்.எஸ் சட்டத்தின் 163 வது பிரிவின் கீழ் தடை உத்தரவினை பிறப்பித்தார்.

நேற்று இரவு 9 மணி முதல் அமலுக்கு வந்த இந்த உத்தரவை அடுத்து திருப்பங்குரங்குன்றம் மலை முழுவதும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திண்டுக்கல், தேனி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 10க்கும் மேற்பட்ட எஸ்பிகள் தலைமையில் சுமார் 5600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சிசிடிவி கேமராக்கள் மூலமாக கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டதோடு ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் திருப்பரங்குன்றம் பகுதி முழுவதும் சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உயர் பாதுகாப்பு வளையத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதற்கிடையே சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வழக்கமான காலை பூஜை மற்றும் திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கோவிலின் அடிவாரப் பகுதியில் தேரோட்ட நிகழ்ச்சியும் தொடங்கியது. அடிவாரத்தில் சுமார் 24000 முதல் 30,000 பக்தர்கள் வரை சுவாமி தரிசனம் செய்தனர். அதே நேரத்தில் மலை உச்சிக்குச் செல்லும் பாதையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதற்கிடையே திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி பாஜக தலைவர்கள் அங்கு செல்ல முயன்ற நிலையில் பாதுகாப்பு காரணங்களை காட்டி போலீசார் அவர்களை ஆங்காங்கே தடுத்து நிறுத்தினர். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையிலும், முன்னாள் ஆளுநர் தமிழிசை மதுரை விமான நிலையத்திலும், மத்திய அமைச்சர் முருகன் கோவையிலும் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

மறுபுறம் மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் உலகத் தமிழ் சங்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விசிக தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, திமுக எம்எல்ஏ மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது திருப்பரங்குன்றம் பகுதியில் காலம் காலமாக பின்பற்றப்படும் நடைமுறையின் படி உச்சிப் பிள்ளையார் கோவில் அருகே உள்ள இடத்தில் தான் தீபம் ஏற்றப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

இது ஒருபுறம் இருக்க நண்பகலில் திருப்பரங்குன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட 163 பிரிவின் கீழான தடை உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவசர மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை நீதிபதிகள் ஜிஆர் சுவாமிநாதன், எம்டி சுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

பக்தர்களின் மத உரிமையாளர் அரசியலமைப்புச் சட்டத்தின் 25 வது பிரிவுக்கு எதிராக தடை உத்தரவு இருப்பதாகவும், உச்ச நீதிமன்றத்தின் நவம்பர் 20ஆம் தேதி உத்தரவை செயல்படுத்துவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை இருப்பதாக மனுதாரர்கள் வாதிட்டனர். வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொள்வதாக தெரிவித்த நீதிபதிகள் உயர் அதிகாரிகள் ஆஜராகாமல் விசாரணையை தொடர முடியாது என தெரிவித்தனர்.

இதை அடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் காவல்துறை உயர் அதிகாரி ஏஜி இனிக்கோ திவ்யன் ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து அரசமைப்புச் சட்டத்தின் 144 ஆவது பிரிவை சுட்டிக்காட்டி நீதிபதிகள் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்திய வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு இருப்பதாக கூறினர்.

உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த மாநில அரசின் மறு ஆய்வு மனு முடிவுக்கு வந்திருப்பதை உத்தரவை செயல்படுத்தாமல் இருப்பதற்காக காரணமாக கூற முடியாது எனக் கூறிய நீதிபதிகள், சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பக்தர்களை விடுவிக்க வேண்டும் என்றும், உச்ச நீதிமன்ற உத்தரவை மீறுமாறு யாரும் உத்தரவிடக்கூடாது என கூறினர். மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தீபம் ஏற்ற வேண்டும் என்று தான் நாங்கள் சொல்கிறோம் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இதற்கிடையே உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் பிற்பகல் 4 மணியளவில் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். மாவட்ட ஆட்சியர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், மலையடிவாரத்தில் உள்ள கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்றும், மாலை தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் இந்திய தொல்லியல் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதை எடுத்து அதிகாரிகள் மீண்டும் ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் கிரிவலம் செல்வது, சுவாமி தரிசனம் செய்வது போன்ற பக்தர்களின் உரிமைகளை பாதிக்கும் வகையில் பொதுவான தடைகளை விதிக்கக்கூடாது என்றும், வாய்மொழி உத்தரவு பிறப்பித்தனர்.

அதே நேரத்தில் மாலை 6:00 மணி வரை மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் யார் யார் அங்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறித்தும் அதிகாரிகள் தரப்பில் வெளிப்படையான அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் பக்தர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் பரபரப்பும் ஏற்பட்டது.

நாள் முழுவதும் நீடித்த பரபரப்புக்கு மத்தியில் மாலை 6:13 மணியளவில் திருப்பரங்குன்றம் மலையில் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே வழக்கமான தீபம் ஏற்றும் இடத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. சுமார் 4.5 அடி உயரமும் 70 கிலோ எடையும் கொண்ட தாமரை வடிவ கொப்பரையில் தீபம் ஏற்றப்பட்டது. இதற்காக சுமார் 400 கிலோ நெய் பயன்படுத்தப்பட்டது.

மாலை உச்சிப் பிள்ளையார் கோவில் பகுதியில் குறிப்பிட்ட சிலர் மற்றும் சடங்குகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். சிக்கந்தர் பாதுஷா தர்கா அருகே சர்ச்சைக்குரிய தீபத்தூரில் தீபம் ஏற்றப்படவில்லை. வழக்கமாக உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே தான் தீபம் ஏற்றப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் அதே இடத்திலேயே மகா தீபம் ஏற்றப்பட்டது.

இதனால் தீபத் தூணில் தீபம் ஏற்றப்படும் என எதிர்பார்த்து இருந்த இந்து அமைப்பினர் அதிருப்தி அடைந்தனர். மலையடிவாரத்தில் போராட்டங்களும் தொடங்கின. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.

தீபம் ஏற்றப்பட்ட பிறகும் திருப்பரங்குன்றம் பகுதியில் பதற்றம் முழுமையாக தணியவில்லை. தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ததோடு தொடர் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர். மலைப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு தொடர்கிறது. 163 வது பிரிவின் கீழ் தடை உத்தரவு புதுப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில் நாளை காலை 10 மணி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு புறம் இருக்க இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவின் படி இன்று தீபம் ஏற்றி அதற்கான அறிக்கையை மூன்று நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் மலை உச்சியில் குறிப்பிட்ட தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை என இந்து அமைப்புகள் கூறி இருக்கும் நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவு செயல்படுத்தப்படவில்லை என அவர்கள் மீண்டும் நீதிமன்றத்தை அணுக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் திருப்பரங்குன்றம் மலையில் நில உரிமை மற்றும் பாரம்பரிய வழிபாட்டு உரிமைகள் தொடர்பான இறுதி உத்தரவும் இன்னும் வரவில்லை. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு மட்டுமே தற்போது நடைமுறையில் இருக்கிறது. இறுதி வாதங்கள் அடுத்த ஆண்டு ஜனவரி இரண்டாவது வாரத்தில் விசாரணையின் போது முன்வைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+