15 நாளா ஒரு துளி உணவு இல்லை.. 8 கிலோ எடை குறைந்த சோனம் வாங்சுக்! உடல்நிலை ரொம்ப மோசம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைநகர் டெல்லியில் கல்வி துறையில் நடக்கும் முறைகேடுகளுக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நடத்தும் போராட்டத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலரான சோனம் வாங்சுக் மேற்கொண்டு வரும் காலவரையற்ற உண்ணாவிரதம் இன்று 15வது நாளை எட்டியுள்ளது. அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவரது ரத்த அழுத்தம் குறையும் நிலையில், அவரது எடையும் 15 நாட்களில் கணிசமாக குறைந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

கல்வி துறையில் குறிப்பாக நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாக கரப்பான் பூச்சி கட்சி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. நாட்டில் பல பகுதிகளில் போராட்டங்களை நடத்திய கரப்பான் பூச்சி கட்சி பிறகு டெல்லி ஜன்தர் மந்தரில் போராட்டத்தை தொடங்கியது. அந்த போராட்டம் இப்போது 23வது நாளை எட்டியது.

Sonam Wangchuk Health CJP protest

கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்

இந்த முறைகேடுகளுக்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் தேர்வு முறைகேடுகளால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இந்த அமைப்பு வலியுறுத்தி வருகிறது.. மேலும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்கும் நிலையில், அமைதி பேரணியை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

உடல்நிலை மோசம்

ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலரான சோனம் வாங்சுக்கும் இணைந்தார். அவர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கியுள்ளார். அவரது உண்ணாவிரத போராட்டம் இன்று 15வது நாளை எட்டியுள்ளது. அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "வாங்சுக்கின் ரத்த அழுத்தம் 104/66 mm Hgஆக குறைந்துள்ளது. அவர் ஜூன் 28 முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை அவரது உடல் எடை 7.8 கிலோ குறைந்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைவிட மாட்டேன்

இந்தளவுக்கு உடல்நிலை மோசமடைந்திருந்தாலும், போராட்டத்தைக் கைவிடும் எண்ணத்தில் வாங்சுக் இல்லை. தனது போராட்டம் தொடரும் என சொல்லியுள்ள வாங்சுக், பொதுமக்களும் இந்த இயக்கத்தில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், "என்னை மகாத்மா காந்தியுடன் ஒப்பிடவோ அல்லது ஹீரோவாக சித்தரிக்கவோ வேண்டாம். தயவுசெய்து மற்றவர்களிடம் ஹீரோக்களை தேடாதீர்கள். உங்கள் வாழ்க்கையின் ஹீரோவாக நீங்களே இருங்கள். ஒரு குடிமகனாக உங்களுக்கான பொறுப்புகளை நிறைவேற்றுங்கள்.

நான் ஒரு சாதாரண குடிமகன் மட்டுமே. நான் குடிமகனாக எனது கடமையை நிறைவேற்ற முயல்கிறேன். ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி நடைப்பயணம் செல்கிறோம். நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் இந்த விவகாரத்தை எடுத்து செல்ல வேண்டும்" என்றார்.

மாணவர்கள் உடல்நிலை

வாங்சுக் உடன் அகில இந்திய மாணவர் சங்க அமைப்பினரும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நேஹா, ஆமீன், தீபக் மற்றும் மனீஷ் ஆகியோரின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. அவர்களின் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து வருவதுடன், தொடர்ந்து எடை இழப்பு ஏற்பட்டுவருவதாகவும் அமைப்பு கூறியுள்ளது.

கரப்பான் பூச்சி கட்சி தனது போராட்டத்தை ஜூன் 20ஆம் தேதி தொடங்கியது. அதில் ஜூன் 28ஆம் தேதி சோனம் வாங்சுக் இணைந்தார். அதன்பிறகு அவர் தொடர்ந்து காலவரையற்ற உண்ணாவிரதத்தில் இருந்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+