ஆவின் தயிர் பாக்கெட்டுகளால் கொதித்த பால் முகவர்கள்! தலைமை அலுவலகத்தில் அபிஷேகம் செய்வோம் என வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஆவின் தலைமை அலுவலகத்தில் கெட்டுப்போன தயிரைக் கொட்டி, பசு, கன்று சிலைக்கு தயிர் அபிஷேகம் செய்யப்படும் என்று பால் முகவர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மழைக்காலத்தில் விற்பனை ஆகாத 500 கிராம் தயிர் பாக்கெட்டுகளை வலுக்கட்டாயமாக வழங்கி, ஏஜெண்ட்களுக்கு கடும் நிதியிழப்பை ஏற்படுத்தி வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

aavin milk

இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினில் பொதுமக்களால் அதிகளவில் விரும்பி வாங்கும் ஆவின் நிலைப்படுத்தப்பட்ட பால் (கிரீன் மேஜிக் பாக்கெட்) மற்றும் நெய், வெண்ணெய், பனீர் உள்ளிட்ட பால் சார்ந்த உப பொருட்களை பால் முகவர்களின் தினசரி தேவைக்கேற்ப விநியோகம் செய்யாமல், மழைக்காலத்தில் விற்பனை ஆகாத 500 கிராம் தயிர் பாக்கெட்டுகளை வலுக்கட்டாயமாக திணித்து கடும் நிதியிழப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

ஆவின் தயிர் பாக்கெட்டுகளை வாங்க மறுத்தாலோ அல்லது ஆவின் அதிகாரிகள் வலுக்கட்டாயமாக அனுப்பும் தயிர் பாக்கெட்டுகளை திருப்பி அனுப்பினாலோ ஆவின் பால் விநியோகத்தை முற்றிலுமாக நிறுத்தி விடுவோம் என மண்டல விற்பனை பிரிவு ஆவின் அதிகாரிகள் பால் முகவர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் மிரட்டல் விடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

ஏனெனில் தயிர் பாக்கெட் விற்பனை என்பது பெரும்பாலும் சிறிய வகை பாக்கெட்டுகளே அதிகளவில் விற்பனையாவதும், சிறிய வகை பாக்கெட் விற்பனையோடு ஒப்பிடுகையில் 500 கிராம் பாக்கெட் விற்பனை என்பது 10 சதவீதம் கூட கிடையாது என்கிற நிலையில் ஆவின் நிர்வாகம் 500 கிராம் தயிர் பாக்கெட்டுகளை வாங்கி விற்பனை செய்தே ஆக வேண்டும் என பால் முகவர்களுக்கு தொடர்ந்து மிரட்டலும், நெருக்கடியும் கொடுத்து வருவதை கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள முடியாது.

மேலும் ஆவின் தயிர் பாக்கெட் காலாவதி தேதி என்பது உற்பத்தி செய்த நாளில் இருந்து 7 நாட்கள் என்றிருந்தாலும் கூட பால் முகவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட அன்றைய தினம் விற்பனை ஆகாமல் மேலும் ஓரிரு நாட்கள் பால் முகவர்களின் பாலகங்களில் இருப்பாகிப் போனால் ஆவின் தயிர் புளிப்புத்தன்மை அதிகமாகி, அந்த தயிர் பாக்கெட் பலூன் போல பெருத்துப் போய் வீணாகப் போய் விடும். அவ்வாறு தயிர் பாக்கெட்டுகள் காலாவதி தேதிக்கு முன்னரே புளித்து, கெட்டுப் போய் பலூன் போல பெருத்து வீணாகிப் போகும்.

அந்த பாக்கெட்டுகளை ஆவின் அதிகாரிகள் மாற்றித் தருவதில்லை என்பதால் கெட்டுப் போகும் ஆவின் தயிர் பாக்கெட்டுகள் மூலம் ஏற்படும் நிதியிழப்பு பால் முகவர்களை மிகுந்த மன உளைச்சலுக்கும், வேதனைக்கும் ஆளாக்கி விடுகிறது. பால் முகவர்களின் நிதியிழப்பு, மன உளைச்சல், வேதனை எல்லாம் குளிர்சாதன அறைகளுக்குள் அமர்ந்து கொண்டு உத்தரவு போடும் ஆவின் அதிகாரிகள் தங்களின் கஜானா மட்டும் நிறைந்தால் போதும் பால் முகவர்கள் எக்கேடு கெட்டுப் போனால் நமக்கென்ன என தெரிந்தும், தெரியாதது போல் நாடகமாடி வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள பால் முகவர்களுக்கு ஆவின் பால் பாக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் என்பது பால் விநியோகம் செய்வதற்கான வாகன எரிபொருள், பணியாளர் ஊதியம் போன்ற செலவினங்களைக் கூட ஈடு செய்ய போதாது என்கிற நிலையில் கடை வாடகை, மின்சார கட்டணம், ஆவின் பால் லீக்கேஜ் பாக்கெட்டுகளால் ஏற்படும் இழப்பு என ஆவின் பால் முகவர்கள் அனைவரும் பெருத்த மன உளைச்சலிலேயே இந்த தொழிலை செய்து வரும் போது ஆவின் அதிகாரிகள் ஆதரவாக இல்லை என்றாலும் கூட பரவாயில்லை பால் முகவர்களுக்கு மேலும், மேலும் நிதியிழப்பை ஏற்படுத்தி வஞ்சிப்பதை உடனடியாக கைவிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது.

ஆவின் பாலகங்கள் நடத்தும் பால் முகவர்கள் மற்றும் பால் முகவர்களுக்கு விநியோகம் செய்யும் மொத்த விநியோகஸ்தர்களுக்கும் தங்களின் விற்பனை தேவைக்கு ஆர்டர் போடும் பாலின் அளவிற்கேற்ப குறிப்பிட்ட பங்கு 500 கிராம் தயிர் பாக்கெட்டுகளை வாங்கியாக வேண்டும் என்றும், அவ்வாறு தயிர் பாக்கெட்டுகளை வாங்க மறுத்தாலோ அல்லது தயிர் பாக்கெட்டுகளை திருப்பி அனுப்பினாலோ ஆவின் பால் விநியோகத்தை முற்றிலுமாக நிறுத்தி விடுவோம் என ஆவின் அதிகாரிகள் பால் முகவர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் மிரட்டல் விடுப்பதை உடனடியாக கைவிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது.

தயிர் பாக்கெட்டுகளை வலுக்கட்டாயமாக திணித்து பால் முகவர்களுக்கும், மொத்த விநியோகஸ்தர்களுக்கும் ஆவின் நிர்வாகம் விநியோகம் செய்யுமானால் அவ்வாறு விநியோகம் செய்யப்பட்ட தயிர் பாக்கெட்டுகள் மொத்தத்தையும் சேகரித்து கொண்டு சென்று சென்னை, நந்தனம் ஆவின் தலைமை அலுவலகத்தில் கொட்டி குவிப்பதோடு, அங்குள்ள பசு, கன்று சிலைக்கு கெட்டுப் போன ஆவின் தயிர் பாக்கெட்டை உடைத்து நலச் சங்கம் எச்சரிக்கை செய்கிறது. தயிர் அபிஷேகம் செய்யப்படும் எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் எச்சரிக்கை விடுக்கிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+