அனிருத் கல்யாண போட்டோவை பகிர்ந்து ஜோனிடா சொன்ன வார்த்தை.. ரசிகர்கள் கவனம் ஸ்டோரியில் தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இசையமைப்பாளர், அனிருத் காவ்யா மாறன் திருமணம் முடிந்து சில நாட்கள் ஆனாலும் அவர்களுடைய திருமணம் தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இன்னும் மீடியாவில் வைரல் ஆகி கொண்டு வருகின்றன. அதிலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த பிரபலங்கள் யார்? யாரெல்லாம் கலந்து கொள்ளவில்லை? என்று ரசிகர்கள் ஒவ்வொரு புகைப்படத்தையும் தேடி பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் பாடகி ஜோனிடா காந்தி வெளியிட்டு இருக்கும் ஒரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரி இப்போது தனி கவனம் பெற்று இருக்கிறது.

அனிருத் இசையில் பல ஹிட் பாடல்களை ஜொனிடா காந்தி பாடி இருக்கிறார். குறிப்பாக விஜய் நடித்த பீட்ஸ் படத்தில் வந்த "அரபிக் குத்து", சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் இடம்பெற்ற "செல்லம்மா", டான் படத்தில் "பிரைவேட் பார்ட்டி" என அனிருத் இசையில் ஜோனிடா பாடிய பாடல்கள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு பெற்றன. அதனால் இருவரும் இணைந்து பணியாற்றும் போது அவர்களுக்குள் இருக்கும் நட்பையும் இசை பயணத்தையும் ரசிகர்கள் தொடர்ந்து கவனித்து வந்தனர்.

Jonita Gandhi

ஜோனிடா அனிருத் பாடல்கள்

இந்த சூழலில் அனிருத் ஜோனிடா இருவரையும் இணைத்து சில காலமாகவே சோசியல் மீடியாவில் சில பேச்சுக்கள் வந்து கொண்டிருந்தன. கடந்த மாதம் ஜோனிடா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் "டியூட்" படத்தில் அவர் பாடிய, "விட்டுப் போன வாசலிலே" என்ற பாடல் வரிகளை பகிர்ந்து இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு காதல் தோல்வி ஏற்பட்டிருக்குமோ? என்றும், அவர் யாரையாவது மறைமுகமாக குறிப்பிடுகிறாரோ என்றும் பேச தொடங்கினார்கள். ஆனால் இது குறித்து எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.

ஜோனிடா காந்தி இன்ஸ்டா ஸ்டோரி

இப்படி இருக்க, தற்போது அனிருத் மற்றும் காவியா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவர்களுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை ஜோனிடா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்திருக்கிறார். அதில், "மிகவும் இனிமையான புதுமண தம்பதிக்கு வாழ்த்துக்கள்" என்று இருவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். இந்த புகைப்படத்தில் அனிருத் காவ்யா இருவரும் பக்கத்தில் பக்கத்தில் நிற்க, காவியாவை கட்டிப்பிடித்தபடி ஜோனிடா சிரித்தபடி போஸ் கொடுத்திருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்த அனிருத் ரசிகர்கள் ஜோனிடாவும் வரவேற்புக்கு வந்திருந்தாரா? என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். அதே நேரத்தில் இந்த போட்டோ அனிருத் ஜோனிடா பற்றி பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல இருக்கிறது என்று அனிருத் ரசிகர்களின் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+