திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற போராடிய.. பாஜகவினர், இந்து அமைப்புகள் 300 பேர் மீது வழக்குப்பதிவு!

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்புகள் கோரிய தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு கொடுத்திருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தக்கோரி திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தன. போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இப்படி இருக்கையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது FIR பதிவு செய்யப்பட்டிருக்கிருக்கிறது.

Tiruparankundram Supreme Court tamil nadu

பாஜக, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, இந்து தமிழர் கட்சி மற்றும் அனுமன் சேனா உள்ளிட்ட பிற இந்து அமைப்புகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தன. இந்த போராட்டத்தில் பாஜக மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரான பொன் ராதாகிருஷ்ணன், பாஜக மாநில பொது செயலாளர் ராம சீனிவாசன், இந்து முன்னணி மாநில நிர்வாகி எம்.சேவுகன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள வழக்கமான மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டதை கண்டித்து, சாலை மறியலிலும் தடையை மீறி மலை மீது ஏறவும் இவர்கள் முயன்றனர். இதையடுத்து பொன் ராதாகிருஷ்ணன் உட்பட 300 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அனுமதி இன்றி கூடுதல் மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தால் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 300 பேர் மீது நான்கு தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் காரைக்குடி திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து புறப்பட்ட இந்து முன்னணி நிர்வாகிகளை காவல்துறையினர் வழியிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்திருந்தனர்.

வழக்கின் பின்னணி

திருப்பரங்குன்றம் மலை மீது உச்சிப்பிள்ளையார் கோயில் இருக்கிறது. இக்கோயிலின் தீப தூணில் கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக கார்த்திகை தீப திருநாளில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. ஆனால், சிக்கந்தர் தர்காவுக்கு பக்கத்தில் உள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்துத்துவா அமைப்புகள் வலியுறுத்தின.

இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இந்து அமைப்பை சேர்ந்த ராம ரவிக்குமார் வழக்கு தொடுத்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ராம ரவிக்குமார் கோரிய தூணில் தீபம் ஏற்ற அனுமதி கொடுத்திருந்தார். ஆனால், அப்போதைய திமுக தலைமையிலான தமிழக அரசு, வழக்கமாக தீபம் ஏற்றும் உச்சிப்பிள்ளையார் கோயிலில் மட்டுமே தீபம் ஏற்றியது. மட்டுமல்லாது நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

சென்னை உயர்நீதிமன்றம், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று சொல்லிவிட, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி அமர்வு, சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடைவிதிப்பதாகவம், அதே சமயம் ஒருமுறை மட்டும் ராம ரவிக்குமார் கேட்கும் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சீராய்வு மனுவை தாக்கல் செய்திருந்த நிலையில், தமிழக அரசு உச்சிப்பிள்ளையார் கோயிலில் மட்டுமே தீபம் ஏற்றியிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+