மனைவியை டைவர்ஸ் செய்ய நினைத்தேன்! அதற்கு பிறகு நடந்த விஷயம்! கவின் உடன் ஏற்பட்ட பிரிவு! பிரதீப் ஓபன்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த பிரதீப் ஆண்டனி சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவியை பிரிய போவதாக ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அந்த பதிவு அந்த சமயத்தில் பெரிதாக பேசப்பட்டது. மகன் பிறந்த பிறகு இவர் இப்படி பதிவு வெளியிட்டதும் பலரும் அவருக்கு அட்வைஸ் செய்து செய்து வந்தனர். இதுகுறித்து சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். மேலும் அந்த பேட்டியில் தன்னுடைய நண்பன் கவினை எதற்காக பிரிந்தேன் என்றும் பேசி இருக்கிறார்.
ரெட் கார்டு சர்ச்சை
பிக் பாஸ் வரலாற்றிலேயே 7வது சீசனில் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்தது தான் பெரிதாக பேசப்பட்டது. அந்த சமூகத்தில் திடீரென கமல்ஹாசன் அவருக்கு ரெட் கார்டு தூக்கி காட்டியதும் சோசியல் மீடியாவே கொந்தளிக்க தொடங்கிவிட்டது. பிரதீப் பாவம் என்று அவருக்கு அனுதாபம் வர தொடங்கி விட்டது. அதற்கு முன்பு பிரதீப்பின்செயல்பாடுகள் குறித்து விமர்சித்த பலரும் கூட பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுத்த பிறகு அவருக்கு சப்போர்ட் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

அந்த சீசனுக்கு பிறகு கமல்ஹாசனும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு டாட்டா காட்டி விட்டார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிரதீப் ஆண்டனி அவ்வபோது சோசியல் மீடியாவில் ஏதாவது குதர்க்கமான போஸ்ட் போட்டுக் கொண்டிருந்தார். அதற்கு பிறகு அவருக்கு திருமணமும் முடிந்துவிட்டது. ஒரு மகனும் பிறந்திருந்தார். அந்த சமயத்தில்தான் அவர் திடீரென தனது மனைவியை பிரிவதாக ஒரு போஸ்ட் போட்டார்.
பிரதீப் ஆண்டனி பதிவு
பிரதீப் ஆண்டனிக்கு என்ன ஆச்சு? எதனால் இப்படி முடிவு எடுத்து விட்டார்? என்று பலரும் கேட்டு வந்தனர். அதற்குப் பிறகு சில வாரங்களிலேயே மீண்டும் தன்னுடைய குழந்தையோடு அவர் போஸ்ட் போட தொடங்கி விட்டார். முதலில் தன்னுடைய குழந்தையை பார்க்க முடியவில்லை, தன்னுடைய மனைவி தன்னை விட்டு பிரிந்து போய்விட்டார். தான் திருமணத்திற்கு பிறகு அடிமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றெல்லாம் அந்த பதிவில் சொல்லி இருந்தார். ஆனால் அதற்கு பிறகு அவருடைய மகனுடன் அவர் போஸ்ட் போட தொடங்கியதும், சரி குடும்ப பிரச்சினை சரியாகிவிட்டது என்று எல்லோரும் நினைத்திருந்தனர்.
விவாகரத்து போஸ்ட்
இந்த நிலையில் அவர் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நடிக்கும் வெப் சீரிஸின் ப்ரோமோஷனகாக ஒரு பேட்டியில் பேசும்போது, அவர் வெளியிட்ட பதிவுகள் குறித்து விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில், " நான் பொதுவாக எமோஷனலை வெளிப்படுத்தி போஸ்ட் போடுவது இயல்புதான். அந்த டைம்ல பைனான்சியல் பிரச்சனை இருந்தது. அப்போ என் மனைவி என் கூட நிற்கல என்ற கோவத்துல அந்த போஸ்ட் போட்டுட்டுடேன். அது பெருசா ஆயிடுச்சு, இப்போ எல்லாம் சால்வ் ஆகிடுச்சு. பிரச்சனை எதுவும் இல்லை.
ஆனால் வேலை காரணத்துனால நாங்க இப்போ தனித்தனியாக இருக்கிறோம். நான் பிரிஞ்சிடலாம் என்று தான் நினைச்சேன். ஆனால் மனைவி ரொம்ப லவ் பண்ணுறா, அவள் என்னை விட தயாராக இல்லை. அதனால் தான் எங்களால் மீண்டும் சேர முடிந்தது" என்று பிரதீப் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். மேலும் அதே பேட்டியில் நடிகர் கவின் நட்பு பற்றியும் பேசியிருந்தார், "நாங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். அதனால்தான் பிக் பாஸ் வீட்டிற்குள் அவன் இருக்கும்போது கூட நான் அவனை போய் அடித்தேன். ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு பல மாற்றம் வந்திருக்கிறது.
கவின் உடன் பிரிவு
எனக்கே கூட பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு யாரையும் நம்ப முடியவே இல்லை. யார் என்கிட்ட பேசினாலும் கூட இவங்க எதுக்காக என்கிட்ட பேசுறாங்க? என்று சந்தேகப்பட தோன்றியது. அதேபோல கவினுக்கும் இருந்திருக்கலாம். சில பர்சனல் விஷயங்களால் தான் நாங்க இப்போ முன்பு மாதிரி பேசுறது இல்ல. அவன் அவனுடைய வேலையை பார்க்கிறான். நான் என்னுடைய வேலையை பார்க்கிறேன், அவ்வளவுதான்" என்றும் சொல்லியிருக்கிறார்.
இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது லாஸ்லியாவுடன் நெருங்கி பழகி வந்தார். அந்த சமயத்தில் ஃபேமிலி ரவுண்டில் கவினுக்காக உள்ளே போன பிரதீப் கவினை ஓங்கி அடித்திருந்தார். அது அப்போது பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் இப்போது அந்த நட்பு பழைய மாதிரி இல்லை என்று பிரதீப் பேசியது விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.



Click it and Unblock the Notifications
