லட்சக்கணக்கில் துலாம் ராசிக்கு கொட்டும் பணம்.. புதிய வீடு, புதிய வாகனம்.. வாழ்க்கையே மாறப்போகுது

Subscribe to Oneindia Tamil

கார்த்திகை மாத பலன்: ஐப்பசி மாதம் நிறைவடைந்து கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. கார்த்திகை மாதத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஐப்பசி மாதம் நிறைவடைந்து இன்று கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. சுக்கிரன், சூரியன், செவ்வாய் போன்ற முக்கிய கிரகங்கள் ஐப்பசியில் நீச்ச நிலைமைகளில் இருந்தன. இதனால், சில ராசிகள் பாதிப்புகளைச் சந்தித்து வந்திருப்பார்கள். ஐப்பசி மாதம் யார் யாருக்கு பாதிப்பு கொடுத்ததோ, பணவரவு கிடைக்காத நிலைமையில் இருந்ததோ அந்த நிலைமை எல்லாம் இந்த கார்த்திகை மாதத்தில் மாறும். கார்த்திகை மாதத்தில் குருமங்கள யோகம், கேள யோகம் உருவாகிறது. அந்த வகையில், துலாம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

karthigai-matha-rasi-palan-2026-what-kind-of-benefits-will-thulam-rasi-people-get

துலாம் ராசி பலன்

துலாம் ராசியினருக்கு அற்புதமான மாதமாக இந்த மாதம் இருக்கும். நிறைய நன்மைகள் ஏற்படக்கூடிய காலகட்டம். 11 ஆம் இடத்தில் செவ்வாய், குரு இருக்கின்றனர். 2, 11க்கு உரியவர்கள் பரிவர்த்தனை அடைவதால் இந்த மாதம் முழுவதும் பணம் சம்பாதிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். லட்சக் கணக்கில், கோடிக் கணக்கில் சம்பாதிக்கும் யோகம் உண்டு. தங்கம் கைகொடுக்கக்கூடிய மாதமாக இருக்கும். உழைத்த உழைப்பிற்கு கூலி அதிகமாகக் கிடைக்கும்.

புதிய வேலை

கெளரவம் ஏற்படும். 2, 11 தொடர்புகள், செவ்வாய், சூரியன் பரிவர்த்தனை என்பது அட்டகாசமான அமைப்பு. புதிதாக எதைத் தொடங்கினாலும் வெற்றி பெறக்கூடிய யோகம் உண்டாகும். வேலை போனவர்களுக்கு புதிய வேலைகள் கிடைக்கும். தொழில் நன்றாக கைகொடுக்கும். வெற்றிகள் கிடைக்கும். போட்டியாளர்கள் ஒழியக்கூடிய தன்மை ஏற்படும்.

வீடு, வாகனம் வாங்கும் யோகம்

பணம் சம்பாதிப்பதில் புதிய திருப்புமுனை ஏற்படும். குடும்பத்தில் இருந்து வந்த மன அமைதியற்ற தன்மை நீங்கும். சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பிள்ளைகள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருந்த தொல்லைகள் நீங்கும். 5 ஆம் பாவத்தை குரு பார்ப்பதாலும், டிசம்பர் 5 ஆம் தேதியில் இருந்து 5 ஆம் வீட்டில் இருந்து ராகு விலகுவதால் நல்லவைகள் நடக்கும் காலகட்டமாக இருக்கும்.

லாபம் அதிகரிக்கும்

10 ஆம் இடத்தில் கேது இருப்பது உலோகம், இரும்பு, கிரஷர், ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தொழிலைச் செய்பவர்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். நல்ல மாற்றங்களும், சம்பாதிக்கக்கூடிய மாதமாகவும் உங்களுக்கு அமையும். லாபம் அபரிமிதமாகக் கிடைக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டம்.

முன்னேற்றம்

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்துக் காத்திருந்த வேலைகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறக்கூடிய நல்ல காலகட்டம். லாபத்தையும், பணம் சம்பாதிக்கக்கூடிய யோகத்தையும் தரக்கூடிய மாதமாக இந்த கார்த்திகை மாதம் உங்களுக்கு அமையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+