கார்த்தி சிதம்பரத்தை பண்ணையார் என்ற துரை வைகோ.. சிரிச்சிட்டே பதிலடி.. இது அன்றே தொடங்கிய மோதல்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கார்த்தி சிதம்பரம் தன்னை பண்ணையார் என்று துரை வைகோ குறிப்பிட்டதை தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. மாறாக, தனது குடும்பம் பல தலைமுறைகளாக செல்வந்தர் குடும்பம் என்றும், தான் சுயமாக உழைத்து முன்னுக்கு வரவில்லை என்றும் வெளிப்படையாகக் கூறியுள்ளார். மேலும், முதல்வர் விஜய்யின் செயல்பாடு, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம், கைது நடவடிக்கைகள் குறித்தும் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் வெளியே வந்த துரை வைகோ, செய்தியாளர்களிடம் கார்த்தி சிதம்பரத்தை பண்ணையார் என குறிப்பிட்டு பேசினார்.

Karti Chidambaram Durai Vaiko Vaiko

துரை வைகோ - கார்த்தி சிதம்பரம்

இந்நிலையில், புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது.. இதில் கலந்துகொண்டபின், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"பண்ணையார் என்பது தவறான வார்த்தை அல்ல. திருச்சி எம்பி துரை வைகோ என்னை பண்ணையார் என்று சொன்னது தவறில்லை. அது கொச்சையான வார்த்தையாக எனக்கு தோன்றவில்லை. அவர் என்னை மகாராஜா என்று சொல்லவில்லையே எனத்தான் ஏமாற்றமடைகிறேன். நான் பெரிய முதலாளி தான் ஒத்துக்கொள்கிறேன்.

சிலர் என்னைப் 'பெருமுதலாளி' என்றும் சொல்வார்கள். நான் ரொம்பப் பெரிய முதலாளிதான்; இல்லை என்று சொல்லவில்லை. என்னை "மகாராஜா" என சொல்லவில்லையே என்றுதான் ஏமாற்றமடைகிறேன், வருத்தப்படுகிறேன்.

பண்ணையார் என்ற வார்த்தை

நான் ஒன்றும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வரவில்லை. எனது குடும்பம் செல்வந்தர் குடும்பம். எனது அப்பா முதல் பாட்டன் வரை செல்வந்தர்கள். அந்த வழியில் தான் நான் வந்துள்ளேன். நான் ஒன்றும் சுயமாக உழைத்து முன்னுக்கு வரவில்லை. அதனால் பண்ணையார் என்ற வார்த்தை எனக்கு தவறாக தெரியவில்லை.

தமிழக முதல்வர் விஜய்க்காக தான் பொதுமக்கள் வாக்களித்துள்ளனர். அவருக்கென்று பொதுமக்களிடம் செல்வாக்கு உள்ளது. அதனை காப்பாற்ற இனியாவது முதல்வர் நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனால் இன்னும் அவர் தன்னை பொதுமக்களோடு இணைத்துக் கொள்ள வேண்டும் ஒவ்வொரு சம்பவத்திற்கும் அவர் பேச வேண்டும்.

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் முழுமையான விசாரணைக்கு பின் தெரியும். எம்எல்ஏவை கைது செய்ய வேண்டிய வழக்கு போல் இது அல்ல. அதே வேளையில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உதயநிதி - கைதுகள்

உதயநியையும் கைது செய்து அழைத்து சென்றதும் தவறு தான். 75 சதவீத கைதுகள், டிவி ஷோவிற்காகத்தான் நடந்துகின்றனர். மாவட்ட ஆட்சியரின் உயிருக்கு ஆபத்து இருக்கும் என்று விசாரணை அதிகாரி மற்றும் விசாரணைக்காக அமைக்கப்பட்டுள்ள குழு முடிவு செய்தால் அவரை கைது செய்யலாம். வழக்கு முடியும் வரை யாரும் ஜெயிலில் இருக்கக் கூடாது. தண்டனை அறிவித்த பின்பு தான் ஜெயிலுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது என் கருத்து.

கள்ளக்குறிச்சி ஆட்சியரின் உடமைக்கும் உயிருக்கும் சம்பந்தப்பட்ட எம்எல்ஏவால் ஆபத்து இருக்கிறது என்றால் அவரை கைது செய்யலாம். அது போன்ற பாதிப்பு இல்லை என்றால் அவரை கைது செய்ய வேண்டியதில்லை என்பது தான் என் கருத்து" என்று தெரிவித்துள்ளார்.

வைகோ மீது அன்று சீறிய கார்த்தி

துரை வைகோ, கார்த்தி சிதம்பரம் இரு தலைவர்களின் பேட்டிகளையும் எளிதாக கடந்து போக முடியாது.. காரணம், கார்த்தி சிதம்பரத்துக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும் இடையிலான அரசியல் விமர்சனம், 2019-ம் ஆண்டிலேயே வெளிப்படையாக தொடங்கியது.

குறிப்பாக, காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசின் நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய வைகோ, காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக அன்று விமர்சித்தார். அப்போது இதற்கு எதிர்வினையாற்றிய காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், "காங்கிரஸ் மீது இவ்வளவு கோபமும் ஆத்திரமும் வைத்துக்கொண்டு வைகோ ஏன் எங்களுடன் கூட்டணி வைத்திருக்க வேண்டும்?" என்று நேரடியாகவே அன்று கேள்வி எழுப்பியிருந்தது மீடியாக்களையே பரபரப்பாக்கியிருந்தது..

தொடரும் கருத்து மோதல்கள்

இதன் மூலம்தான் 2 தலைவர்களுக்கும் இடையிலான அரசியல் கருத்து மோதல் வெளிச்சத்துக்கு வந்தது... இந்த விமர்சனப் போக்கு அடுத்தடுத்த ஆண்டுகளிலும் தொடரவே செய்தன.

கடந்த 2024 பிப்ரவரி மாதம் கார்த்தி சிதம்பரத்தின் அரசியல் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த துரை வைகோ, "காங்கிரஸில் இருக்கிறாரா கார்த்தி சிதம்பரம்?" என்று கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து இப்போது கார்த்தி சிதம்பரத்தை பண்ணையார் என்று துரை வைகோ குறிப்பிட்டிருப்பதும், அதற்கு கார்த்தி சிதம்பரம் அளித்திருக்கும் பதிலும் மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையிலான அரசியல் விமர்சனத்தை பேசுபொருளாக்கியுள்ளது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+