5 கிலோ தங்கம் எவ்வளவுனு கேளுங்க.. தாறுமாறாக சரிந்த தங்கத்தின் விலை! அமெரிக்கா தான் காரணமாமே! ஏன்?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கடந்த சில தினங்களாகவே தங்கத்தின் விலை தொடர் வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில் தற்போது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அமெரிக்காவில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக வெளியான தகவல்களால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடுமையான சரிவைச் சந்தித்திருக்கிறது. இன்று ஒரே நாளில் 3 சதவீதம் வரை தங்கத்தின் விலை சரிந்து இருக்கிறது. குறிப்பாக கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்த விலையை தங்கம் எட்டி இருக்கும் நிலையில் அதனை வாங்கி குவித்தவர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

உலக அளவில் கடந்த சில ஆண்டுகளாக பேசுபொருளாக இருப்பது தங்கம் தான். கடந்த 2025 ஜனவரி மாதத்தில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 7,150 ஆகவும், ஒரு சவரன் விலை 61,840 ஆக இருந்தது. ஆனால் அதற்குப் பிறகுதான் தங்கத்தின் விலை உயர்வானது வேகம் எடுக்க தொடங்கியது.

Gold Price Gold Inflation

2025 இறுதி வரை தங்கத்தின் விலை ஒரு லட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதே போல் தான் நடந்தது. 2026 தொடக்கத்தில் இருந்து போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை நிலையில்லாமலே இருக்கிறது.

சாதாரணமாக போர், பொருளாதார அசாதாரண சூழ்நிலை போன்ற சூழலில் தங்கம் பாதுகாப்பான முதலிடம் கருதப்படுவதால் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக அமெரிக்கா ஈரான் இடையிலான போர் காரணமாக தங்கத்தின் விலை அதிகரிக்கும் என முதலீட்டாளர்கள் பலரும் தங்கத்தை வாங்கி குவித்தனர். ஆனால் தங்கத்தின் விலையானது திடீரென அதல பாதாளத்தை நோக்கி பயணித்தது. தற்போது தங்கத்தின் விலை மிக மோசமாகவே இருக்கிறது என்கின்றனர்.

அமெரிக்கா மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதம் தொடர்பான அடுத்த கட்ட முடிவுகளை எடுக்கும் போது பணம் வீக்க நிலவரத்தை கணக்கில் எடுத்துக் கொள்வது வழக்கம். குறிப்பாக அமெரிக்காவின் தனிநபர் நுகர்வு செலவின விலை குறியீடு (PCE) பணவீக்கத்தை அளவிடுவதற்கான முக்கிய குறியீடாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் PCE பணவீக்க தரவுகள் வெளியாக இருந்ததால் முதலீட்டார்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டனர்.

இதனால் தங்கச் சந்தையில் விலை ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டது. நேற்று (புதன்கிழமை) நிலவரப்படி சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 3500 டாலராக இருந்தது. அதற்கு முன்பு 2 சதவீதத்திற்கும் மேல் விலை சரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது டிசம்பர் மாத டெலிவரிக்கான அமெரிக்க பியூச்சர் கோல்டு விலையும் 0.1 சதவீதம் குறைந்து 3,445.89 டாலராக இருந்தது. இது முதலீட்டாளர்களை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

தங்கத்தின் விலை சரிவுக்கு பங்குச் சந்தையில் ஏற்பட்ட விற்பனை அழுத்தமும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. பங்குச் சந்தையில் ஏற்பட்ட இழப்புகளை சமாளிக்கவும் மார்ஜின் தொகையை செலுத்தவும் முதலீட்டாளர்கள் தங்களிடம் இருந்த தங்கம் உள்ளிட்ட சொத்துக்களை விற்பனை செய்ததாக ஏஎன்இசட் வங்கியின் ஆய்வாளர் சோனி குமாரி தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு அச்சுறுத்தல்களும் ஆசிய பங்குச் சந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் சரிந்ததால் சிப் (chip) உற்பத்தி நிறுவனங்கள் அதிகம் உள்ள சந்தைகளில் விற்பனையில் தொய்வு ஏற்பட்டது

அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்தால் ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தவோ அல்லது தற்போதைய அளவிலேயே நீட்டிக்க வாய்ப்புள்ளது. வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் போது வட்டி வருவாய் அளிக்காத தங்கத்தில் முதலீடு செய்வதற்கான ஆர்வம் குறையும். இதுவும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

CME FedWatch கணிப்பின்படி டிசம்பர் மாத ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் 25 அடிப்படை புள்ளிகள் அளவுக்கு வட்டி விகித உயர்வு ஏற்பட 96 சதவீத வாய்ப்பு இருப்பதாக சந்தை வட்டாரங்கள் கணித்துள்ளன. 50% அடிப்படை புள்ளிகள் உயர்வுக்கு 3 சதவீத வாய்ப்பு மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கத்தை போலவே மற்ற உலோகங்களின் விலையிலும் மாற்றம் காணப்பட்டது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளி விலை 40 டாலராக இருக்கிறது. பிளாட்டினம் விலை ஒரு சதவீதம் சரிந்து 1263 டாலராக உள்ளது. அதே நேரத்தில் பல்லேடிஎம் விலை 0.3 சதவீதம் உயர்ந்து 856.11 டாலராக இருக்கிறது.

அதே நேரத்தில் தங்கத்தின் விலை தற்போது சரிவைச் சந்தித்தாலும் இந்த வீழ்ச்சி நீண்ட காலம் தொடராது என ஓசிபிசி வங்கியின் ஆய்வாளர்கள் கனத்துள்ளனர். தங்கத்தின் விலை சரிவு இப்போது இருந்தாலும் ஒரு கட்டத்தில் விலை மீண்டும் உயரத் தொடங்கும் என்றும், 2027 ஆம் ஆண்டின் தொடக்கம் வரை இந்த சரிவு தொடரலாம் எனவும் அதற்குப் பிறகு விலை உயர்வு அதிகமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+