கட்டைப்பையுடன் நாகை தமிழ்ச்செல்வன்.. பையை அவிழ்த்த நொடி ஆடிப்போன கலெக்டர் ஆபீஸ்! உள்ளே இருந்தது என்ன
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஒரு கட்டைப்பையுடன் வந்த தமிழ்ச்செல்வன், திடீரென அந்தப் பையை அவிழ்த்து தரையில் கொட்டினார். இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்படி அந்த பைக்குள் என்னதான் இருந்தது? எதற்காக இத்தனை பெரிய போராட்டத்தில் இறங்கினார் இந்த மாற்றுத்திறனாளி? யார் இவர்?
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் வெள்ளப்பள்ளம் வாணவன்மகாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மனைவி பெயரில் நிலத்துக்கான பட்டா இருந்துள்ளது. இந்த நிலத்தை அதே ஊரைச் சேர்ந்த ஒருவர் ஆக்கிரமித்து, தனது பெயருக்கு பட்டாவையும் மாற்றிக் கொண்டதாக தமிழ்ச்செல்வன் புகார் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம் தமிழ்ச்செல்வன்
இதையடுத்து தனது மனைவியின் நிலத்தை மீட்டுத் தருமாறு கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என பலரிடமும் மனு கொடுத்துள்ளார். ஆனால், 8 ஆண்டுகளாகியும் , இவரது புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.,.
இதனால் மனம் நொந்து போன தமிழ்ச்செல்வன், இன்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்தார்.. அப்போது கையில் ஒரு கட்டைப்பையை கொண்டு வந்திருந்தார்.. கடந்த 8 ஆண்டுகளாக கொடுத்த மனுக்கள் அனைத்தையும் அந்த கட்டைப் பையில் சுமந்து வந்தார். பிறகு, அந்த மனுக்களை ஆட்சியர் அலுவலகம் முன்பு கொட்டி தனது வேதனையை வெளிப்படுத்தினார்.
பட்டா மாறுதல் எப்போது
"என் மனைவி பெயரில் உள்ள பட்டா இடத்தை ஆக்கிரமித்து தனி நபர் ஒருவர் பட்டா மாற்றி விட்டார்.,. இது குறித்து மனு கொடுத்தேன்.. ஆனால் அதிகாரிகள் அந்த நபருக்கு சாதகமாக செய்யல்படுகிறார்கள்.. மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்ததால், "எங்களை மீறி கலெக்டரிடம் மனு எப்படி கொடுத்தாய்" என விஏஓ முதல் வட்டாட்சியர் வரை என்னை அலைக்கழிக்கிறார்கள்..
நாகை கலெக்டரிடம் கண்ணீர் கோரிக்கை
என்னுடைய பட்டா இடத்தை மீட்டுத்தர வேண்டும்.. இதுவரை இந்த மாவட்டத்துக்கு வந்த 3 கலெக்டரிடமும் மனு கொடுத்து விட்டேன். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.. என்னை அதிகாரிகள் இப்படி அடிக்கடி அலைக்கழித்து சாகடிப்பதைவிட, ஒரேடியாக கருணை கொலை செய்து விடுங்கள்.. இந்த கோரிக்கையைதான், புதிய மனுவாக மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமாரிடம் வழங்கியிருக்கிறேன்" என்று கண்ணீர் வடித்து கூறுகிறார்.
தனது நிலத்தை மீட்டுத் தரக் கோரி 8 ஆண்டுகளாக மனு கொடுத்து வந்த மாற்றுத்திறனாளி ஒருவர், கடைசியில் கருணைக் கொலை செய்யக் கோரி மனு கொடுத்த சம்பவம் நாகப்பட்டினத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Click it and Unblock the Notifications
