"யாருக்கும் அனுமதி இல்லை.." ஆபாச மெசேஜ் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கு! சென்னை ஐகோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதாக கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. கடந்த முறை நீதிமன்ற கண்டிப்புக்கு பிறகு வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரமடைந்திருந்தது. இதற்கிடையே இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சம்பந்தப்பட்ட இரு தரப்பு வழக்கறிஞரை தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை என கூறிய நீதிபதி, வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்.

பெண் மாவட்ட ஆட்சியருக்கு எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாசமான மெசேஜ்களை அனுப்பியதாக புகார் எழுந்தது. மேலும், அவரது அதிகாரப்பூர்வ இல்லத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்றதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் வழக்கறிஞர் திரிசுலி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

TVK Kallakurichi

சென்னை ஐகோர்ட்

இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்ததாகவும் இருப்பினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறியிருந்தார். இந்த வழக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வி. லட்சுமிநாராயணன், கடந்த நவம்பர் 24ஆம் தேதி சில கடுமையான கேள்விகளை எழுப்பினார்.

அப்போது இது தொடர்பாக புகார் எதுவும் வரவில்லை என முதலில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், அன்றைய தினமே மாவட்ட ஆட்சியர் புகாரளித்திருந்தார். அதன் அடிப்படையில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எம்எல்ஏ மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை மறுநாள் நீதிமன்றத்திலும் அரசு தெரிவித்தது.

விசாரணை

எம்எல்ஏ மீதான வழக்கு என்பதால் விசாரணையை திருப்பூர் எஸ்பி ஸ்ரிஷ்டி சிங் மேற்கொள்ளவும், ஐஜி காமினி கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டது. மேலும், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின்படி விசாரணை குழுவை அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளம் மற்றும் புகார் தொடர்பான ரகசிய விவரங்களை வெளியிடக் கூடாது என்றும் ஆட்சேபனைக்குரிய பதிவுகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையை முடித்து டிசம்பர் 22ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அருள் விக்னேஷ்

இதற்கிடையே எம்எல்ஏ அருள் விக்னேஷுக்கு போலீசார் நவம்பர் 25ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அளித்தனர். மேலும், பாதிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது. இந்த சூழலில் தான் இன்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பாலியல் தொல்லை தொடர்பான வழக்கு என்பதால் பாதிக்கப்பட்டவரின் பெயர், விவரங்கள் பகிரக்கூடாது.. ஆனால், இதில் அனைத்தும் பகிரப்படுவதாக நீதிபதி வேதனை தெரிவித்தார்.

வழக்கு விசாரணையின் போது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்ஆர் இளங்கோ, இந்த விவகாரத்தில் உதயநிதி எந்தவொரு சட்ட விதிகளையும் மீறவில்லை என தெரிவித்தார்.

யாருக்கும் அனுமதி இல்லை

இதையடுத்து கள்ளக்குறிச்சி எம்எல்ஏ தொடர்பான வழக்கு விசாரணை பிற்பகல் 3.30 மணிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். அப்போது சம்பந்தப்பட்ட இரு தரப்பு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் இதர வழக்கறிஞர்கள், ஊடகத்தினர் உள்ளிட்ட வேறு யாருக்கும் அனுமதி இல்லை என்றும் நீதிபதி தெரிவித்தார். மேலும், வழக்கை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக விசாரிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+