Kerala Lottery: ரூ.25 கோடி! கேரளா கிறிஸ்துமஸ் பம்பரில் யாருக்கு அடிக்க போகுது அதிர்ஷ்டம்? பரிசுத்தொகை விவரம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள கிறிஸ்துமஸ் - நியூ இயர் பம்பர் லாட்டரியின் இந்த ஆண்டுக்கான டிக்கெட்டை கேரள அரசு இன்று அறிமுகம் செய்துள்ளது. டிக்கெட் விற்பனை வரும் 28 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. முதல் பரிசாக ரூ.25 கோடி வழங்கப்பட உள்ளது. ரூ.450 விலை கொண்ட இந்த டிக்கெட்டின் மொத்த பரிசுத்தொகை விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.

கேரளாவில் பூஜா பம்பர் லாட்டரிக்கான குலுக்கல் வரும் 28 ஆம் தேதி நடைபெறுகிறது. குலுக்குலுக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் பூஜா பம்பர் லாட்டரியின் இறுதி கட்ட விற்பனை களை கட்டியுள்ளது.

Kerala Christmas Bumper Lottery

முதல் பரிசு ரூ.25 கோடியாக அதிகரிப்பு

இதற்கு இடையே, பூஜா பம்பருக்கு பிறகாக, கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி விற்பனை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரியை இன்று முறைப்படி அம்மாநில முதல்வர் விடி சதீசன் அறிமுகம் செய்து வைத்துள்ளார். கடந்த ஆண்டு வரை முதல் பரிசாக ரூ.20 கோடி அளிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு முதல் பரிசுத்தொகை 5 கோடி உயர்த்தப்பட்டு ரூ.25 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசு ரூ. 30 கோடியாக உயர்த்தப்பட்டதையடுத்து, கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரியின் முதல் பரிசும் உயர்த்தப்பட்டுள்ளது. முதல் பரிசு 25 கோடி மட்டுமின்றி மொத்தம் 7,66,992 பரிசுகள் வழங்கப்படுகின்றன. அதாவது முதல் பரிசு முதல் கடைசி பரிசு வரை வழங்கப்படும் மொத்த பரிசுகளின் எண்ணிக்கையாகும்.

24 டிக்கெட்டுகளுக்கு ரூ.1 கோடி பரிசு

முதல் பரிசாக ரூ.25 கோடி ஒரே ஒரு டிக்கெட்டிற்கு மட்டும் வழங்கப்படும். இரண்டாவது பரிசாக ரூ.1 கோடி 24 டிக்கெட்டுகளுக்கு அளிக்கப்படும். மூன்றாவது பரிசாக ரூ.10 லட்சம் 24 டிக்கெட்டுகளுக்கு அளிக்கப்பட உள்ளது. 4 வது பரிசாக ரூ.5 லட்சம் 24 பேருக்கு வழங்கப்படுகிறது. அதாவது ஒவ்வொரு டிக்கெட்டிற்கும் ரூ.5 லட்சம் அளிக்கப்படும்.

அது போக 108 டிக்கெட்டுகளுக்கு தலா ரூ.1 லட்சம் அளிக்கப்பட உள்ளது. ஆறுதல் பரிசாக ரூ.1 லட்சம் 11 டிக்கெட்டுகளுக்கு அளிக்கப்படும். அதாவது முதல் பரிசு அடித்த அதே எண்ணை கொண்டிருந்தாலும் சீரியல் மட்டும் மாறி இருந்து பரிசுத்தொகை அடிக்காதவர்களுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்படும். இந்த டிக்கெட்டின் விலை ரூ.450 ஆகும்.

குலுக்கல் எப்போது?

டிக்கெட்டின் விற்பனை நவம்பர் 28 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. டிக்கெட்டிற்கான குலுக்கல் பிப்ரவரி 1, 2027 அன்று நடைபெறும். கடந்த ஆண்டு வரை கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி டிக்கெட்டின் விலை ரூ.400 ஆக இருந்தது. ஆனால் தற்போது டிக்கெட் விலை ரூ.450 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பரிசு அடித்தால் கையில் எவ்வளவு கிடைக்கும்

ஓணம் பம்பர் டிக்கெட்டின் விலை ரூ.500 ஆகும். தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் பூஜா பம்பரின் டிக்கெட் விலை ரூ.300 ஆகும். முதல் பரிசு ரூ.25 கோடியாக உயர்த்தப்பட்டு இருப்பதால் இந்த டிக்கெட்டுகளுக்கு கேரள லாட்டரி பிரியர்கள் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கேரளாவிற்கு செல்லும் வெளி மாநிலத்தவர்கள் கூட டிக்கெட்டை விரும்பி வாங்குவதையும் பார்க்க முடிகிறது.

முதல் பரிசு 25 கோடி என்றாலும் வரிகள் பிடித்தம் போக சற்றேறக்குறைய 13 கோடி அளவுக்குதான் வெற்றியாளரின் கைக்கு வரும் என்கிறார்கள் லாட்டரி வியாபாரிகள். டிக்கெட்டில் முதல் பரிசு விழுந்தால் ஒரே நாளில் வாழ்க்கை தலைகீழாக மாறிவிடும் என்பதால் பரிசு தங்களுக்கு அடித்துவிடாதா? என லாட்டரி மீதான எதிர்பார்ப்பு தற்போதே லாட்டரி பிரியர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+