Low pressure area: வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. எங்கெல்லாம் மழை பெய்யும்? ஐஎம்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தெற்கு அந்தமான் - தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 30 ஆம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்தடுத்த நாட்களில் மேலும் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளதா என்பது தற்போது கூற முடியாது. இனி வரும் நாட்கள், வானிலை மாற்றங்களை வைத்து தான் புயலாக மாறுமா இல்லையா என்பது தெரியவரும் என கூறப்பட்டுள்ளது.

Low pressure area

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கியது. தொடங்கியபோதே கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் அக்டோபரில் இயல்பை விட அதிகமாகவே மழை பதிவானது. ஆனால் இந்த மாதத்தில் தற்போது வரை பெரிய மழை பெய்யவில்லை.

இந்நிலையில் வரும் 30 ஆம் தேதி வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மைய அறிவிப்பில், வரும் 30 ஆம் தேதி வாக்கில் தெற்கு அந்தமான் - தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

புயலாக மாற வாய்ப்பா?

தெற்கு அந்தமான் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்ச்சி காரணமாக இந்த அமைப்புகள் உருவாக வாய்ப்பு உள்ளது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு குறைவாக உள்ளது. அடுத்தடுத்த நாட்களில் மேலும் வலுப்பெறுமா என்பது தெரியவரும் என கூறப்பட்டுள்ளது..

அதேசமயம் அக்வான் புயலும் முதலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவே உருவாக வாய்ப்பு இருந்ததாகவும் புயலாக மாற வாய்ப்பு இல்லை என்றே கணிக்கப்பட்டது. ஆனால் இறுதியில் புயலாக மாறியது. இதே போன்று இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியும் புயலாக மாறலாம் என்றும் கூறப்படுகிறது.

எங்கெல்லாம் கனமழை பெய்யும்

தற்போதைய வானிலை அமைப்புகளை வைத்து பார்க்கும் போது தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் பனிப்பொழிவு அதிகரிக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், நாளை 27 ஆம் தேதி, தேனி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலில் மிதமான மழைக்கும், ஏனைய தமிழகத்தில் லேசான மழை பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் எங்கு மழை பெய்யும்?

28 ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் லேசான மழை பெய்யக்கூடும். என்று கூறியுள்ளது.

வழக்கமாக நவம்பர் மாதத்தில் 18 செமீ மழைப்பொழிவு இருக்கும். ஆனால் இம்மாதத்தில் 10 செமீ அளவு கூட மழை பதிவாகவில்லை என கூறப்படுகிறது. அணைகளில் நீர்மட்டமும் இன்னும் உயரவில்லை. விவசாயிகளும் நிலத்தை உழுதுவிட்டு மழை பெய்யுமா இலை பொய்த்துவிடுமா என எதிர்பார்த்து உள்ளனர். குறிப்பாக கடந்த ஒரு வாரமாக மழையே இல்லாமல் வெயில் அடித்து வந்தது. தற்போது தான் கடந்த இரு நாட்களாக மழை பரவலாக பெய்ய ஆரம்பித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+