அமெரிக்காவால் சட்டென சரிந்த தங்கம் விலை! சவரனுக்கு 2,360 குறைந்தது! உடனே வாங்கி போடுங்க!
சென்னை: சர்வதேச அளவில் நடக்கும் பொருளாதார மாற்றம் காரணமாக தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது. இன்று சவரனுக்கு ரூ.2,360 சரிந்து ஒரு கிராம் ரூ.91,360 என விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல கிராமுக்கு ரூ.295 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,420 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியை பொறுத்தவரை கிராமுக்கு ரூ.10 சரிந்து ரூ.165க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல கிலோ ரூ.10,000 சரிந்து ரூ.1,65,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து சரிந்து வருவதால், நீண்ட கால முதலீட்டுக்காக.. இதில் யாரும் முதலீடு செய்ய வேண்டாம் என்று முதலீட்டாளர்கள் கூறியிருக்கின்றனர்.

லாபம் எங்கு வருகிறதோ அங்கு பணத்தை போடுவதுதான் புத்திசாலித்தனம். உலகம் முழுவதும் இருக்கும் பணக்காரர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வரை தங்கத்தில் லாபம் பார்த்திருந்தனர். ஆனால், தற்போது அமெரிக்காவின் மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்த இருக்கிறது. எனவே, கடன் பத்திரங்கள்தான் அதிக வட்டியை தரும், லாபத்தை தரும் என்பதை முதலீட்டாளர்கள் உணர்ந்திருக்கிறார்கள். இதன் காரணமாக தங்கத்தில் காசு போடுவதற்கு பதில், கடன் பத்திரங்களை வாங்கி குவித்து வருகிறார்கள். எனவே தங்கத்திற்கான மவுசு குறைந்திருக்கிறது.
டிசம்பர் மாதம் தனது வட்டியை மீண்டும் உயர்த்த அமெரிக்க மத்திய வங்கி முடிவெடுக்கலாம் என்று சொல்லப்படுகிறது. எனவே அதுவரை காத்திருந்து, அதற்கு பின்னர் எதில் முதலீடு செய்வது என முதலீட்டாளர்கள் முடிவெடுப்பார்கள். அதிலும் குறிப்பாக, அமெரிக்காவின் அக்டோபர் மாத நுகர்வோர் செலவின பணவீக்க டேட்டா இப்போது வெளியாகியுள்ளது. அதில் பணவீக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், அமெரிக்கா வட்டி விகிதத்தை உயர்த்தவே வாய்ப்பு அதிகம்.
பணவீக்கம் அதிகரித்திருக்கிறது என்பதால் வட்டி விகிதத்தை அதிகரிக்க முடிவெடுக்கும். வட்டி அதிகரித்தால்.. முதலீட்டாளர்கள் கடன் பத்திரங்களை நோக்கி ஓடுவார்கள். இதனால் தங்கத்தின் விலை குறையும். இந்த அறிக்கைகாகத்தான் முதலீட்டாளர்கள் காத்திருந்தனர். எனவேதான் தற்போது தங்கத்தின் விலை சரிவை சந்தித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications
