ஈசிஆர் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய ‘மர்ம பொருள்’.. மீனவ கிராம மக்கள் அச்சம்!
சென்னை: ஆளம்பரை கோட்டைக் குப்பம் கடற்கரையில் இன்று அதிகாலை கரை ஒதுங்கிய மர்ம பொருளால் மீனவ மக்கள் அச்சமடைந்துள்ளனர். அது ராக்கெட் உதிரிபாகமா அல்லது வேறு ஏதாவது வெடிபொருளா என சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் இடைக்கழிநாடு அடுத்த கடப்பாக்கம் மீனவப் பகுதியான ஆளம்பரை கோட்டைகுப்பம் மீனவ கிராமத்தில் அதிகாலையில் மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் ஜி 4 சூனாம்பேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து விரைந்து அங்கு வந்த காவல்துறையினர், வருவாய் துறையினர் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் கரை ஒதுங்கிய மர்ம பொருள் ராக்கெட்டின் உதிரி பாகமா அல்லது வேறு ஏதாவது வெடிக்கும் தன்மை உள்ள பொருளா என்று விசாரணை செய்து வருகின்றனர்.
அதிகாலையில் கரை ஒதுங்கிய இந்த மர்ம பொருளால் அப்பகுதி கிராம மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். மீனவ கிராமத்தில் கரை ஒதுங்கிய மர்ம பொருளால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.


Click it and Unblock the Notifications
