கார்த்திகை தீபத்தில் கருகிய உயிர்.. தீப்பற்றி 2 வயது சிறுமி பலி! சென்னையை உலுக்கிய சோகம்! எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாதவரம் அருகே பொன்னியம்மன்மேடு கணபதி நகர் பகுதியில் கார்த்திகை தீபம் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை காப்பாற்ற முயன்ற தந்தைக்கு சுமார் 85 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ள ந்லையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாதவரம் அருகே பொன்னியம்மன்மேடு கணபதி நகர் பகுதியில் குறுகிய சாலையின் இருபுறங்களிலும் வீடுகள் அமைந்துள்ள நிலையில், பொதுமக்கள் கார்த்திகை தீபத்திற்காக விளக்குகள் ஏற்றி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

Karthigai Deepam Fire Accident crime

அப்போது டீசல் கேனை எடுத்துச் சென்ற லாரி ஓட்டுநரின் கையில் இருந்து கேன் தவறி கீழே விழுந்து, அருகில் எரிந்து கொண்டிருந்த விளக்கில் பெட்ரோல் பட்டு தீப்பற்றியது. தீ மளமளவென பரவியதில் அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தீயில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

அப்பொழுது குழந்தையை காப்பாற்ற முயற்சித்த தந்தைக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் சத்தம் போட்ட நிலையில் அருகில் இருந்தவர்கள் குழந்தையை காப்பாற்ற முயன்றனர். தீ அதிகமாக பரவிய நிலையில் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதை அடுத்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், சிறுமியின் தந்தையினை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலில் சுமார் 85 சதவீத தீக் காயங்கள் ஏற்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானதால் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார்த்திகை தீபத் திருநாளில் நிகழ்ந்த இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+