சோனியா விழாவில் விஜய்க்கு ரெட் கார்பெட்! கடுப்பான தலைகள்! மோடி அப்பாயிண்ட்மெண்ட் தரலையா? என்னாச்சு
சென்னை: சோனியாவின் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று விட்டு ஒரே நாளில் சென்னை திரும்பிவிட்டார் முதல்வர் விஜய். இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர்கள், காங்கிரஸ் மாநில தலைவர்கள் என வி.வி.ஐ.பி.க்கள் பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டிருந் தாலும், விஜய்க்குத் தான் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது.
விஜய் க்கு கொடுக்கப்பட்ட சிறப்பு வரவேற்பும் மரியாதையும் கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மல்லி கார்ஜுன கார்கேயிடமும், கே.சி.வேணுகோபாலிடமும், விஜய்க்கு கொடுக்கப் பட்ட வரவேற்பை குறித்து இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான உமர் அப்துல்லா , அகிலேஷ்யாதவ், சுப்ரியா சுலே ஆகியோர் கேட்டிருக்கிறா ர்கள். அதற்கு, ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்களை விஜய் தவிர்க்கிறார், அவர்களின் பார்வையில்படாதவாறு சிறப்பு வழியில் அழைத் து செல்ல முடியுமா? என விஜய் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

விஜய்க்கு தரப்பட்ட முக்கியத்துவம்
இது பாதுகாப்பு சம்மந்தப்பட்டதால் நாங்களும் சம்மதித்து அதற்கேற்ப அவரை அழைத்து வந்தோம் என்று காங்கிரஸ் தலைவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும், விஜய்க்கு தரப்பட்ட முக்கியத்துவம் மற்ற தலைவர்களுக்கு இல்லை என்பதில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களிடத்தில் சற்று ஆதங்கம் வெளிப்பட்டது என்கிறார்கள் விழாவில் காலந்துகொண்ட தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள்.
சோனியாவிடம் நலம் விசாரித்தார் விஜய். பதிலுக்கு விஜய்யிடம் நலம் விசாரித்த சோனியா, உங்கள் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சில திட்டங்கள் சிறப்பாக இருப்பதாக என்னிடம் ராகுல் சொல்லியிருக்கிறார். உங்களுக்கு வாழ்த்துகள் என புகழ்ந்துரைக்க, மெல்லிய சிரிப்பை வெளிப்படுத்திய விஜய், விளிப்பு நிலை மக்களின் வாழ்வாதாரம் குறித்தும், மாநிலத்தின் கடன் சுமையை குறைப்பதிலும் அதிக கவனம் செலுத்துவதாகவும், பெண்களின் பாதுகாப்புக்கும் தொழில் முன்னேற்றத்திற்கு கூடுதல் கவனம் கொடுக்கப்படுகிறது என்று தெரிவித்ததாகவும் தவெக தரப்பில் விவரிக்கி றார்கள்.
கர்நாடக முதல்வர் சிவக்குமார் ஆலோசனை கேன்சல்?
விழாவில் கர்நாடக முதல்வர் சிவக்குமார் கலந்துகொண்டுள்ள சூழலில், மேகதாது அணை விவகாரத்தில் அவருடன் விஜய் ஆலோசிப்பார் என எதிர் பார்க்கப்பட்டது.
ஆனால், வெளிப்படையாக அப்படி எந்த சந்திப்பும் நடக்கவி ல்லை. ஆனால், தனது அருகில் அமர்ந்திருந்த ராகுல்காந்தியிடம் மேகதாது குறித்து சிவக்குமாரிடம் பேசவேண்டும் என விஜய் கேட்டுக் கொண்டதன் பேரில் விழா முடிந்ததும், மல்லிகார்ஜுன கார்கே, வேணுகோபால், சிவக் குமார் ஆகிய மூவரையும் அழைத்து விஜய்யிடம் பேசுமாறு அவர்களிடம் சொல்லியிருக்கிறார்.
அப்போது ராகுல்காந்தியின் முன்னிலையில், மேகதாது விவகாரத்தில் மத்திய அரசும் உச்சநீதிமன்றமும் சில முடிவுகளைச் சொல்லி யிருக்கிறது. அதன்படி, கர்நாடக அரசு நடந்துகொண்டாலே தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது. ஆனால், தேவையற்ற பேட்டிகள் கர்நாடக அரசிடமிருந்து திடீர்திடீரென்று வருவதால் தமிழகத்தில் நெகட்டிவ் விமர்சனங்கள் வருகி றது. இது தவிர்க்கப்பட்டால் ஹெல்த்தி பாலிட்டிக்ஸ் ஆக இருக்கும் என கேட்டுக்கொண்டுள்ளார் விஜய். அதை ஆமோதிக்கும் வகையில் கார்கேவும் ராகுலும் சிவக்குமாரிடம் வலியுறுத்தியு ள்ளனர்.
தனி விமானத்தில் டெல்லி சென்ற முதல்வர் விஜய்
இதற்கிடையே, தனி விமானத்தில் டெல்லி சென்ற, முதல்வர் விஜய், சோனியாவின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது நட்பு ரீதியானது என சொல்லப்படும் நிலையில், தமிழகத்தின் நலன் சார்ந்த கோரிக்கைகளை பிரதமர் மோடியை சந்தித்து பேச அரசு மற்றும் அரசியல் ரீதியாக காய்களை நகர்த்தவும் விஜய் தரப்பில் முயற்சி எடுக்கப்பட்டது. இதற்காக பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமீத்சா இருவரிடமும் அப்பாயி ண்ட் மெண்ட் தவெக அரசு சார்பில் கேட்கப்பட்டது.
16 மற்றும் 17-ந்தேதி ப்லிப்பைன்சில் இருக்கும் பிரதமர் மோடி, டெல்லி திரும்பியதும் தான் தமிழக முதல்வரின் அப்பாயிண்ட்மெண்ட் பற்றி விவாதி க்கப்படும் எனும் டெல்லி தரப்பில் சொல்லப்பட்டதால், டெல்லியில் 17-ந்தேதி வரை தங்கியிருந்து பிரதமரை சந்தித்துவிட்டு திரும்பலாம் என்கிற திட்டமும் விஜய் தரப்பில் இருந்தது. ஆனால், 16-ந்தேதி இரவு வரை, மோடி மற்றும் அமீத்சாவின் அப்பாயிண்ட்மெண்ட் உறுதி செய்யப்படாததாலும், அப்பாயி ண்ட்மெண்ட் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில்லாததாலும் டெல்லியில் காத்திருப்பதை தவிர்த்து விட்டு உடனடியாக சென்னை திரும்பினார் முதல்வர் விஜய் என்கிறார்கள் தமிழக உளவுத்துறையினர்.
- சிறப்பு நிருபர் எழில்



Click it and Unblock the Notifications
