மழை காலங்களில் வெங்காயம் பூண்டு விலை உயர்வது இயல்பு.. அமைச்சர் வெங்கட்ரமணன் அலட்சியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக ஆட்சியமைத்து 6 மாதங்களாகிறது. கிட்டத்தட்ட ஹனிமூன் பீரியட் முடிந்துவிட்டது. மக்களின் அத்தியாவசிய பிரச்சனைகளுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு, தவெக நிர்வாகிகளின் அட்ராசிட்டி ஆகியவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். அரிசியை தொடர்ந்து சின்ன வெங்காயம், வெள்ளைப்பூண்டு உள்ளிட்ட காய்கறி விலையும் அதிகரித்துள்ளது. மழை காலங்களில் இந்த விலை உயர்வு சாதாரணமானது என்று அமைச்சர் வெங்கட்ரமணன் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் விலை வாசி உயர்வு விண்ணை முட்டி கொண்டிருக்கிறது. அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களில் தொடங்கி, தொழில்துறையினர் மூலப்பொருட்கள் விலை அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தக்காளி, சின்ன வெங்காயம் கிலோ ரூ.150 முதல் 220க்கும், வெள்ளைப்பூண்டு கிலோ ரூ.230 முதல் 300க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

small-onion-garlic-price-rise-in-rain-session-is-norma-lthing-said-venkatramanan

விலைவாசி உயர்வு

அமைச்சர் வெங்கட்ரமணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனாரின் 90வது நினைவு நாள். இதை முன்னிட்டு அவரின் நினைவு மணி மண்டபத்தில் மரியாதை செலுத்தியுள்ளோம். எல்லா குழந்தைகளின் மனதிலும் பதிந்தவர். சுதேசி நீராவி கப்பல் நிறுவனத்தை ஆங்கிலேயர்களை எதிர்த்து உருவாக்கியவர். பல்வேறு காலகட்டங்களில் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டவர். தமிழர்கள் தைரியமானவர் என்பதை அந்த காலத்திலேயே நிறைவேற்றியவர்.

அவரின் உறவினர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துள்ளனர். அவர் வாழ்ந்த வீட்டை நினைவு சின்னமாக மாற்ற வேண்டுமென உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எல்லா மாவட்டங்களிலும் அத்தியாவசிய பொருட்கள் குறித்து ஆய்வு செய்கிறோம். துறை ரீதியான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. சின்ன வெங்காயம் வெள்ளைப்பூண்டு விலை குறைப்பதற்காக விரைந்து நடவடிக்கை எடுப்போம். அரிசி, நெல், பருப்பு ஆகியவற்றுக்கான நடவை அதிகரித்துள்ளோம்.

மழை காலங்களில் சாதாரணம்

வரும் நாட்களில் அதை கண்காணித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். மழை காலங்களில் தக்காளி, சின்ன வெங்காயம், வெள்ளைப்பூண்டு விலை 15 நாட்கள் அதிகமாக இருக்கும். பிறகு அது குறையும். எங்கு எல்லாம் விலைவாசி அதிகமாக இருக்கிறதோ அதை கண்காணிப்போம். தேவைப்படின் மற்ற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து மக்களுக்கு குறைந்த விலையில் கொடுப்போம். விலைவாச உயர்வை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கை எடுப்போம். இதன்மூலம் வரும் நாட்களில் படிப்படியாக விலை குறையும் என்றார். அமைச்சரின் கருத்து மக்கள், எதிர்க்கட்சிகளுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+