கொளத்தூர் எம்எல்ஏ விஎஸ் பாபு உடல்நிலை எப்படி இருக்கு? தகவலை சொல்லுங்க.. நீதிமன்றத்தில் வழக்கு!
சென்னை: தவெக எம்எல்ஏ விஎஸ் பாபுவின் உடல்நலம் குறித்து சட்டப்பூர்வ தகவலை வெளியிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட செம்பியத்தை சேர்ந்த தேவராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில் விஎஸ் பாபு உடல்நிலை குறித்து அலுவல் ரீதியான தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ விஎஸ் பாபு சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை தரப்பில் எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை. செப்டம்பர் 9ஆம் தேதி தவெக எம்எல்ஏ விஎஸ் பாபு மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார்.

இதன்பின் செப்டம்பர் 22ஆம் தேதி விஎஸ் பாபு உடல்நிலை தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்பின் விஎஸ் பாபு உடல்நிலை குறித்து எந்த அப்டேட்டும் வெளியிடப்படவில்லை. இதனால் விஎஸ் பாபு குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. விஎஸ் பாபு டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாக வதந்தி பரவியது. ஆனால் அதனை அமைச்சர் அருண்ராஜ் மறுத்தார்.
இந்த நிலையில் விஎஸ் பாபுவின் உடல்நலம் குறித்து சட்டப்பூர்வ தகவலை வெளியிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கொளத்தூர் தொகுதிக்கு உட்பட செம்பியத்தைச் சேர்ந்த தேவரஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைஏ விஎஸ் பாபு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கொளத்தூர் எம்எல்ஏ விஎஸ் பாபு உடல்நிலை குறித்து அலுவல் ரீதியான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. தனிப்பட்ட உரிமை, கண்ணியம், தனி நபரின் ரகசிய மருத்துவ ஆவணங்கள் ஆகியவற்றை வெளியிடும்படி கேட்கவில்லை. சட்டப்படி அனுமதிக்கப்பட்ட தகவல்களை வெளுயிடக் கோரி நவம்பர் 5 மற்றும் நவம்பர் 12 ஆகிய தேதிகளில் அரசுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் சட்டப்படி வெளியிடக் கூடிய தகவல்களை வெளியிட உத்தரவிட வேண்டும். தொகுதி மக்களின் குறைகள், கோரிக்கைகள் இடையூறின்றி கவனிக்கப்படுவதை உறுதி செய்ய நிர்வாக ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் வெளி வரக் கூடும் என்று பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications
