இன்னைக்கு தமிழகம் முழுக்க மழை தான்.. நெல்லை, தூத்துக்குடி, மதுரையில் கனமழை விளாசும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல் என 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட தமிழகம் முழுக்க 31 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.

நடப்பு மாதத்தில் பெரிய அளவில் மழை பெய்யாத விலையில், திங்கட்கிழமை முதல் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இருந்தாலும் இயல்பை விட குறைவாகவே மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் இன்று தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது.

Heavy rain weather Thoothukudi

தென் மாவட்டங்களில் இன்று கனமழை விளாசும்

நேற்று இரவு முதலே தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இன்று காலையில் திருச்செந்தூர் பகுதியில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. தென்காசி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல் பகுதியிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. இந்நிலையில் தமிழகம் முழுக்க இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

இன்று தேனி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய 7 மாவட்டங்களில் இடி, மின்னலோடு கூடிய கனமழை பெய்யும்.

தமிழகம் முழுக்க இன்று மழைக்கு வாய்ப்பு

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை உள்ளிட்ட 31 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும். நாளை வெள்ளிக்கிழமை தேனியில் இடி, மின்னலோடு கனமழை பெய்யும்.. என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+