3 நாட்கள் ஹோட்டல் வாசலை விட்டு நகரல! மும்பை தாக்குதலுக்கு ரோட்டிற்கே வந்த ஒரே தொழிலதிபர் ரத்தன் டாடா

Subscribe to Oneindia Tamil

மும்பை: 18 ஆண்டுகளுக்கு இதே நாளில் தான் பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகள் மும்பையில் பல முக்கிய இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். வரலாற்றில் மறக்கவே முடியாத நாளாக அமைந்த இந்த நாளில் 166 பேர் கொல்லப்பட்டு இருந்தனர். இந்த நாளில் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து பயங்கரவாத தாக்குதலை முறியடிக்க உதவினர்.

2008 நவம்பர் 26ம் தேதி.. பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் இந்தியாவையே உலுக்கியது. தாஜ் ஹோட்டல், மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தக் கொடூர சம்பவத்தில் 166 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

26 11 Mumbai Terror Attack Ratan Tata Mumbai Terror Attack

ரத்தன் டாடா

இந்த தாக்குதலின் நினைவுகள் இன்றும் மறக்க முடியாதவை. அந்த நேரத்தில், தாஜ் ஹோட்டலுக்கு வெளியே ரத்தன் டாடா தொடர்ந்து 3 நாட்கள் காத்திருந்த போட்டோ இப்போதும் கூட அவ்வப்போது டிரெண்டாகும். தாக்குதல் நடந்தபோது ரத்தன் டாடாவுக்கு 70 வயது. அப்போது டாடா குழுமத்தின் தலைவராக இருந்த அவர், தாஜ் ஹோட்டலில் துப்பாக்கிச்சூடு நடப்பதாகத் தகவல் கிடைத்ததும் பதற்றமடைந்தார். ஹோட்டலின் தொலைபேசியை தொடர்புகொள்ள முயன்றும் பதில் கிடைக்கவில்லை. இதையடுத்து சற்றும் தாமதிக்காமல் நேரில் அங்கு சென்றுவிட்டார்.

வெளியே நின்ற டாடா

ஆனால், தாக்குதல் தொடர்ந்து கொண்டிருந்ததால் பாதுகாப்புப் பணியில் இருந்த வீரர்கள் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் ஹோட்டலின் கொலாபா முனையில் வெளியே நின்றபடியே நிலைமையை கவனித்தார். பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் நடத்திய ஆபரேஷன் முழுமையாக முடிவுக்கு வரும் வரை, தொடர்ந்து மூன்று நாட்கள் அங்கேயே காத்திருந்தார்.

இந்த சம்பவத்தை நேஷனல் ஜியோகிராஃபிக் ஆவணப்படத்தில் ரத்தன் டாடாவே நினைவுகூர்ந்துள்ளார். தாக்குதலின்போது தாஜ் ஹோட்டலில் சுமார் 300 பேர் இருந்ததாக குறிப்பிட்டார். அந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைத்தாலே தனக்கு மனவேதனை ஏற்படுவதாகவும் அந்த வரலாற்று சிறப்புமிக்க கட்டிடத்துக்கு ஏற்பட்ட சேதமும் கவலையை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

உதவி செய்ய முடிவு

தாக்குதல் முடிவடைந்த பிறகு, தாஜ் ஹோட்டலை மீண்டும் பழையபடி சீரமைக்க ரத்தன் டாடா முடிவு செய்தார். இது அனைவரும் செய்வது தான். ஆனால், ரத்தன் டாடா ஒருபடி மேலே சென்று, தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதிலும் கவனம் செலுத்தினார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, அவர்களின் நலன் குறித்து விசாரித்தார். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய உறுதி அளித்தார்.

வெறும் வாய் வார்த்தையோடு நின்றுவிடாமல் கையோடு அதற்கான நடவடிக்கையும் எடுத்தார். மும்பை தாக்குதலில் 166 பேர் உயிரிழந்த நிலையில், தாஜ் ஹோட்டல் வளாகத்தில் மட்டும் 33 பேர் கொல்லப்பட்டனர். அவர்களின் குடும்பங்களுக்கு பல ஆண்டுகள் தொடர்ந்து உதவும் வகையில் டாடா குழுமம் 'தாஜ் பப்ளிக் சர்வீஸ் வெல்ஃபேர் டிரஸ்ட்' என்ற அறக்கட்டளையை உருவாக்கியது. தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்வது மட்டுமே இந்த அறக்கட்டளை நோக்கமாகும்.

வேதனை

கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி, தாக்குதலின் 12வது ஆண்டு நினைவு நாளில் ரத்தன் டாடா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டிருந்தார். அதில், 12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அழிவை ஒருபோதும் மறக்க முடியாது என்றும், ஆனால் அன்றைய தினம் மும்பை மக்கள் தங்களுக்குள் இருந்த வேறுபாடுகளை கடந்து ஒன்றிணைந்து பயங்கரவாதத்தை எதிர்கொண்ட விதம்தான் இன்னும் நினைவில் நிற்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதுடன், பயங்கரவாதிகளை எதிர்த்து போராடிய துணிச்சலானவர்களின் தியாகத்தையும் மதிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+