நீங்கள் அரசியலமைப்பையே சீர்குலைத்துவிட்டீர்கள்! மதுரை கலெக்டரைக் கடுமையாக விளாசிய உச்ச நீதிமன்றம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணாவின் செயல்பாட்டை உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளது. நீங்கள் செய்திருப்பது அரசியலமைப்புச் சீர்குலைவு என நீதிபதிகள் காட்டமாகத் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் இன்றே சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பிக்க உள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், "உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்த முடியவில்லை என்பதை நாங்கள் உடனடியாக இந்த நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்துவிட்டோம்" எனக் கூறினார்.

What You Have Done Is Constitutional Chaos Supreme Court Slams Madurai Collector

இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்த மத்திய அரசுத் தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா, உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தி அவமதிப்பைச் சரிசெய்யும் வரை, அவர்களது வாதத்தை நீதிமன்றம் கேட்கக் கூடாது என வலியுறுத்தினார்.

தலைமைச் செயலாளர், டிஜிபி பெயரைக் கேட்ட நீதிபதிகள்

தொடர்ந்து, தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் திரும்பிய நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தினீர்களா? தமிழகத்தின் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறைத் தலைவர் ஆகியோரின் பெயர்கள் என்ன?" எனக் கேள்வி எழுப்பினர். அதற்குத் தமிழக அரசுத் தரப்பில், "தலைமைச் செயலாளர் சாய் குமார் ஐஏஎஸ், டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ்" எனப் பதிலளிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் நாங்கள் இன்றே சில உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டியிருக்கும் என நீதிபதிகள் அதிரடியாகத் தெரிவித்தனர்.

மதுரை கலெக்டருக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி

இதற்குப் பதிலளித்த மதுரை ஆட்சியர் தரப்பு மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், அவமதிப்பு மனுக்களுக்குப் பதிலளிக்கத் தங்களுக்குச் சற்று கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரினார். மேலும் அவர் வாதிடுகையில், தொல்லியல் துறை அதிகாரிகளைத் தமிழகப் போலீசார் தடுத்து நிறுத்தியதாகக் கூறுவது பொய். தொல்லியல் துறை அதிகாரிகளுடன் பலகட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி உத்தரவை மீற முடியாது என்பதை நானே சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒப்புக்கொண்டேன் எனத் தெரிவித்தார்.

உடனே குறுக்கிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாகக் கேள்வி எழுப்பினர்:

உச்ச நீதிமன்றம்: உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துவோம் என்றுதானே நீங்கள் உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்தீர்கள்?

மதுரை கலெக்டர்: ஆம், உறுதியளித்தோம். ஆனால், நான் நேரடியாகச் சென்று தீபத்தை ஏற்ற முடியாது அல்லவா?

மாவட்ட ஆட்சியரின் இந்தப் பதிலால் கடும் கோபமடைந்த நீதிபதிகள், நீங்கள் செய்திருப்பது... அரசியலமைப்புச் சீர்குலைவு எனக் கடுமையாகச் சாடினர்.

அதிகரிக்கும் சட்ட நெருக்கடி

இதற்கிடையில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானபோது, "இவர்தான் இந்த விவகாரத்தில் சிக்கலில் மாட்டிக்கொண்ட முக்கிய நபர்" என நீதிபதிகள் குறிப்பிட்டனர். உயர் நீதிமன்றத்தில் உத்தரவைச் செயல்படுத்துவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, இறுதியில் தீபத்தூணில் தீபம் ஏற்றாமல் தவிர்த்ததால், தமிழக அரசும் உயர் அதிகாரிகளும் உச்ச நீதிமன்றத்தின் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர். இன்று உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கப்போகும் உத்தரவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+