திருச்செந்தூர் அருகே தாமிரபரணி ஆற்றில் சிக்கிய தங்க மூட்டை! 54 பவுன் நகையை பறிமுதல் செய்த சிபிசிஐடி

Subscribe to Oneindia Tamil

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே தாமிரபரணி ஆற்றில் தங்க மூட்டை சிக்கிய விவகாரத்தில் 54 சவரன் தங்க நகைகள், ரூ.67 ஆயிரம் பணம் ஆகியவற்றை சிபிசிஐடி போலீஸார் பறிமுதல் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், முடுக்குத்தரை சாலையில் கடந்த செப்டம்பர் மாதம் போதைப் பொருள் தடுப்பு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது குடிசை மாற்று வாரியம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த குப்புசாமி, பரமக்குடியைச் சேர்ந்த செல்வராஜ் மற்றும் தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் ஆற்றங்கரை பகுதியைச் சேர்ந்தவர்கள் என மூன்று பேரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

tiruchendur gold

அவர்களிடம் இருந்து சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான 38 தங்கக் கட்டிகள், 28 சவரன் தங்க நகைகள் மற்றும் 12 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் முக்காணி தாமிரபரணி ஆற்றில் வீசிய வலையில் தங்க மூட்டைகள் சிக்கியதாகவும், அவற்றைப் பங்கிட்டுக் கொள்வதற்காக ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

tiruchendur gold

இதுகுறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்களிடம் ஐந்து நாட்கள் விசாரணை நடத்திவிட்டு விடுவித்தனர்.

தாமிரபரணியில் தங்க மூட்டை சிக்கிய விவகாரம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தங்கக் கட்டிகள் எங்கிருந்து வந்தன?, யாருக்காகக் கொண்டு செல்லப்பட்டன?, பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் பின்னணி என்ன?, இந்தப் பொருட்கள் தேச விரோத செயல்களுக்குப் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

tiruchendur gold

இந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவினர், கடந்த 20ஆம் தேதி இரவு சுமார் 7 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் கருப்பசாமி என்பவரது வீட்டில் அதிரடியாகச் சோதனை நடத்தினர்.

tiruchendur gold

சுமார் நான்கு மணி நேரம் நடைபெற்ற இந்தச் சோதனையில், செயின், ஆரம், மோதிரம், கைச்செயின், கம்மல் உள்ளிட்ட 54 சவரன் தங்க நகைகள் மற்றும் 67 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையின்போது, தசரா விழாவிற்குத் தேவையான முடி உள்ளிட்ட வேடப்பொருட்களைத் தயாரித்துக் கொடுத்ததன் மூலம் இந்த நகைகள் மற்றும் பணத்தைச் சம்பாதித்ததாக கருப்பசாமி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

tiruchendur gold

இருப்பினும், நான்கு மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார், தங்க நகைகள் மற்றும் பணத்தைப் பறிமுதல் செய்துவிட்டுச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+