போலி புத்தக கொள்முதல் முறைகேடு வழக்கு.. அகல் விளக்கு மோகனுக்கு 3 நாள் போலீஸ் காவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: புத்தக கொள்முதல் முறைகேடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகனை போலீஸ் காவலுக்கு அனுமதிக்கக்கோரி லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்று 3 நாள் போலீஸ் காவலுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கோவையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட பெரியார் அறிவுலக நூலகத்திற்காக நூல்கள் தேர்வு செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டதில், தகுதியற்ற போலி புத்தகங்கள், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள், போலி நூலாசிரியர்கள் மற்றும் போலியான பதிப்பகங்கள் வாயிலாகப் பல கோடி ரூபாய் நிதி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது.

Court Grants Police Custody of Agal Vilakku Publisher Mohan in Book Procurement Scam Case

பெரியார் அறிவுலக நூலகத்திற்கு வாங்கப்பட்ட நூல்களில், அகல் விளக்கு, ஃபீனிக்ஸ் பதிப்பகங்களின் நூல்கள் தரமற்றதாகவும், ஆசிரியர் இன்றி செய்யறிவு மூலம் எழுதப்பட்டிருப்பது கண்டறியப்பட்டு அகல் விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகங்களின் உரிமையாளர் ஆர். மோகனை கடந்த நவம்பர் 16 ஆம் தேதி ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த புத்தகக் கொள்முதல் முறைகேடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், அகல் விளக்கு, ஃபீனிக்ஸ் பதிப்பகங்களின் புத்தகங்கள் உள்பட நூலகங்களில் இருந்து சுமார் 70,000-க்கும் மேற்பட்ட போலி புத்தகங்கள் அகற்றப்பட்டன.

நூல் கொள்முதல் விவகாரத்தில் நூலகத் துறை அலுவலர்கள் 5 பேரை பணியிடை நீக்கம் செய்து பொது நூலக இயக்குநரகம் நடவடிக்கை மேற்கொண்டு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், கோயம்புத்தூர் பெரியார் அறிவுலக நூலக அதிகாரிகள் மீது 11 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மோகனின் வீடு உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றிய அதிகாரிகள், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகனை, அதிகாரிகள் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்பு இன்று ஆஜர்படுத்தினர். அப்போது, மோகனை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவரை உடனே சிறையில் அடைத்ததால் விசாரணை நடத்த போதிய அவகாசம் கிடைக்கவில்லை என்றும் வாதிடப்பட்டது.

விசாரணை இறுதியில் அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகனை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிபதி அனுமதி அளித்தார். விசாரணை முடிந்து நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அவரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+