தவெக அமைச்சர் ஸ்ரீநாத் ஆதரவாளர் காரை அடித்து நொறுக்கிய மர்ம கும்பல்.. தூத்துக்குடியில் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்தின் ஆதரவாளரும், தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்தவருமான ராகுல் என்பவரின் காரை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. தூத்துக்குடி மாதா கோவில் அருகே உள்ள குருசடி சந்து பகுதியில் இரவில் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்து நொறுக்கியதுடன் டிவிகே கொடியையும் கிழித்து எரிந்து கீழே வீசி சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கஞ்சா மது போதையில் நள்ளிரவில் வந்த மர்மகும்பல் காரை அடித்து உடைத்தாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில், தென்பாகம் போலீசார் விசாரணை மேற்கொன்டு வருகின்றனர்.

Thoothukudi

தூத்துக்குடி மாதா கோவில் அருகே உள்ள குருசடி சந்து பகுதியில் வசித்து வருபவர் ராகுல். இவர் சொந்தமாக தோணி வைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகத்தில் உறுப்பினராக இணைந்த அவர் தற்போது, தமிழக மீனவத் துறை அமைச்சர் ஸ்ரீநாத் உடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இவருக்கு சொந்தமாக சொகு சுகார் உள்ளது.

நேற்று தொழில் நிமித்தமாக வெளியே தனது சொகுசு காரில் சென்ற ராகுல் சுமார் இரவு 10 மணியளவில் தனது வீட்டு அருகே உள்ள புனித அந்தோணியார் கெபி எதிரே தனது காரை நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அதிகாலை 4 மணி அளவில் அவரது கார் உடைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ராகுல் கார் அருகே வந்து பார்த்தார். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் முன்புறம் கட்டப்பட்டிருந்த கட்சி கொடியை கிழித்து வீசிய கஞ்சா மது போதை கும்பல் காரின் நான்கு பக்கமும் உள்ள கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தி இருந்தனர். இதையடுத்து ராகுல் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கார் கண்ணாடி உடைப்பு சம்பவம் தமிழக வெற்றிக்கழக கோஷ்டி பூசல் காரணமாக நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக? என்ற கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியில் பணிமய மாதா பேராலயம் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கஞ்சா மது போதை கும்பல்களின் அட்டகாசம் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் அதிகரித்துள்ளதாகவும், போலீசார் உரிய ரோந்து நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+