Netflix ஓடிடி தளத்துக்கு மத்திய அரசு வார்னிங்.. பாகிஸ்தான் தொடரை உடனே நீக்க உத்தரவு! பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நம் நாட்டில் பிரபலமாக உள்ள 'நெட்ஃபிளிக்ஸ்' ஓடிடி தளத்தில் ஒளிபரப்புக்கு தயாராக உள்ள பாகிஸ்தானின் 'ஜோ பச்சே ஹயின் சங்க் சமேத் லோ' தொடரை உடனடியாக நீக்க வேண்டும் என்று மத்தயி அரச அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

netflix pakistan india

நம் நாட்டில் பல்வேறு ஓடிடி தளங்கள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று தான் 'நெட்ஃபிளிக்ஸ்'. இந்த ஓடிடி தளத்தில் பாகிஸ்தான் நாட்டின் சீரிஸ் ஒன்று ஒளிபரப்பு செய்ய தயாராக உள்ளது.

பாகிஸ்தானின் 'ஜோ பச்சே ஹயின்சங்க் சமேத் லோ' (Jo Bachay Hain Sang Samait Lo) என்ற சீரிஸ் டிசம்பர் 4ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கான புரோமோஷன் பணிகள் நடந்து வருகிறது.

'நெட்ஃபிளிக்ஸ்' ஓடிடி தளத்தில் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சீரிஸை வெளியிடக்கூடாது. இதனை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று சமூக வலைதளங்களில் புகார்கள் தெரிவித்தனர். அதன்படி இந்த பாகிஸ்தான் சீரிஸை ஒளிபரப்பு செய்யக்கூடாது. உடனடியாக நீக்க வேண்டும் என 'நெட்ஃபிளிக்ஸ்' தளத்துக்கு மத்திய தகவல தொடர்பு மற்றம் ஒளிபரப்பு துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், ''இந்தியாவில் செயல்படும் அனைத்து ஓடிடி தளங்களும் பாகிஸ்தானில் இருந்து வரும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யக்கூடாது. அதனை நிறுத்த வேண்டும் என்று 2025 மே மாதம் 8 ம் தேதி அறிவுரை வழங்கப்பட்டது. இந்த அறிவுரையை பின்பற்றி 'நெட்ஃபிலிக்ஸ்' நடந்து கொள்ள வேண்டும்.

இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, தேசிய பாதுகாப்பு, வெளிநாடுகளுடனான உறவுகள் அல்லது பொதுஅமைதியை பாதிக்கக்கூடிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும்போது ஓடிடி தளங்கள் உரிய எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் தகவல் தொழில்நுட்பம் (intermediary Guidelines மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைகள்) விதிகள் 2021ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்'' என கூறப்பட்டுள்ளது.

இது 'நெட்ஃபிளிக்ஸ்' ஓடிடி வலைதளத்திற்கு சிக்கலாக மாறி உள்ளது. 'நெட்ஃபிளிக்ஸ்' ஓடிடி வலைதளத்தில் இதுவரை பாகிஸ்தான் சார்ந்த நிகழ்ச்சி ஓளிபரப்பு செய்யப்படவில்லை. முதல் முதலாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்ய தயாராகி வந்த நிலையில் தற்போது முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலமாக நம் நாடு பாகிஸ்தானை பந்தாடியது. இது இருநாடுகள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து தான் பாகிஸ்தான் நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் நம் நாட்டில் தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+