"அந்த" விஷயத்தில் ஆர்வம் அதிகமாக இருக்கா? உயிரை பறிக்கும் நோயாக இருக்கலாம்.. மருத்துவர்கள் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த காலத்தில் மாறி வரும் வாழ்க்கை முறை, உணவுகள் காரணமாக நமக்கு பலவித அரிய நோய்களும் கூட ஏற்படுகிறது. இதனால் ஒவ்வொரு அறிகுறியையும் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டி இருக்கிறது. அப்படி தான் பாலியல் உறவில் சட்டென ஆசை குறைவது அல்லது அதிகரிப்பது என்பது ஒரு மோசமான நோய் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம் என்கிறார்கள். இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் பெரும்பாலான சூழல்களில் பாலியல் வாழ்க்கை குறித்து பேசவே மாட்டோம். இருப்பினும், அது நமது உடல்நிலை மற்றும் மனநிலையை நேரடியாகவும் மறைமுகமாகவும் பல வழிகளில் பாதிக்கிறது. இதனால் பாலியல் வாழ்க்கையில் நடக்கும் சின்ன சின்ன மாற்றங்களையும் நாம் கவனித்தாக வேண்டும்.

Brain Tumour India

அந்த விஷயம்

பிரைன் டூயூமர் எனப்படும் மூளைக் கட்டி மிக சிக்கலான ஒரு பாதிப்பு என்பது அனைவருக்கும் தெரியும். தலைவலி, வலிப்பு, பார்வை மங்குதல், பேசுவதில் சிரமம் ஆகியவை தான் இதற்கான அறிகுறி என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், பாலியல் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களும் கூட இதற்கு தொடர்பாக இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்!

பாலியல் ஆசை, உணர்ச்சி, ஹார்மோன் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதில் மூளைக்கு முக்கிய பங்கு இருக்கிறது. எனவே மூளையின் குறிப்பிட்ட சில பகுதிகளில் கட்டி உருவானால், அது பாலியல் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடுமாம். அதேநேரம் பாலியல் பிரச்சனைகள் மட்டுமே இருப்பதால் ஒருவருக்கு மூளைக் கட்டி என்று அர்த்தமல்ல. அதற்கு மன அழுத்தம், தூக்கமின்மை, பதற்றம், மது பழக்கம் என பல காரணங்கள் இருக்கலாம். இருப்பினும், பாலியல் ஆசைகள் குறைவதோடு வேறு சில அறிகுறிகளும் சேர்ந்து இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகும்!

பாலியல் ஆசை

பாலியல் ஆசை என்பது ஹார்மோன்கள், நரம்பு சிக்னல்கள் மற்றும் ரத்த ஓட்டம் என அனைத்தும் சேர்ந்தவை! இதை மூளை கட்டுப்படுத்தும் நிலையில், அங்கு சில குறிப்பிட்ட பகுதிகளில் கட்டி உருவானால், பாலியல் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படலாம். குறிப்பாக காரணமே இல்லாமல் திடீரென பாலியல் ஆசை குறையலாம். குறிப்பாக முக்கியமான ஹார்மோன் சுரப்பியான பிட்யூட்டரி சுரப்பி பாதிக்கப்பட்டால், ஹார்மோன் உற்பத்தி பாதிக்கப்படலாம். இதுதான் ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன் மற்றும் பெண்களில் ஈஸ்ட்ரஜன் ஹார்மோன்களை கட்டுப்படுத்துகிறது.

இந்த ஹார்மோன் குறையும்போது பாலியல் ஆசை குறையும்.. சோர்வு அதிகரிக்கும்! பலர் இதை மன அழுத்தம், வயதாவதால் ஏற்படும் மாற்றம் என கடந்து சென்றுவிடுகிறார்கள். ஆனால், பிட்யூட்டரி உள்ளிட்ட மூளையில் ஏற்படும் சில பிரச்சினைகள் கூட ஹார்மோன் சமநிலையை பாதித்து, ஆண்மைக் குறைவை ஏற்படுத்தக்கூடும். சிலருக்கு இத்தோடு தலைவலி சோர்வும் கூட காணப்படலாம்.

அறிகுறிகள்

அதேநேரம் பாலியல் ஆசை குறைவதால் மட்டும் மூளை கட்டி என நினைக்க தேவையில்லை. அத்தோடு தொடர்ந்து அதிகரிக்கும் தலைவலி, பார்வை குறைபாடு, வாந்தி அல்லது குமட்டல், வலிப்பு, நினைவாற்றல் குறைபாடு, சோர்வு ஆகியவையும் சேர்ந்தால் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை, கருத்தரிப்புத் திறன் குறைதல் இருந்தாலும் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்!

இன்னும் சில வகை மூளை கட்டிக்கு பாலியல் ஆசை காரணமே இல்லாமல் அதிகரிக்கும். மூளையின் நடத்தை கட்டுப்படுத்தும் பகுதிகள் பாதிக்கப்பட்டால்.. அதிகப்படியான பாலியல் எண்ணங்கள் வரும். எனவே, அதையும் நாம் கவனிக்க வேண்டும்.

கவனிக்க வேண்டியது

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் பாலியல் ஆசை திடீரென அதிகரிப்பது அல்லது குறைவது போன்ற எந்தவொரு மாற்றம் ஏற்பட்டாலும் நாம் கவனிக்க வேண்டும். அவை அனைத்தும் மூளைக்கட்டியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதேநேரம் அத்தோடு மேலே இருக்கும் அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகுவதே சிறந்தது.!

இது சாதாரண செய்தி மட்டுமே. இதை நிச்சயம் மருத்துவ ஆலோசனையாக கருதக்கூடாது. உங்களுக்கு ஏதேனும் உடல்நிலை அல்லது மனநிலை பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக அருகே உள்ள மருத்துவரை அணுக வேண்டும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+