நாகையில் வடிவேலு சினிமா பாணியில் கல்லா பெட்டியில் கை வைத்த திருடர்கள்.. சிசிடிவி காட்சி வெளியீடு
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் வேதராண்யம் அடுத்த தோப்புத்துறையில் ஒரு எலக்ட்ரிக்கல் கடை உள்ளது. அந்த கடையில் பொருட்கள் வாங்குவது போல் சிலர் லாவகமாக நடித்துள்ளனர். பின்னர் உரிமையாளர அசந்த நேரத்தில் கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர். கடை உரிமையாளர் சிசிடிவி காட்சிகளுடன் சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
வடிவேலு திரைப்பட பாணியில் கல்லா பெட்டியில் திருடர்கள் கை வைத்துள்ளனர். கடைகளில் சிசிடிவி கேமராக்கள் மட்டும் இல்லை என்றாலோ, வேலை செய்யவில்லை என்றாலோ திருடர்கள் திருடி சென்றால் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்படும். நல்ல வேளையாக பல கடைகளில் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்கின்றன. அதனால் திருடர்கள் திருடி சென்றாலும் அடுத்தடுத்த சிசிடிவி கேமராக்களில் உள்ள காட்சிகளால் சிக்கி கொள்கிறார்கள். திருட்டு நடந்தது என்றால் அல்லது வழிபறி நடந்தது என்றால் உடனே புகார் அளித்தால் திருடர்களை எளிதாக பிடிக்க முடியும். எனவே புகார் அளிப்பது நல்லது. வேதாரண்யம் பகுதியில் நடந்த திருட்டு சம்பவம் பற்றி விளக்கமாக பார்ப்போம்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதராண்யம் அடுத்த தோப்புத்துறையில் ஆர்எம்ஆர் எலக்ட்ரிக்கல் கடை உள்ளது. இந்த கடைக்கு இரண்டு இளைஞர்கள் பொருட்கள் வாங்க வந்துள்ளனர். ஒரு இளைஞர் வடமாநில இளைஞர் மற்றொரு இளைஞர் தமகம் கிராமத்தைச் சேர்ந்தவர். வேதராண்யத்தில் கட்டுமானப்பணிகள் நடைப்பெறுவதாக கூறி எலக்ட்ரிக்கல் பொருட்கள் கேட்டுள்ளனர்.
மேலும் ஆட்டோக்கு பணம் கொடுக்க வேண்டும் எனக் கூறி 500 ரூபாயக்கு சில்லரை கேட்டிருக்கிறார்கள். கடை உரிமையாளர் கல்லாப்பெட்டியை திறந்து சில்லரை எடுத்து கொடுத்துள்ளார். எலக்ட்ரிக்கல் பைப் மற்றும் பொருட்களை கடைக்குள் சென்று இளைஞருக்கு எடுத்து கொடுத்துள்ளார். அப்போது வெளியில் நின்ற நபர் கல்லாப்பெட்டியில் இருந்த 50000 ரூபாய் பணத்தை திருடி உள்ளார்.
பொருட்களை வெளியே எடுத்து வந்து வைத்துவிட்டு கட்டி வையுங்கள் ஏற்றுவதற்கு வாகனம் எடுத்து வருவதாக கூறி இரண்டு இளைஞர்களும் இருச்சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இதனிடையே 1 மணி நேரம் கழித்து கடை உரிமையாளர் கல்லாப்பெட்டியை திறந்து பார்த்துள்ளார். ஆனால் பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே கடையில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்த்துள்ளார். அதில் எலக்ட்ரிக்கல் பொருள் வாங்குவது போல் நடித்து பணத்தை திருடிச் சென்றது அம்பலமானது. இதனையடுத்து கடை உரிமையாளர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். பொருட்கள் வாங்குவது போல் நடித்து கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடிச் சென்ற சம்பவம் தோப்புத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Click it and Unblock the Notifications
