திடீர் மாரடைப்பு.. இந்திய இளைஞர்களிடையே வெடித்துள்ள முக்கிய பிரச்சனை! காரணம் இதுதான்!
சென்னை: உடற்பயிற்சி செய்துக்கொண்டிருக்கும்போது, பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருக்கும் போது, சாதாரணமாக நடந்து கொண்டிருக்கும் போது என எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென்று மயங்கி விழுந்து இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தற்போது இந்த சம்பவத்திற்கான காரணங்கள் வெளியாகியுள்ளன.
டைம்ஸ் ஆப் இந்தியா, சமீபத்தில் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் இந்திய இளைஞர்கள் மத்தியில் திடீரென மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து எய்ம்ஸ் மற்றும் ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வுகளின் முடிவுகள் வெளியாகி இருந்தன.

என்ன காரணம்?
அதன்படி, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட திடீர் மரணங்களில் 42.6% மரணங்கள் இதய பிரச்சனை தொடர்பாக ஏற்பட்டிருக்கின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 30 வயதுகளின் தொடக்கத்தில் இருந்தனர். மரணத்திற்கான முக்கிய காரணியாக தமனி நோய் கண்டறியப்பட்டது. அதாவது இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் தமனி, மிக மோசமான அளவில் குறுகியிருந்தது திடீர் மாரடைப்புக்கு காரணம் என்பதை பிரேத பரிசோதனையில் கண்டறியப்பட்டது.
சுவாச பிரச்சனை
இருப்பினும் 21.3% மரணங்களுக்கு பிரேதப் பரிசோதனையில் எந்த காரணத்தையும் கண்டறிய முடியவில்லை. இவை பெரும்பாலும் இதயத்தின் மின்சார ஒழுங்கின்மை காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இது தவிர சுமார் 21.3% மரணங்கள் நிமோனியா மற்றும் காசநோய் போன்ற சுவாச பிரச்சனைகளால் ஏற்பட்டிருக்கின்றன.
திடீர் மாரடைப்பு
இளைஞர்கள் திடீர் மாரடைப்பால் உயிரிழப்பது என்பது. இந்தியாவில் அதிகரித்திருப்பது கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியர்களுக்கு மரபணு ரீதியாகவே இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு 3-4 மடங்கு வரை அதிகமாக இருக்கிறது. உயிரிழந்தவர்களில் பலருக்கு ரத்த அழுத்தம் அல்லது சர்க்கரை நோய் இருந்திருக்கிறது. ஆனால், அவர்களுக்கு அது முன்கூட்டியே தெரியவில்லை.
செய்யக்கூடாத விஷயங்கள்
மாரடைப்புக்கு முந்தைய அறிகுறிகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றன. அஜீரண கோளாறு, நெஞ்சு எரிச்சல், சோர்வு, அசிடிட்டி பிரச்சனை என மாரடைப்பு குறித்த முன்னெச்சரிக்கையை, இளைஞர்கள் தவறாக நினைத்து அலட்சியப்படுத்தி இருக்கின்றனர். இதய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதில், திடீரென ஜிம்முக்குச் சென்று கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். இதன் மூலம் பிரச்சனை சரியாகிவிடும் என்று அவர்கள் நினைத்திருக்கிறார்கள். ஆனால், அது இதய துடிப்பில் சீரற்ற மாற்றத்தை ஏற்படுத்தி உயிரிழப்பை தூண்டுகிறது.
இந்தியாவின் மீதான சாபம்
ஆய்வு செய்யப்பட்ட இளைஞர்களில் பாதிக்கும் மேற்பட்டோர், புகைபிடிப்பவர்களாகவோ அல்லது மது அருந்துபவர்களாகவோ இருந்துள்ளனர். இந்தியாவில் வேலைக்கு செல்லும் மக்களில் 75% மக்களிடையே அதிக மன அழுத்தம் இருக்கிறது. இது இதயத்தை படிப்படியாக பாதிக்கிறது.
30 வயது தாண்டிய அனைவரும் ஆண்டுக்கு ஒரு முறை இதய பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும் என்று இந்த ஆய்வின் மூலம் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
கோவிட் தடுப்பூசி
விவரிக்க முடியாத சோர்வு அல்லது மூச்சு திணறல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும், கடுமையான உடற்பயிற்சிகளை தொடங்குவதற்கு முன் இதயம் அதை தாங்கும் கெபாசிட்டியை கொண்டிருக்கிறதா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். இந்த ஆய்வில் மற்றொரு முக்கியமான தகவல் என்னவென்றால், திடீர் மாரடைப்பு பிரச்சனைகளுக்கும் கோவிட் தடுப்பூசிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications