மாத்திரைகளுக்கு பதில் 2 ஊசி மட்டும் போதும்! மாரடைப்புக்கு குட்பை! உயிரை காக்கும் புதிய கண்டுபிடிப்பு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: மாரடைப்பு வராமல் தடுக்க டஜன் கணக்கில் மாத்திரை எடுப்பவரா நீங்கள்? இனி மாத்திரை வேண்டியதில்லை! ஆண்டுக்கு 2 தடுப்பூசி மட்டும் போதும். மாரடைப்பை தடுக்கும் புதிய தடுப்பூசி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் முக்கிய மருத்துவ ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

'இன்க்ளிசிரன்' என்ற இந்த புதிய கொலஸ்ட்ரால் தடுப்பூசியை, ஆண்டுக்கு இரண்டு முறை எடுத்துக்கொள்வதன் மூலம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை கணிசமாக குறைக்க முடியும் என ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

Heart attack

மாரடைப்பு எப்படி ஏற்படுகிறது?

மாரடைப்புக்கு காரணம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால்தான். கோவிட் காலத்தில் வொர்க்ஃபிரம் ஹோமில் இருந்தபோது.. நம்மில் பலரும் பிரியாணி, சிக்கன் 65, கபாப், சிப்ஸ், கூல்டிரிங்க்ஸ் என அடித்து நொறுக்கியிருப்போம். இதெல்லாம் சகஜம்தான். ஆனால், போதுமான உடற்பயிற்சி செய்யாதபோது.. சாப்பிட்டது எல்லாம் அப்படியே கொலஸ்ட்ராலாக உடலில் சேர்ந்துவிடும். இப்படி சேர்வது எல்லாம் கெட்ட கொலஸ்ட்ரால்.

மாரடைப்பு + பக்கவாதம்

ரத்தத்தில் உள்ள இந்த கெட்ட கொலஸ்ட்ரால், அளவுக்கு அதிகமாகும் போது.. அவை ரத்தக் குழாய்களின் சுவர்களில் கொழுப்பாக படிந்து, குழாய்களை சுருங்க செய்கின்றன. இதனால் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இப்படித்தான் மாரடைப்பு ஏற்படுகிறது. இதுவே மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டால்.. பக்கவாதம் ஏற்படும். இதனால்தான் இதய நோய் உள்ளவர்கள், கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருப்பது ரொம்பவும் அவசியம் என மருத்துவர்கள் அடிக்கடி சொல்கிறார்கள்.

உடலில் இருக்கும் கருப்பு ஆடு

இந்தக் கெட்ட கொலஸ்ட்ராலை நமது உடல் வெளியில் தள்ளிவிட்டுவிடும். ஆனால், நம் உடலுக்குள்ளேயே கருப்பு ஆடு ஒன்னு இருக்கு. கல்லீரல்தான் அந்த கருப்பு ஆடு. கல்லீரலிலிருந்து உற்பத்தியாகும் PCSK9 என்கிற புரதம், நமது ரத்தத்திலிருந்து கெட்ட கொழுப்பை வெளியேறுவதை குறைக்கிறது. எனவே கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த விரும்புவோர், PCSK9 புரத உற்பத்தியை தடுக்க மாத்திரைகளை எடுத்துக்கொள்வார்கள்.

மாத்திரையும் ஊசியும்

இப்படி மாத்திரை எடுத்துக்கொள்வதை வழக்கமான கொலஸ்ட்ரால் சிகிச்சை என்று சொல்வார்கள். கொலஸ்ட்ராலை குறைப்பதற்காக 'ஸ்டேடின்' மாத்திரைகளை எடுத்துக்கொள்வார்கள். மாத்திரையை சாப்பிட்டாலும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் வராத நோயாளிகளுக்கு.. கூடுதல் சிகிச்சையாக 'இன்க்ளிசிரன்' ஊசியை போடும்போது.. ரிசல்ட் சக்சஸாக இருக்கிறது.

ஊசி எப்படி வேலை செய்கிறது?

நொவார்டிஸ் நிறுவனம் தயாரித்துள்ள siRNA 'இன்க்ளிசிரன்' ஊசி, வழக்கமான கொலஸ்ட்ரால் மாத்திரைகளை போல் அல்லாமல்.. நவீன மரபணு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இது கல்லீரல் புரதம் உற்பத்தியாவதை குறைப்பதால், ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை அதிக அளவில் உறிஞ்சி வெளியேற்ற முடிகிறது.

பாசிட்டிவாக வந்த ரிசல்ட்

தினமும் மாத்திரை சாப்பிடுபவர்களுக்கு மாத்திரை சலிப்பானதாகவும், சில நேரங்களில் மறந்து விடும் சம்பவங்களும் நடக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த ஊசி ஒரு பெரிய வரப்பிரசாதமாகும். முதல் நாள் ஒரு ஊசியும், அதன் பிறகு 6 மாதங்களுக்கு ஒரு முறை ஊசியும் போட்டுக் கொண்டால் போதும். வழக்கமான கொலஸ்ட்ரால் சிகிச்சைகளுடன் சேர்த்து இதை பயன்படுத்தும் போது.. கெட்ட கொலஸ்ட்ரால் அளவை 40 முதல் 53 சதவீதம் வரை குறைப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

ஆய்வு முடிவுகள்

ஏற்கனவே, இதே நோயால் பாதிக்கப்பட்ட 16,000க்கும் மேற்பட்டோரிடம் இந்த 3ம் கட்ட மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. நவம்பர் 23 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, இந்த ஊசியை வெறுமண கொலஸ்ட்ரால் அளவை குறைப்பது மட்டுமல்லாமல்.. மாரடைப்பு மற்றும் பக்கவாதம் கொண்ட தீவிர இதய நோய்களின் அபாயத்தையும் கணிசமாக குறைப்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இதன் முழுமையான ஆய்வு முடிவுகள் 2027 ஆம் ஆண்டில் முதல் பாதையில் வெளியிடப்பட உள்ளன.

அப்படியெனில் இனில் உலகில் இனி இதய நோய்கள் பாதியாக குறையும். இந்தியாவில் இதய நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால்.. இந்த ஊசி நமக்குதான் வரப்பிரசாதமாக அமைய உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+