திமுக மகளிரணி ஆவேசம்! தவெக எம்எல்ஏ உருவ பொம்மை எரிப்பு.. திடீரென வெடித்த போராட்டம்!

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக எழுந்த புகாரில், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை கைது செய்ய வலியுறுத்தி திமுக மகளிரணி நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நான்கு முனை சந்திப்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தின்போது, எம்எல்ஏவின் உருவ பொம்மையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், பொது நிகழ்ச்சிகளில் முறையற்ற வகையில் நடந்துகொண்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரம் இப்போது பெரிதாக வெடித்துள்ளது.

DMK women

இப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என முதலில் தவெக தரப்பு தொடர்ந்து கூறி வந்தது. அமைச்சர்கள் முதல் தவெக நிர்வாகிகள் வரை அனைவருமே இதையே தான் சொன்னார்கள். ஆனால், நீதிமன்ற தலையீட்டிற்கு பிறகு நிலைமை மாறியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பெண் அதிகாரியிடம் வாக்குமூலமும் பெறப்பட்டது.

உருவ பொம்மை எரிப்பு

இதற்கிடையே கள்ளக்குறிச்சியில் திமுக மகளிரணி சார்பில் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை கண்டித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் திமுக மகளிரணி சார்பில் கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷிற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பெண்கள் கையில் ஏந்தியவாறு, கைது செய்ய வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

தொடர்ந்து அருள் விக்னேஷிற்கு எதிராக உருவ பொம்மை எரிக்கப்பட்டது. உடன் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உருவ பொம்மையை இழுத்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். தொடர்ந்து நான்கு முனை சந்திப்பில் பெண்கள் கூட்டமாக நின்று கோஷமெழுப்புவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கடந்து வந்த பாதை

சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களை வைத்து முதலில் திமுக எம்பி கனிமொழி நவம்பர் 9ஆம் தேதி இந்த விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பினார். மறுநாள் அருள் விக்னேஷ் குற்றச்சாட்டுகளை மறுத்தார். நவம்பர் 12ஆம் தேதி சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், ஆதாரமற்ற தகவல்களை கனிமொழி பகிர்ந்ததாக கூறினார். இருப்பினும், நவம்பர் 15ஆம் தேதி தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தவும், ஏழு நாட்களுக்குள் அறிக்கை அளிக்கவும் தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டது.

அதிமுகவின் திரிசூலி இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தையும் அணுகினார். நேற்று முன்தினம் நடந்த விசாரணையின்போது, ஆட்சியரிடமிருந்து புகார் வரவில்லை என்று அரசு தரப்பு தெரிவித்தது. இதையடுத்து விவரங்களை சரிபார்க்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மறுநாளே ஆட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. திருப்பூர் எஸ்பி சிருஷ்டி சிங் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐஜி என். காமினி கண்காணிக்கிறார். அதைத் தொடர்ந்தே இன்று அருள் விக்னேஷ் விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் சம்மன் வழங்கினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+