ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி.. பதவியை ராஜினாமா செய்கிறார் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ?

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் சிக்கியிருக்கிறார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று சொல்லப்படுகிறது.

5 பிரிவுகளில், சில பிரிவுகள் ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளாகும். எனவே அவர் 2 நாட்களில் கைது செய்யப்படுவார் என சொல்லப்படுகிறது. அதற்கு முன்பாகவே அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Kallakurichi tvk tamil nadu

கள்ளக்குறிச்சி தனி தொகுதி தவெக எம்எல்ஏவாக அருள் விக்னேஷ் இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் அம்மாவட்ட பெண் ஆட்சியருக்கு வாட்ஸ் அப் மூலம் ஆபாசமான மற்றும் தகாத குறுஞ்செய்திகளை அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மட்டுமல்லாது நேரில் தவறான நோக்கத்துடன் அணுக முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் குறித்து 4 மாதங்களுக்கு முன்னரே உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும், எந்த நடவடிக்கையும் எம்எல்ஏ மீது எடுக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. விஷயம் சீரியஸான நிலையில், தவெகவுக்கு ஆதரவளித்த இடதுசாரிகள் போராட்ட களத்தில் இறங்கினர். எம்எல்ஏ அருள் விக்னேஷ் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், கைது செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

எப்படி இருக்கையில்.. ஊடகங்களில் வெளியான செய்திகளைத் தொடர்ந்து, தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து இந்த விஷயத்தை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. ஏழு நாட்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டிருந்தது.

மறுபுறம் மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது பாலியல் நோக்கத்துடன் அணுகுதல், ஆபாச கருத்துக்களை தெரிவித்தல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் என ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதில் சில வழக்குகள் ஜாமினில் வெளிவர முடியாத வழக்குகளாக இருப்பதால்.. அடுத்த 2 நாட்களுக்குள் எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையில் அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் ராஜினாமா செய்த பிறகு, அவரைக் கட்சியில் இருந்து நீக்கிவிட்டு.. மீது கைது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+