ஏற்காடு மலைப்பாதையில் 12 வயது சிறுமியின் சடலம்! யார் இவர்? கத்திரிப்பூ நிற கவுனில் கிடைத்த துப்பு!

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப் பாதையில் நேற்று அதிகாலை இறந்த நிலையில் 30 அடி ஆழ பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட 12 வயது சிறுமி யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. அந்த சிறுமி கடையின் பெயர், விலையுடன் கூடிய ஸ்டிக்கரை கூட பிரிக்காத கத்திரிப்பூ நிறத்தில் கவுன் அணிந்திருந்தார்.

ஏற்காடு மலைப் பாதையில் இறந்திருந்த சிறுமி சாம்பல் நிற ஜெர்கினும், கத்திரிப்பூ கலர் கவுனும் அணிந்திருந்தாராம். அவர் அணிந்திருந்த கத்திரிப்பூ கலர் கவுன் புதிதாக வாங்கப்பட்டது போல் தெரிகிறது. அந்த கவுனில் உள்ள கடையின் பெயரை வைத்து அந்த கடையில் சிறுமி குறித்து ஏதேனும் துப்பு கிடைக்குமா என்பதை அறிய போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

yerkaud salem

மேலும் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் சிறுமி யாரேனும் மாயமாகியுள்ளனரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது. மேலும் வெளிமாநிலங்களில் யாரேனும் சிறுமியை கொலை செய்து ஏற்காட்டில் வீசி சென்றனரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது.

சிறுமி குறித்து தகவல் தெரிந்தால்..

சிறுமி குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் 94981-00979, 0427 2273100 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். சேலம் - ஏற்காடு அருகே குப்பனூர் மலைப் பாதையில் வழுக்குப் பாறை பகுதியில் 30 அடி ஆழத்தில் 15 வயது சிறுமியின் உடல் இருப்பதை அப்பகுதியில் சென்றவர்கள் பார்த்தனர்.

சடலம் அருகே பீர்பாட்டில்கள்

இதையடுத்து அவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், 30 அடி பள்ளத்தில் இருந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த சிறுமி யார் ,எந்த ஊரை சேர்ந்தவர் உள்ளிட்ட விவரங்கள் விசாரணை நடத்தப்படுகிறது. அவருக்கு 12 வயது இருக்கும். அவரது சடலத்தின் அருகே பீர் பாட்டில்கள் இருந்தன. அவரது உடல் மீது துணி போர்த்தப்பட்டிருந்தது.

சிறப்பு படை விசாரணை

தகவல் அறிந்து சேலம் சரக டி.ஐ.ஜி. தேவராணி, மாவட்ட எஸ்பி குத்தாலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இந்த சிறுமி இந்த இடத்திற்கு தனியே எப்படி வந்தார். அவர் சுற்றி பார்த்த போது கால் தவறி விழுந்தாரா? அப்படியே விழுந்திருந்தாலும் அவருடன் வந்தவர்கள் இதுவரை போலீஸில் புகார் கொடுக்காதது ஏன் என்பன உள்ளிட்ட பல கேள்விகளுடன் தனிப்படை போலீஸார் தேடி வருகிறார்கள்.

யார் இந்த ஹேமலதா?

ஏற்கெனவே செஞ்சி ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமியை காணவில்லை. அவர் காணாமல் போய் 45 நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் அவரை சிபிசிஐடி போலீஸார் தேடி வருகிறார்கள். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை.

செஞ்சி சிறுமி மாயம்

அந்த சிறுமி உயிருடன்தான் இருக்கிறார் என கருதப்படுகிறது. சிபிசிஐடி போலீஸார், சிறுமியின் தாய் பவானி, பாட்டி சாந்தி, தந்தை வடிவேல் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் அவர் எங்கிருக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை. சிறுமியை யாரோ மறைத்து வைத்திருக்கிறார்கள் என போலீஸார் கருதுகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் ஏற்காடு மலைப் பாதையில் 12 வயது சிறுமியின் சடலம் கிடைத்துள்ளதால் அப்பகுதியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+