தொட்டதுக்கெல்லாம் அரெஸ்ட்டா? கள்ளக்குறிச்சி எம்எல்ஏ-ஐ கைது செய்யனுமா? கார்த்தி சிதம்பரம் பளிச் பதில்

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: கள்ளகுறிச்சி ஆட்சியரின் உடமைக்கும் உயிருக்கும் சம்பந்தப்பட்ட எம்எல்ஏவால் ஆபத்து இருக்கிறது என்றால் அவரை கைது செய்யலாம். அது போன்ற பாதிப்பு இல்லை என்றால் அவரை கைது செய்ய வேண்டியதில்லை என்பது தான் என் கருத்து எனவும், எல்லோரையும் கைது செய்ய வேண்டும் தொட்டதுக்கெல்லாம் கைது என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்," எல்லோரையும் கைது செய்ய வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. தொட்டதுக்கெல்லாம் கைது என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் முழுமையான விசாரணைக்கு பின் தெரியும்.

எம்எல்ஏவை கைது செய்ய வேண்டிய வழக்கு போல் இது அல்ல. அதே வேளையில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். உதயநியையும் கைது செய்து அழைத்து சென்றதும் தவறு தான். 75 சதவீத கைதுகள், டிவி ஷோவிற்காகத்தான் நடந்துகின்றனர்.

Karti Chidambaram TVK Congress

கார்த்தி சிதம்பரம்

அவர் வெளியே இருப்பதால் ஒருவரின் உயிருக்கு, உடைமைக்கோ ஆபத்து இல்லை என்று காவல்துறை நினைத்தால் அவரைக் கைது செய்ய வேண்டாம். அனைத்து வழக்கிலும் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்பது தேவையில்லாத ஒன்று. 75% வழக்குகளில் கைது செய்யாமலேயே விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து பின்னர் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத் தரலாம்.

ஆட்சியர் விவகாரம்

வழக்கு முடியும் வரை யாரும் ஜெயிலில் இருக்கக் கூடாது. தண்டனை அறிவித்த பின்பு தான் ஜெயிலுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது என் கருத்து. கள்ளகுறிச்சி ஆட்சியரின் உடமைக்கும் உயிருக்கும் சம்பந்தப்பட்ட எம்எல்ஏவால் ஆபத்து இருக்கிறது என்றால் அவரை கைது செய்யலாம். அது போன்ற பாதிப்பு இல்லை என்றால் அவரை கைது செய்ய வேண்டியதில்லை என்பது தான் என் கருத்து. செங்கோட்டையனை தவிர இந்த ஆட்சியில் வேறு யாரும் இதற்கு முன்பாக அமைச்சர்களாக இருந்தவர்கள் அல்ல.

தவெக அமைச்சர்

அவர்கள் ஆட்சி அதிகாரம் குறித்து முழுமையாக உணரவில்லை. முதல்வர் விஜய் அதிகமாக கம்யூனிகேட் பண்ண வேண்டும் என்பது என் கருத்து. தவெக அமைச்சர் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பேசியது தவறு தான். TVK ஐ தவிர்த்து விட்டு தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் வேறு யாரும் ஆட்சி அமைக்க முடியாது. அதனால் இந்த ஆட்சிக்கு தற்போது எந்த ஆபத்தும் இல்லை.

துரை வைகோ

திருச்சி எம்பி துரை வைகோ என்னை பண்ணையார் என்று சொன்னது தவறில்லை. அவர் என்னை மகாராஜா என்று சொல்லவில்லையே எனத்தான் ஏமாற்றமடைகிறேன். நான் ஒன்றும் உழைத்து முன்னுக்கு வரவில்லை. எனது குடும்பம் செல்வந்தர் குடும்பம். எனது அப்பா முதல் பாட்டன் வரை செல்வந்தர்கள். அந்த வழியில் தான் நான் வந்துள்ளேன். அதனால் பண்ணையார் என்ற வார்த்தை எனக்கு தவறாக தெரியவில்லை" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+