சவ்ரவ் தாஸ்க்கு ‘லுக் அவுட்' நோட்டீஸ்.. லண்டன் பயணம் தடுக்கப்பட்டது ஏன்? கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டு சென்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரான சவ்ரவ் தாஸ் குடியுரிமை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனை எதிர்த்து சவ்ரவ் தாஸ் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது சவ்ரவ் தாஸ்க்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் மத்திய அரசு சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

look-out-notice-issued-against-saurav-das-says-union-government-to-delhi-high-court

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் சவ்ரவ் தாஸ் கடந்த 23ம் தேதி நள்ளிரவில் டெல்லி விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட தயாராக இருந்தார்.

லண்டனில் .ள்ள ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஸ், எல்எஸ்இ, எடின்பர்க் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களில் மாணவர்களுடன் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தொடர்பாக கலந்துரையாடுவதற்கான அவர் புறப்பட டெல்லி விமான நிலையம் வந்தார்.

அப்போது டெல்லி விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சவ்ரவ் தாஸை தடுத்து நிறுத்தினர். இதனால் அவரால் லண்டனுக்கு செல்ல முடியவில்லை. அவரது பாஸ்போர்ட்டுக்கு ஆட்சேபனை தெரிவித்து இந்த பயணத்தை பிரதமர் மோடியின் மத்திய அரசு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாக குற்றம்சாட்டி சவ்ரவ் தாஸ் வீடியோ வெளியிட்டு இருந்தார்.

இந்த சம்பவத்திற்கு எதிராக சவ்ரவ் தாஸ் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். தன்னை லண்டன் பயணத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் சவ்ரவ் தாஸ்க்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேத்தன் சர்மா வைத்த வாதத்தில், ''சவ்ரவ் தாஸ்க்கு எதிராக கடந்த 23ம் தேதி 'லுக்அவுட்' நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மும்பை காவல்துறையின் உத்தரவை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதோடு சவ்ரவ் தாஸ் பாஸ்போர்ட்டில் அவரது பிறந்த இடம், பள்ளி படிப்பு, முகவரி மற்றும் பெற்றோர் குறித்த விவரங்களில் முரண்பாடுகள் உள்ளன. இது அவரது இந்திய குடியுரிமை குறித்த கேள்விகளை எழுப்புகிறது. இதுதொடர்பாக சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சவ்ரவ் தாஸ்க்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரப்பட்டுள்ளது'' என்றார்.

இதற்கு சவ்ரவ் தாஸ் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். 'லுக் அவுட்'நோட்டீஸ் பிறப்பித்தது பற்றிய எந்த விவரத்தையும் தங்களுக்கு வழங்கப்பவில்லை என்றார். பொதுவாக ஒருவருக்கு 'லுக்அவுட்' நோட்டீஸ் பிறப்பித்தால் அவரால் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது.

அதுமட்டுமின்றி 'லுக்அவுட்' நோட்டீஸ் என்பது இந்தியாவில் ஏதாவது குற்றத்தில் ஈடுபடும் நபர் வெளிநாடு தப்பிக்கும் வாய்ப்பு இருந்தால் அதனை தடுத்து நிறுத்த பிறப்பிக்கப்படும். தற்போது சவ்ரவ் தாஸ் மீது டெல்லி ஜந்தர் மந்தரில் தடையை மீறி போராடிய வழக்கு உள்ளது. இதுதவிர பெங்களூர், மும்பை உள்பட பல இடங்களில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டத்தை முன்னின்றி நடத்தியதில் முக்கிய நபராக உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+