60 சதவீதம் குறைவாகப் பதிவான மழை.. வறட்சியின் பிடியில் தமிழ்நாடு! எல் நினோவால் ஏடாகூட பாதிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு இல்லாத நிலை காணப்படுகிறது. வடகிழக்கு மண்டலம், காவேரி டெல்டா மண்டலம் மற்றும் தென் மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன எனவும், தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இந்த வாரத்தில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது என தமிழக அரசு கூறியுள்ளது.

இதுதொடர்பாக வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் வெளியிட்டுள்ள அறிகையில்," 2026-ஆம் ஆண்டின் வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட 20-60 சதவீதம் குறைவாகப் பதிவாகியுள்ளது.

மேலும், கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு இல்லாத நிலை காணப்படுகிறது. வடகிழக்கு மண்டலம், காவேரி டெல்டா மண்டலம் மற்றும் தென் மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

Tamil Nadu Drought Northeast Monsoon El Nino

தமிழக வறட்சி

மழையளவு மற்றும் மண் ஈரப்பதம் அடிப்படையிலான மதிப்பீடுகள். பல மாவட்டங்களில் பயிருக்கான மண் ஈரப்பத பற்றாக்குறை நிலை உருவாகி வருவதை சுட்டிக்காட்டுகின்றன. குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, அரியலூர். காஞ்சிபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கணிசமான மழை பற்றாக்குறையும் குறிப்பிடத்தக்க அளவு பயிர் பாதிப்புகளும் காணப்படுவதால், அவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

எல் நினோ

தற்போதைய மழை பற்றாக்குறைக்கு முக்கியக் காரணமாக எல் நினோ (El Nim) நிகழ்வு கருதப்படுகிறது. தற்போது பசிபிக் பெருங்கடல் மட்ட வெப்பநிலையானது +3 C-க்கும் மேல் உயர்ந்து "வலுவான எல் நினோ" சூழல் நிலவி வருகிறது. எல் நினோ காரணமாக சீரற்ற மழைப்பொழிவினால், பயிரிடப்பட்டுள்ள நிலங்களில் மண் ஈரப்பதம் குறைதல் மற்றும் வடகிழக்குப் பருவமழை காலத்தில் நிரம்ப வேண்டிய ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகள் விரைவாக வறண்டு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

வறட்சி பாதிப்பு

இந்நிலையை முன்னிட்டு, மாவட்டங்களில் பயிர் நிலை, நீர் இருப்பு மற்றும் வறட்சி பாதிப்புகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேளாண்மைத் துறைக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், வேளாண்மை மற்றும் சகோதரத் துறை அலுவலர்கள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வல்லுநர்கள் உள்ளடக்கிய மாவட்ட அளவிலான கண்காணிப்பு உயர் அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு பரிந்துரைகளை வழங்கி வருகின்றனர்.

நீர் மேலாண்மை

பயிரிடப்பட்டுள்ள நிலங்களில் பயிர்களைப் பாதுகாக்க திறமையான நீர் மேலாண்மை, உயிர்காக்கும் பாசனம், சமுதாய அடிப்படையிலான நீர் பகிர்வு மற்றும் ஈரப்பதக் குறைபாடு நிலவுகின்ற பகுதிகளில் 1% வெள்ளை பொட்டாஷ் (KCI) மற்றும் PPFM தெளிப்பு போன்ற வறட்சித் தணிப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள், வறட்சியிலிருந்து பயிர்களை மீட்டு சேதத்தைக் குறைத்து மகசூலைப் பாதுகாக்க உதவும்.

காவிரி டெல்டா

தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இந்த வாரத்தில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. இது தற்போதைய ஈரப்பதப் பற்றாக்குறைக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வேளாண்மைத் துறை மற்றும் பல்கலைக்கழக வல்லுநர்கள் வழங்கும் பரிந்துரைகளை விவசாயிகள் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், தொழில்நுட்ப வழிகாட்டுதல்களுக்கு தங்கள் பகுதி வேளாண்மை அலுவலர்களை விவசாயிகள் எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

தமிழ்நாடு அரசு

இந்நிலைமையை தமிழ்நாடு அரசு தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருகிறது. விவசாயப் பெருமக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான இந்த அரசு என்றும் துணை நிற்கும் என தெரிவித்துக்கொள்கிறேன்." எனக் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+