அரைகுறை ஆடை போடுவது என் விருப்பம்.. சப்ஸ்கிரைப் பண்றது நீங்க தானே! திமிராக பேசிய பெண்! விழுந்த அடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சோசியல் மீடியாவில் ஒரு சிலர் பதிவிடும் வீடியோக்கள், அவர்கள் பேசும் கருத்துக்கள் அவ்வப்போது பெரிய விவாதத்தை ஏற்படுத்திவிடுகிறது. அந்த வகையில் தற்போது தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஒரு பெண் தனது உடை மற்றும் சப்ஸ்கிரைப் வீடியோக்கள் குறித்து பேசிய கருத்து விவாதமாகி இருக்கிறது. தான் விரும்பும் ஆடையை அணிவதும், அதை மற்றவர்களுக்கு காட்டுவதும் என்னோட விருப்பம், அதற்காக பணம் கொடுத்து பார்ப்பது அவரவர் விருப்பம் என்று அந்த பெண் திமிராகவே பேசி இருந்தார்.

அதாவது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா விவாத நிகழ்ச்சியில், இந்த வாரம் "பெண் சுதந்திரம் சரியான பாதையில் போகிறதா? இல்லையா?" என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. அதில் சோசியல் மீடியாவில் சப்ஸ்கிரைப் மூலமாக வீடியோக்கள் வெளியிடும் பெண்கள் தவறான பாதையில் போகிறார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

Zee Tamil Awudayappan Social Media Debate

பெண்ணின் விவாதம்

அதற்கு ஒரு பெண், "எனக்கு பிடிச்ச டிரஸ் போட்டுட்டு அதை நான் பர்சனலாக தான் வச்சிக்கிறேன். அதை எல்லோருக்கும் காட்டுவதில்லை. ஆனா அதை செலவு பண்ணி பார்க்க நீ ரெடியா இருந்தா.. அதுக்கு நான் காசு வாங்கிட்டு காட்டுறேன். அதுவும் உனக்கு விருப்பம் இருந்தா தான்... இல்லன்னா அந்த போட்டோக்களை பர்சனலா தான் மெயின்டெயின் பண்ணுவேன். சோ எனக்கு பிடிச்ச மாதிரி டிரஸ் பண்றது என் விருப்பம். அதை காசு கொடுத்து பார்ப்பது உன் விருப்பம்.. இதுல யாருக்கு என்ன நஷ்டம்? எதுக்கு இதை தப்பா பாக்கறீங்க" என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Zee Tamil Awudayappan Social Media Debate

ஆவுடையப்பன் பதிலடி

அதாவது, தனக்கு விருப்பமான உடை அணிவது, அதை பணம் கட்டி பார்ப்பது இரண்டும் அவரவர் தனிப்பட்ட முடிவு. இதில் மற்றவர்கள் தலையிட வேண்டிய அவசியம் என்ன? என்பது போல அந்த பெண்ணுடைய வாதம் இருந்தது. ஆனால் இந்த கருத்து இப்ப விவாதத்துக்கு காரணமாக இருக்கிறது. இதற்கு பதில் அளித்த தொகுப்பாளர் ஆவுடையப்பன், "இதை ஒரு தனிப்பட்ட விருப்பம் என்று மட்டும் பார்க்க முடியாது, ஒருவர் மது அருந்துவதும், புகைபிடிப்பதும் அவருடைய தனிப்பட்ட விஷயம் என்றாலும் திரைப்படங்களில் இவற்றை செய்யும் போது அதனால் ஏற்படும் பாதுகாப்புகளை சுட்டிக்காட்டி எச்சரிக்கை வாசகங்கள் ஏன் இடம்பெறுகின்றன.

எச்சரிக்கை வாசகம்

மது குடிப்பது, உடல் நலத்திற்கு கேடு, புகை படிப்பது புற்றுநோயை உண்டாக்கும் என்று எதற்காக அறிவுறுத்தல்கள் போடுகிறார்கள், என்றால் இதை பார்த்து இன்னொருவர் பின்பற்றக் கூடாது என்பதற்காகத்தான். அதே போல இன்று ஒரு பெண் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு மாதம் 3 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார் என்றால் அதை பார்த்து நாளை இன்னொரு பெண்ணும் இதே வழியை தேர்ந்தெடுக்கலாம், படித்து வேறு நல்ல வேலைக்கு போகாமல் இதே மாதிரியே சம்பாதிக்கலாம் என்று எண்ணம் உருவாக கூடும். இது சமுதாயத்தில் தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தும்.

Zee Tamil Awudayappan Social Media Debate

தவறான முன் உதாரணம்

நம் தமிழ் சமூக மரபு இதுபோல உடலைக் காட்டி பணம் சம்பாதிப்பதை ஊக்குவிக்கவில்லை" என்று பதிலடி கொடுத்திருக்கிறார். இந்த ஒரு விஷயத்தை தனிப்பட்ட முறை என்று சொல்லிவிட முடியாது. அது மற்றவர்களிடம் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் பார்க்க வேண்டும் என்பதுதான் அவருடைய விவாதத்தின் சாரம். ஆனால் இங்கேதான் இன்னொரு கேள்வியும் எழுகிறது, பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி பணம் வருகிறது அதற்காக நான் என்ன வேணாலும் செய்வேன் என்பதுபோல சமூக மனநிலை மாறிவிட கூடாது என்பதுதான் பலருடைய கருத்தாகவும் இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+