இரட்டை வேடம் - இரட்டை நாக்கு..இதெல்லாம் திமுகவுக்கு புதிதல்ல! பாஜகவுடன் கூட்டணி! அருண் ராஜ் விளாசல்
தஞ்சை: திமுகவிற்கு இரட்டை வேடம் - இரட்டை நாக்கு புதிதல்ல எனவும், ஆளுநரை கீழ்த்தரமாக பேசியவர்கள் தற்போது ஒன்றிய அரசுடன் கூட்டணி வைத்துக்கொண்டு அவர்கள் அறிவுரையின்படி தூண்டுதலின் பேரில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ வழக்கிற்கு சிபிஐ விசாரணை வேண்டும் என மனு அளித்திருக்கிறார்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் விமர்சித்துள்ளார்.
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்ட மாநில சுகாதாரத்துறை அமைச்சர், தஞ்சை மாவட்டத்தில் 3.68 கோடி மதிப்பீட்டில் முடிவடைந்த ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான 6 கூடுதல் புதிய கட்டடங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து மேலும் 39 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்," மருத்துவ கட்டமைப்பில் மிகப்பெரிய பற்றாக்குறையாக இருந்தது செவிலியர்கள் தான். அதற்காக மாநில முழுவதும் 4724 காலி பணியிடங்களுக்கு மாவட்ட நல சங்கங்கள் மூலமாக வெளிப்படையான முறையில் செவிலியர்களை தேர்ந்தெடுத்து பணி நியமன ஆணை வழங்கப்பட்டு இருக்கிறது .
அமைச்சர் அருண் ராஜ்
மேலும் மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக பட்ஜெட்டில் அறிவித்தபடி 1694 புதிய செவிலியர் பணியிடங்களை உருவாக்கி பணி வழங்க குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது விரைவில் அவர்களுக்கும் பணி நியமன ஆணை வழங்கப்படும். கடந்த 10 ஆண்டுகளாக நிரப்பப்படாத செவிலியர் உதவியாளர் பணியிடங்கள் தேவைக்கு ஏற்ப நிரப்பப்படும்.
திமுக இரட்டை வேடம்,
திமுகவிற்கு இரட்டை வேடம் இரட்டை நாக்கு என்பது புதிது அல்ல. அவர்கள் ஆட்சியில் எந்த அளவிற்கு கவர்னரை கீழ்த்தரமாக பேசி இருக்கிறார்கள். கவர்னர் அலுவலகம் தேவை இல்லை என்றார்கள். அவதூறாகவும் பேசி இருக்கிறார்கள். தனது நோக்கம் சிபிஐ வேண்டும் என்பது தான். கடந்த திமுக ஆட்சியில் எத்தனையோ குற்ற வழக்குகள் சிபிஐ விசாரணை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள்.
சிபிஐ விசாரணை
எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். உயர் நீதிமன்றமும் பல வழக்கிற்கு சிபிஐ விசாரணை வேண்டும் என கூறி இருக்கிறது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்ற வரை மேல்முறையீடு சென்ற கட்சிதான் திமுக.
தற்போது எதன் அடிப்படையில் சிபிஐ மீது நம்பிக்கை வந்தது என்று தெரியவில்லை. ஒன்றிய அரசுடன் உள்ள மறைமுக கூட்டணி தற்போது வெளிப்படையான கூட்டணியாக வைத்துக் கொண்டு சிபிஐ விசாரணை கோரலாம்.
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ
அவர்கள் அறிவுரையின்படி தூண்டுதலின் பேரில் விசாரணை கேட்கிறார்கள் என நினைக்க தோன்றுகிறது.
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ புகார் குறித்து விசாரணை சென்று கொண்டிருக்கிறது. திருப்பரங்குன்றம் விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது அது பற்றி கருத்து சொல்வது சரியல்ல. டெல்டா மாவட்டத்தை வறட்சி பாயுத்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என விவசாய சங்கங்களின் கோரிக்கை சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களிடம் கொண்டு செல்வேன். அவர்களுக்கான உரிய அறிவிப்பு வரும்" என அமைச்சர் அருண் ராஜ் கூறினார்.




Click it and Unblock the Notifications
