மதுரை ரயில்வே ஸ்டேஷன் உச்சியில் தீபம் ஏத்துவோம்.. தடுக்க முடியுமா? சவால் விட்ட அஸ்வினி வைஷ்ணவ்!
சென்னை: உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டும், கார்த்திகை தீபத்தன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. அதற்கு பதிலாக உச்சிப் பிள்ளையார் கோவிலில் தான் வழக்கம் போல் தீபம் ஏற்பட்டது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக மக்களுக்கு நியாயத்தை வழங்க வேண்டும் எனவும், உலகத்தரத்தில் நவீனமாயத்மாக்கப்பட்டு வரும் மதுரை சந்திப்பு ரயில் நிலைய கட்டிடத்தின் உச்சியில் தீபம் ஏற்றப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள கிருஷ்ண கான சபாவில் தமிழக பாஜக சார்பில் அரசியலமைப்பு தின விழா நடைபெற்றது. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர்," சாதாரண ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்.. ரயில் பிளாட்பாரத்தில் தனது வாழ் நாளை கழித்தவர் இன்று நாட்டின் பிரதமராக இருக்கிறார். இதற்கு அரசியலமைப்புச் சட்டம் தான் காரணம். தமிழகத்துக்கு வெறும் 870 கோடி ரூபாய் மட்டுமே பிரதமர் மோடி ஆட்சிக்கு முன்பாக வழங்கப்பட்டது. அது காங்கிரஸ் அரசு என்பது அனைவருக்கும் தெரியும்.

அஸ்வினி வைஷ்ணவ்
ஆனால், பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக் காலத்தில் தற்போது 7600 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது அதைவிட பல மடங்கு அதிகம். தற்போது மட்டும் ரயில்வே மேம்பாட்டு 48 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதல் நிதி ஒதுக்கவும் மோடி அரசு தயாராக இருக்கிறது. ஆனால் ரயில்வே திட்டங்களுக்கு தேவையான நிலங்களை ஒதுக்கீடு செய்ய மாநில அரசுக்கு தான் அதிகாரம் இருக்கிறது.
ரயில்வே மேம்பாடு
தற்போதைய சூழலில் ரயில்வே மேம்பாட்டு பணிகளுக்கு கிட்டத்தட்ட 11 ஆயிரம் ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. ஆனால் 3000 ஏக்கர் நிலத்தை மட்டுமே தமிழ்நாடு அரசு தந்துருக்கும் நிலையில் நாங்கள் எப்படி ரயில்வே மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள முடியும். தமிழக மக்களுக்கு மோடி அரசு பணி செய்ய தயாராக இருக்கிறது. ஆனால் தமிழக வெற்றிக்கழக அரசு நிலத்தை மட்டுமே ஒதுக்க வேண்டும்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக மக்களுக்கு நியாயத்தை வழங்க வேண்டும். உங்கள் கடமையை செய்ய நீங்கள் தயங்க கூடாது. உங்களால் ஒரு தீபம் ஏற்றுவதை வேண்டுமானால் தடுக்க முடியும். ஆனால் தமிழக மக்களின் வளர்ச்சியையும் அவர்கள் பெறவேண்டிய சலுகைகளையும் மறுக்க முடியாது. ஒரு தீபத்தை தடுத்து லட்சக்கணக்கான மக்களின் உணர்வை புண்படுத்தி இருக்கிறீர்கள்.
கார்த்திகை தீபம்
இன்று தீபத்தை தடுத்தது போல நாளை யாராலும் கோவிலுக்கு செல்ல முடியாது என கூறுவீர்கள். இதைத்தான் அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறதா? அவரவர் மதத்தை பின்பற்றுவதற்கான உரிமையை அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிறது. காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் நாளை ஒரு மேடையில் ஏறி நின்று அரசு அமைப்புச் சட்டத்தை நம்புகிறேன். மத சுதந்திரத்திற்கான உரிமையை நம்புகிறேன் என சொல்ல முடியுமா? அவரால் முடியாது. அரசமைப்புச் சட்டத்தை பின்பற்றும் எண்ணம் காங்கிரசுக்கு இல்லை.
நரேந்திர மோடி
அந்த புத்தகத்தை என்றாவது படித்து பார்த்திருப்பார்களா? என்று கேட்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தமிழகத்தில் 70-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை கட்டமைப்பு செய்து வருகிறது. எழும்பூர் ரயில் நிலையம் அழகாக மாறியிருக்கிறது. இதையேதான் உங்களுக்கும் சொல்கிறேன். உலகத்தரத்தில் மதுரை ரயில் நிலைய சந்திப்பு நவீன மயமாக்கப்பட்டு வருகிறது. அந்த கட்டிடத்தின் உச்சியில் தீபம் ஏற்றப்படும் ஒரு தீபத்தால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படுத்த போவதில்லை" என்றார்.




Click it and Unblock the Notifications
